Pepper Benefits: எடை குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. சிறந்த பலனை தரும் மிளகு..! - Tamil News | 6 Surprising Health Benefits of Pepper; health tips in tamil | TV9 Tamil

Pepper Benefits: எடை குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. சிறந்த பலனை தரும் மிளகு..!

Published: 

04 Oct 2024 19:25 PM

Black Pepper: குளிர்காலத்தில் மிளகு கஷாயம் செய்து குடிப்பதன் மூலம், உங்களுக்கு ஏற்படும் சளி, இருமல், பைபரின் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது மட்டுமின்றி, கருப்பு மிளகு சாப்பிட்டால் தொண்டை வலியில் இருந்து நிவாரம் தரும். உடல் எடையை குறைக்க மக்கள் அதிக அளவில் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். உடல் பருமன் அதிகரிப்பதால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை குறைக்க கருப்பு மிளகை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

1 / 6மாறிவரும்

மாறிவரும் காலநிலையால் பெரும்பாலான மக்கள் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளால அவதிப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் நம்மை நாமே பாதுகாத்து கொள்வது மிக மிக முக்கியம். அந்தவகையில், கருப்பு மிளகு நமக்கு மருந்தாக செயல்படும்.

2 / 6

கருப்பு மிளகில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்ஜி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வாயு எதிர்ப்பு, டையூரிக் மற்றும் செரிமான பண்புகள் உள்ளன. இது உடல் எடையை குறைக்கவும், செரிமான அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி செய்கிறது.

3 / 6

குளிர்காலத்தில் மிளகு கஷாயம் செய்து குடிப்பதன் மூலம், உங்களுக்கு ஏற்படும் சளி, இருமல், பைபரின் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது மட்டுமின்றி, கருப்பு மிளகு சாப்பிட்டால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் தரும்.

4 / 6

உடல் எடையை குறைக்க மக்கள் அதிக அளவில் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். உடல் பருமன் அதிகரிப்பதால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை குறைக்க கருப்பு மிளகை உணவில் சேர்த்து கொள்ளலாம். கருப்பு மிளகில் உள்ள பைப்பரின் மற்றும் ஆன்டி- ஒபிசிட்டி உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.

5 / 6

மழை காலத்தில் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தொல்லைகளை தரும். இத்தகைய சூழ்நிலையில், கருப்பு மிளகில் இருக்கும் பைபரின் வயிற்றில் செரிமான நொதிகளை தூண்டுகிறது. இது அந்த நபரின் செரிமான திறனை அதிகரிக்க உதவி செய்யும்.

6 / 6

மழை காலத்தில் பெரும்பாலான மக்கள் அடிக்கடி தசை மற்றும் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உணவில் கருப்பு மிளகை சேர்த்து கொள்வது நல்லது. மிளகானது மூட்டு வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. கருப்பு மிளகுகளில் இருக்கும் அழற்ஜி எதிர்ப்பு மற்றும் மூட்டுவலி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version