Monsoon Health Tips: மழைக்காலத்தில் இந்த 5 நோய்களால் அதிக ஆபத்து..! இவற்றை தடுப்பது எப்படி?

Health Tips: மழைக்காலத்தில் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் கணிசமாக அதிகரிக்க தொடங்கும். வைரஸினால் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்படும். அதேபோல், மழைக்காலத்தில் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம்.

Monsoon Health Tips: மழைக்காலத்தில் இந்த 5 நோய்களால் அதிக ஆபத்து..! இவற்றை தடுப்பது எப்படி?

காய்ச்சல் (Image: getty)

Updated On: 

18 Oct 2024 12:08 PM

பருவமழை இப்போது இந்தியா முழுவதும் பொழிந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதால், பல்வேறு வகையான நோய்கள், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் நம் வீட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களே அதிக பிரச்சனையை சந்திக்கின்றன. இதன் காரணமாக, நாம் ஆரோக்கியமாக இருக்க சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இந்தநிலையில், மழைக்காலத்தில் எந்தெந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது அவற்றை தடுப்பதற்கான வழிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Diwali 2024: தீபாவளி நாளில் இந்த விஷயத்தில் கவனம் தேவை.. இது உங்களுக்கு பிரச்சனையாக மாறலாம்..!

டெங்கு காய்ச்சல்:

மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் மக்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் ஏடிஸ் கொசுக்கள் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால், இந்த கொசுக்கள் பகல் நேரத்திலும் அதிகமாக கடிக்கும். அதிக காய்ச்சல், சளி, தலைவலி, உடல்வலி போன்றவை டெங்குவின் அறிகுறிகளாகும். டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை குறைத்து, நீரிழப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

டெங்கு கொசுக்கள் என்று அழைக்கப்படும் டெங்கு கொசுக்கள் தேங்கி நிற்கும் நல்ல தண்ணீரிலேயே அதிகமாக இனப்பெருக்கம் செய்யும். எனவே, நல்ல தண்ணீர் உள்ள குடங்களை மூடி வைப்பது நல்லது. மேலும், பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தண்ணீரையும், வீட்டிற்குள் இருக்கும் துணிகளை அவ்வபோது சுத்தம் செய்வது நல்லது.

மலேரியா:

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். மலேரியாவில் 5 வகைகள் உள்ளன. அதன்படி, பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம், பிளாஸ்மோடியம் விவெக்ஸ், பிளாஸ்மோடியம் ஓவல் மலேரியா, பிளாஸ்மோடியம் மலேரியா மற்றும் பிளாஸ்மோடியம் நோலெசி ஆகியவை அடங்கும்.

மலேரியா கொசு கடிக்கும்போது, ​​பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணி மனித இரத்தத்தில் கலக்கிறது. சில நேரங்களில் மலேரியா நோய்த்தொற்று மிகவும் தீவிரமானதாக மாறி, பாதிக்கப்பட்ட நபர் இறப்பை நோக்கியும் செல்லலாம். இதன் அறிகுறிகளில் குளிர், நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல், தலைவலி போன்றவை அடங்கும். கொசுக்கள் பெருகும் இடங்களைத் தவிர்க்க உங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.

சுவாச நோய்த்தொற்றுகள்:

மழைக்காலத்தில் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் கணிசமாக அதிகரிக்க தொடங்கும். வைரஸினால் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்படும். அதேபோல், மழைக்காலத்தில் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். இவற்றை பிரச்சனைகள் வராமல் தடுக்க, நெரிசலான இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. வெளியே எங்கு சென்றாலும், முகத்தில் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். வெளியே சென்று வந்தவுடன் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவுங்கள். வருடத்திற்கு ஒரு முறை காய்ச்சல் தடுப்பூசி போடுங்கள். இது நோய்த்தொற்றைக் குறைக்கும்.

லெப்டோஸ்பிரோசிஸ்:

லெப்டோஸ்பிரோசிஸ் என்பது பாக்டீரியாவால் பரவும் ஒரு வகை தொற்று நோயாகும். இது நீர் தேங்கும் இடத்தில் அழுக்கு நீராக மாற பாக்டீரியா உதவுகிறது. அதாவது, தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களால் அழுக்கு ஏற்படுகிறது. மேலும். இது பெரும்பாலும் எலிகள், அணில் அல்லது நாய்களின் மலத்தின் விளைவாக ஏற்படும். இந்த தொற்றினால் கடுமையான தலைவலி, வாந்தி, இரத்தப்போக்கு போக்கு, சிறுநீர் கழித்தல் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், இது மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். இந்த நோய் ஏற்படாமல் தடுக்க அழுக்கு நீரில் நடக்காமல் தவிர்க்கவும். ஒருவேளை அழுக்கு தண்ணீரில் நடந்தால், வீட்டிற்கு வந்தவுடன் சோப்பு மற்றும் தண்ணீரில் கால்களை நன்கு கழுவவும்.

ALSO READ:Diwali 2024: பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

இரைப்பை குடல்:

மழைக்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு வயிறு மற்றும் குடலில் தொற்று ஏற்படும். இந்த தொற்று அழுக்கு, சுகாதாரமற்ற, அசுத்தமான உணவு, தண்ணீர் மற்றும் ஈக்களால் ஏற்படலாம். மேலும், இது ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ போன்ற மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் வைரஸ்களாலும் இது ஏற்படலாம். இவற்றை தடுக்க, சாலையோர வண்டிகளில் விற்கப்படும் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும், கொதிக்க வைத்த பிறகுதான் தண்ணீர் குடித்தல் நல்லது, சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள், வீட்டை சுற்றியுள்ள பகுதியை தூய்மையாக வைப்பதன் மூலம், தொற்று நோய் அபாயத்தை குறைக்கலாம்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!