5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Papaya Seeds Benefits: உடல் பருமன் முதல் மலச்சிக்கல் வரை.. பல பிரச்சனைகளை தீர்க்கும் பப்பாளி விதைகள்..!

Papaya Seeds: பப்பாளி விதைகள் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், பப்பாளி விதைகலில் கணிசமான அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, பாலிஃபீனால்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள் உள்ளன.

Papaya Seeds Benefits: உடல் பருமன் முதல் மலச்சிக்கல் வரை.. பல பிரச்சனைகளை தீர்க்கும் பப்பாளி விதைகள்..!
பப்பாளி விதைகள் (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 27 Oct 2024 16:37 PM

எல்லா பழங்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை தரும். அதில், குறிப்பிட்ட சில பழங்களை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் பப்பாளியின் பெயர் கண்டிப்பாக இருக்கும். வயிறு முதல் சருமம் வரை பப்பாளி பல வகையில் நம் உடலுக்கு பல நன்மைகளை தரும். பப்பாளியை போல பப்பாளியின் விதைகளும் நன்மை பயக்கும். இந்த விலைமதிப்பற்ற விதைகளை நாம் அனைவரும் தூக்கி எறிந்து விடுகிறோம். பப்பாளி விதைகளின் நிறம் கருமையாகவும், வெளிப்பகுதி பளபளப்பாகவும் இருக்கும். இவை காய்ந்த பிறகு சற்று காரமாகவும், கசப்பாகவும் இருக்கும். இவற்றை உலர்த்தி அரைத்து எடுத்து கொள்வது நல்லது.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. பாதுஷா, ஜாங்கிரி செய்வது எப்படி..?

பப்பாளி விதையில் உள்ள சத்துக்கள்:

பப்பாளி விதைகள் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், பப்பாளி விதைகலில் கணிசமான அளவு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, பாலிஃபீனால்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நோய்களை தடுக்கவும் பெரிதும் உதவி செய்யும்.

பப்பாளி விதையின் நன்மைகள்:

வீக்கத்தை குறைக்கும்:

பப்பாளி விதைகளில் வைட்டமின் சி மற்றும் ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பிற சேர்மங்கள் நிறைந்துள்ளன. இந்த சேர்மங்கள் அனைத்தும் அழற்சி எதிர்ப்பு தன்மையை கொண்டுள்ளது. எனவே, இவை கீல்வாதம் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும், வீக்கத்தை குறைக்கவும், தடுக்கவும் உதவி செய்யும்.

புற்றுநோய் அபாயம் குறையும்:

பப்பாளி விதைகளில் உள்ள பாலிஃபீனால்கள் உடலுக்கு வலுவான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். இந்த பண்புகள் உங்கள் உடலில் செயல்பட்டு பல வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும். அந்தவகையில், தினமும் 5 முதல் 6 பப்பாளி விதைகளை பொடி செய்து பாலுடனும், சாறாகவும் குடிக்கலாம்.

உணவு விஷத்தை முறிக்கும்:

பெரும்பாலான மக்கள் அடிக்கடி ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். அந்தவகையில், பப்பாளி விதை சாற்றை தயாரித்து உட்கொள்வது, ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சனைகளில் விடுபட உதவி செய்யும். மேலும் ஃபுட் பாய்சன் ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கும் எஸ்கெரிச்சியா கோலி மற்றும் பிற பாக்டீரியாக்களை திறம்பட கொல்லும்.

மாதவிடாய் வலியை குறைக்கும்:

பப்பாளியில் உள்ள கரோட்டின்கள் , ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை உடல் சீராக்க உதவி செய்யும். அதேபோல், பப்பாளி விதைகள் மாதவிடாயை தூண்டுவதற்கும், அதன் சீரான தன்மையை மேம்படுத்துவதற்கு உதவு செய்யும். மேலும், மாதவிடாய் வலியை குறைக்கவும் உதவுகிறது.

குடல் ஆரோக்கியம்:

பப்பாளி விதையில் உள்ள கார்பீன் என்ற பொருள் குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, மலச்சிக்கலை தடுக்கும். உங்கள் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். பப்பாளி விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி, செரிமான அமைப்பில் ஆரோக்கியத்தை தொடர்ந்து பாதுகாக்கும்.

ALSO READ: Daily Shaving: தினமும் ஷேவ் செய்வது நல்லதா..? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷேவ் செய்யலாம்?

எடை குறைக்க உதவும்:

பப்பாளி விதைகளில் ஏராளமாக நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் உடலில் இருந்து கழிவுகளை அகற்றி, வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவி செய்யும். மேலும், பப்பாளி விதையானது உங்கள் உடலில் அதிகப்படியான கொழுப்பை சேராமல் தடுத்து, உடல் பருமனை தடுக்க உதவும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்:

பொதுவாகவே நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவி செய்யும். அதன்படி, பப்பாளி விதைகளில் உள்ள நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரிவர இருக்க உதவி செய்யும். தொடர்ந்து, பப்பாளி விதைகளில் உள்ள ஒலிக் அமிலம் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

பப்பாளி விதைகளை எப்படி சாப்பிடுவது..?

பப்பாளி விதைகளை உட்கொள்வதற்கு, முதலில் பொடி செய்து கொள்ளவும். இதன்பிறகு, ஜூஸ், பால், கஞ்சி போன்றவைகளுடன் கலந்து சாப்பிடலாம். இது தவிர, சுடுதண்ணீரில் பொடியை கலந்து குடிக்கலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News