Food Recipes: 5 நிமிடத்தில் செய்யக்கூடிய 2 சூப்பர் ரெசிபி.. சூடான சோறுடன் சாப்பிட ஜோராக இருக்கும்!
Dry garlic chutney: தினம் தினம் தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார், புளி குழம்பு என்று உங்களது வீட்டில் செய்து, சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அந்தவகையில், 5 நிமிடத்திற்கு செய்யக்கூடிய இரண்டு வகையான வித்தியாசமான தொக்குகளை பார்க்க போகிறோம். இதை நீங்கள் சட்னி, தொக்கு, ஊறுகாய் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி, இவையின் சுவையானது உங்களது விரலை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்.
மக்கள் உணவு பழக்கவழக்கங்களில் தினசரி என்ன வகையாக குழம்பு, சட்னி வைப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இவை, அனைத்தும் உணவுக்கு சுவையை மட்டும் தராமல், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன. தினம் தினம் தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார், புளி குழம்பு என்று உங்களது வீட்டில் செய்து, சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அந்தவகையில், 5 நிமிடத்திற்கு செய்யக்கூடிய இரண்டு வகையான வித்தியாசமான தொக்குகளை பார்க்க போகிறோம். இதை நீங்கள் சட்னி, தொக்கு, ஊறுகாய் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி, இவையின் சுவையானது உங்களது விரலை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். மேலும், இவற்றை சூடான சாதம், தோசை, இட்லி, சப்பாத்தில், இடியாப்பம் என அனைத்திலும் பயன்படுத்தி சுவைக்கலாம்.
ALSO READ: Food Recipes: தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? சூப்பர் ரெசிபி இதோ!
உலர் பூண்டு சட்னி:
உலர் பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- அரை கப் நறுக்கிய பூண்டு
- அரை கப் நறுக்கிய தேங்காய்
- ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய்
- ஒரு ஸ்பூன் வேர்க்கடலை
- ஒரு ஸ்பூன் சீரகம்
- ஒரு ஸ்பூன் கொத்தமல்லி
- அரை ஸ்பூன் வெந்தயம்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவைகேற்ப உப்பு
உலர் பூண்டு சட்னி செய்முறை:
- கேஸை ஆன் செய்து மிதமான சூட்டை வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும்.
- பாத்திரம் சூடானதும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கப் நறுக்கி எடுத்து வைத்திருக்கும் பூண்டை சேர்க்கவும். எண்ணெயுடன் கலந்து பூண்டு பொன்னிறம் ஆகவும் வரை நன்றாக வதக்கவும்.
- பூண்டு நன்றாக வதங்கியபின் அதில் ஒரு டீஸ்பூன் வேர்க்கடலையை போட்டு மீண்டும் நன்றாக வதக்கி கொள்ளவும்.
- வேர்க்கடலை பூண்டுடன் சிறிதளவு கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் போடவும். இந்த பொருட்கள் வதங்கும்போது உங்கள் ஒரு நல்ல வாசனை கிடைக்கும்.
- இதனுடன் அரை கப் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கியபின், இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு ஆற விடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் மேலே எடுத்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு முறை மிக்ஸியை ஓடவிட்டு, உங்களிடம் மாங்காய் துண்டுகள் இருந்தால் சின்ன மாங்காய் துண்டுகளை 4 முதல் 5 சேர்க்கவும். மீண்டும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தபின், அரைத்து எடுத்த பேஸ்டை அதில் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து ஆஃப் செய்தால், சுவையான உலர் பூண்டு சட்னி தயார்.
தக்காளி உளுந்து பச்சடி:
தக்காளி உளுந்து பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
- சிறிதளவு கடலை எண்ணெய்
- ஒரு கைப்பிடி அளவு வெள்ளை உளுந்து
- வர (காய்ந்த) மிளகாய் – 7 முதல் 8
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- மல்லி விதை – ஒரு ஸ்பூன்
- பெரிய தக்காளி – 4
- புளி – நெல்லிக்காய் அளவு
- உப்பு – தேவையான அளவு
தக்காளி உளுந்து பச்சடி செய்முறை:
- கேஸ் ஆன் செய்து ஒரு கடாயை வைத்து கொள்ளவும். கடாய் சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- எண்ணெய் நன்றாக சூடானதும் உங்கள் தேவை என்றால் சிறிதளவு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கொள்ளுங்கள். இது நல்ல மணம் தரும்.
- தொடர்ந்து, ஒரு கைப்பிடி அளவிலான வெள்ளை உளுந்தை பாத்திரத்திரத்தில் போடுங்கள். அதை பொன்னிறம் ஆகும் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
- உளுந்து வதங்கியதும் 7 முதல் 8 என்ற எண்ணிக்கையில் பெரிய அளவிலான காய்ந்த மிளகாயை சேர்த்து கொள்ளுங்கள்.
- வர மிளகாயுடன் ஒரு கை மல்லி விதைகள், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக தொடர்ந்து வதக்கி கொள்ளுங்கள்.
- இவை அனைத்தும் நன்றாக வதங்கியபின், அதில் 4 பெரிய தக்காளியை வெட்டி போட்டு கொள்ளுங்கள். தக்காளியுடன் ஒரு நெல்லிக்காய் அளவிலான புளியை போடுங்கள்.
- சூட்டில் தக்காளி நன்றாக மசிந்து தண்ணீரை வெளியிட்டபின், தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
- இப்போது, இவற்றை ஒரு தட்டில் போட்டு காற்றில் நன்றாக ஆற வையுங்கள். அதன்பின், ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து எடுத்து கொண்டால் சுவையான தக்காளி உளுந்து பச்சடி ரெடி
மேலே, குறிப்பிடப்பட்டுள்ள உலர் பூண்டு சட்னி மற்றும் தக்காளி உளுந்து பச்சடி ரெசிபிகளை சூடான சாதத்துடன் போட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.