உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்வதற்கு இதுதான் காரணம்! - Tamil News | | TV9 Tamil

உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்வதற்கு இதுதான் காரணம்!

Published: 

16 May 2024 23:06 PM

6 reasons child lies to thier parents: குழந்தைகள் பெற்றோரிடம் பொய் சொல்வதற்கான காரணங்கள். ஏன் பொய் சொல்கிறார்கள், எதற்காக பொய் சொல்கிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதோ இதுதான் அவர்கள் பொய்சொல்ல காரணம்.

உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்வதற்கு இதுதான் காரணம்!

மாதிரி படம்

Follow Us On

பொதுவாகவே குழந்தைகளை நன்கு கவனித்துப் பார்த்தால் தெரியும், பேச தொடங்கிய சில மாதங்களிலேயே எல்லோரையும் நன்கு கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நமக்கே ஒருசில சமயங்களில் ஆச்சர்யமாய் இருக்கும், எப்படி இவ்வளவு வார்த்தைகளை பேசுகிறார்கள், எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள் என. ஆனால் குழந்தைகள் மிக நுண்ணியமாக கவனிக்கக் கூடியவர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ அதே சமயத்தில் சில பொய்களும் இருக்கத்தான் செய்யும். அது பெற்றோர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஏன் பொய் சொல்கிறார்கள், எதற்காக பொய் சொல்கிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதோ இதுதான் அவர்கள் பொய்சொல்ல காரணம்.

பனிஸ்மென்ட்டுக்கு பயப்படுதல்:

பெரும்பாலான குழந்தைகள் உண்மையை சொல்லவந்து திக்கித் திணறி பொய்யை உளறி வைப்பார்கள். காரணம் எங்கே அடித்துவிடுவார்களோ, திட்டிவிடுவார்களோ, இல்லை எதாவது பனிஸ்மென்ட் கொடுத்துவிடுவார்களோ என்ற பயம். அதிலும் மூத்த உடன்பிறப்புகளும் தண்டித்துவிடுவார்களோ என்று பயப்படுபவர்களும் உண்டு.

நம்பிக்கைக்கு உரியவர்களாக இருங்கள்:

என்ன சொன்னாலும் நீங்கள் அவர்கள் பக்கத்தில் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுங்கள். அப்பொழுதுதான் உங்களை நம்பி அவர்கள் உண்மையைச் சொல்வார்கள்.

சங்கடப்படுதல்:

அவர்களுக்கு தகுந்த பதில் தெரியாதபோது, எங்கு நம்மை கேலி செய்வார்களோ என்று சங்கடப்பட்டு பொய்சொல்ல வாய்ப்புள்ளது.

குழந்தைகள் பார்வைக்கு பொய் தவறாக தெரியாதிருத்தல்:

குழந்தைகளுக்கு அதிகம் யோசிக்கத் தெரியாது, மனதில் பட்டதை அப்படியே செய்வார்கள். இதனாலேயே நிறையபேர் பெரியவர்கள் ஆனதும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று புலம்புவார்கள். ஆனால் இது குழந்தை பருவத்தில் எவ்வளவு பிரச்சனை தெரியுமா? குழந்தைகளுக்கு சிறுவயதில் பொய் சொல்வது பெரிய விசயமாக தெரியாது. எனவே பொய் சொல்ல பழகிவிடுவார்கள். ஆனால் அதுவே அதிகம் பொய்சொல்ல பழகிவிடும்.

Also read: பழங்களின் தோல்களை இனி வீணாக்காதீர்கள், டீ போட்டுக் குடிக்கலாம்!

குழந்தைகளை புரியாதிருத்தல்:

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதாக கேட்காமலேயே, அவர்களை அடித்தல்,திட்டுதல் போன்ற செயல்கள், அவர்களை அதிகம் பொய் சொல்லவைக்கிறது.

புண்படுத்த விரும்பாதிருத்தல்:

எங்கு அவர்கள் செய்த தவறு உங்களை மிகுந்த வேதனைக்குத் தள்ளிவிடுமோ என்று பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தடுக்கும் விதமாக விசயத்தை தெளிவாகக் கேட்டு, உடனடியாக ரியாக்ட் செய்யாமல் அவர்களுக்கு உருதுணையாக இருங்கள். இது அவர்களை மேலும் மேலும் பொய் சொல்லாமல் தடுக்கும்.

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version