Health Tips: தொப்பை சர்ரென குறையும்.. இந்த 6 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க!

Fruits Benefits: பழங்கள் மட்டும்தான் நாம் சமைக்காமல் அப்படியே எடுத்துகொள்ளும் ஒரு சிறப்பான உணவு. ஒவ்வொரு பழங்களிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கும். அந்தவகையில் உடல் எடை குறைக்கக்கூடிய 6 பழங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

Health Tips: தொப்பை சர்ரென குறையும்.. இந்த 6 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க!

Image Credit source: Getty Images

Published: 

18 Jul 2024 16:21 PM

நீங்கள் அதிக உடல் எடையை கொண்டிருந்து உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் எடுத்துகொள்ள வேண்டியது பழங்களைதான். பழங்களில் அதிக நார்ச்சத்துகள் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்களை கொடுத்து இடுப்பில் அதிகம் உள்ள கொழுப்புகள் கரைப்பதுடன், இதய நோய் அபாயத்தில் இருந்தும் தடுக்கிறது. பழங்கள் மட்டும்தான் நாம் சமைக்காமல் அப்படியே எடுத்துகொள்ளும் ஒரு சிறப்பான உணவு. ஒவ்வொரு பழங்களிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கும். அந்தவகையில் உடல் எடை குறைக்கக்கூடிய 6 பழங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Children Care: குழந்தைகள் செல்போன் யூஸ் பண்ணுதா? உஷார்.. இவ்வளவு பிரச்னை தேடி வரும்!

அன்னாசிப்பழம்:

பீச், பார்க், கடைவீதிகள் என அனைத்து இடங்களில் எல்லாம் அன்னாசிப்பழம் வைத்துக்கொண்டு, ஒரு தள்ளுவண்டி கடை நிற்கும். இதை நாம் அனைவரும் சர்வசாதாரணமாக கடந்து செல்வோம். ஆனால், இந்த அன்னாசிப்பழம் உடல் எடையை குறைக்கக்கூடியது என்பது எத்தனை பேருக்கு தெரியும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக அன்னாசிப்பழம் இருக்கும். இதில், நார்ச்சத்து அதிகம் உள்ளதால், பசியை தூண்டாமல் புத்துணர்ச்சியுடன் உங்களை வைத்திருக்கும். அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி இருப்பதால் மெட்டாபாலிசம் என்று சொல்லக்கூடிய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன்மூலம், நம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை குறைக்க செய்கிறது.

ஆப்பிள்:

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவையில்லை என்று சொல்வார்கள். தினந்தோறும் ஆப்பிள் சாப்பிடுவதால் வயிற்று கொழுப்பைக் குறைத்து, உடலுக்கு சத்துகளை தருகிறது. ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக பெக்டின் என்ற ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது.பசியின்மையின்மை கொடுத்து, நீங்கள் அதிக கலோரிகளை எடுத்துகொள்வதை தடுக்கிறது. ஆப்பிள்களில் பாலிபினால்கள் இருப்பதால், கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, எடை பருமனாவதை தடுக்கிறது.

வாழைப்பழங்கள்:

வாழைப்பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது உண்மைதான். ஆனால், இதில் கொழுப்புகளை கரைக்கவும் உதவி செய்வதுடன், உடலுக்கு புரத சத்துகளையும் தருகிறது. வாழைப்பழத்தில் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை எதிர்க்கும் ஒரு வகை கார்போஹைட்ரேட் வெளிப்படுத்தி, கரையக்கூடிய நார்ச்சத்து போல் செயல்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.

ALSO READ: Bathroom Cleaning: பாத்ரூம் உப்புக்கரையை ஈசியா போக்கலாம்.. இதோ எளிதான சில வழிகள்!

ஆரஞ்சு பழம்:

ஆரஞ்சு பழமானது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டவை. இவையே எடை இழப்புக்கு சரியானவை. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி உங்கள் உடல் கொழுப்பை மிகவும் தீவிரமாக கரைக்க உதவுகிறது. மேலும், இது அதிகபடியான நீர்ச்சத்துகளை கொடுத்து உங்களை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்துகொள்ள உதவுகிறது.

தர்ப்பூசணி:

தர்பூசணி மற்றும் பாகற்காய் உள்ளிட்ட முலாம்பழங்கள், அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட காரணமாக நம்பமுடியாத அளவிற்கு நீர்சத்துகளை தருகின்ற. இது கொழுப்புகளை கரைப்பது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துகளை தருவதாக ஆய்வுகள் பல கூறுகின்றன. மற்றொரு ஆய்வில் தர்பூசணியில் உள்ள லைகோபீன் உயர் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது என்றும் தெரியவந்துள்ளது. தர்பூசணி உடல் எடையைக் குறைப்பதோடு, அதிக எடை கொண்ட நபர்களின் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டது. இதில், அமினோ அமிலம் சிட்ருலின் உள்ளதால் கொழுப்பு செல்களில் கொழுப்பு திரட்சியைக் குறைக்க உதவுகிறது.

எலுமிச்சை:

எலுமிச்சையின் குணம் நச்சுத்தன்மையை அளிக்க கூடியவை. இது செரிமானத்தை மேம்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது. இதில் அதிகபடியான வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தில் நிறைந்துள்ளன, அவை உடலின் இயற்கையான நச்சு செயல்முறைகளை அளிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பாலிபினால்கள் எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு திரட்சியை அடக்கும் என்றே கூறலாம்.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ