5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Toothache Relief: தாங்க முடியாத பல் வலியா..? இந்த பொருட்கள் உடனடி தீர்வை தரும்!

Toothache: பல் வலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை, இது எந்த காரணத்திற்காகவும் ஏற்படலாம். ஈறுகளில் வீக்கம், பற்களில் சிதைவு போன்ற பல காரணங்களால் உங்களுக்கு பற்களில் வலி ஏற்படலாம். இந்த வலி இருக்கும்போது உங்களால் சரியாக உண்ண முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது, பேச முடியாது, தூங்க முடியாது. மழை மற்றும் குளிர் காலத்தில் பலர் அடிக்கடி பல்வலியால் பாதிக்கப்படுவார்கள்.

Toothache Relief: தாங்க முடியாத பல் வலியா..? இந்த பொருட்கள் உடனடி தீர்வை தரும்!
பல் வலி (Image: Tatsiana Volkava/Moment/Getty Images and John Sommer/E+/Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 05 Oct 2024 15:25 PM

வலி எதுவாக இருந்தாலும், அதனால் அவதிப்படுபவர் மட்டுமே, அதன் வலியின் நிலவரம் தெரியும். வலி பல வகையில் இருந்தாலும் வயிற்று வலியையும், பல் வலியையும் நம்மால் தாங்க முடியாது. பல் வலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை, இது எந்த காரணத்திற்காகவும் ஏற்படலாம். ஈறுகளில் வீக்கம், பற்களில் சிதைவு போன்ற பல காரணங்களால் உங்களுக்கு பற்களில் வலி ஏற்படலாம். இந்த வலி இருக்கும்போது உங்களால் சரியாக உண்ண முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது, பேச முடியாது, தூங்க முடியாது. மழை மற்றும் குளிர் காலத்தில் பலர் அடிக்கடி பல்வலியால் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டு பல் வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

ALSO READ: Bathing Tips: குளிக்கும் முன்னும் பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள்.. இது பக்கவாதத்தை ஏற்படுத்தும்!

உப்பு:

சமையலறையில் காணப்படும் முக்கியமான பொருட்களில் உப்பு மிகவும் முக்கியமானது. உப்பு இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல்படுகிறது. இந்த கல் உப்பு பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது பல் வலியிலிருந்தும் பெருமளவு நமக்கு நிவாரணம் அளிக்கும். பல் வலியால் அவதிப்படுபவர்கள், வெதுவெதுப்பான நீரில் கல் உப்பை கலந்து வாய் கொப்பளித்தால் நல்ல பலனை பெறுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிவது மட்டுமல்லாமல், வலியிலிருந்து நிவாரணத்தையும் தரும்.

பெருங்காயம் – எலுமிச்சை:

பல் வலிக்கு பெருங்காயம் மற்றும் எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பெருங்காயம் செரிமான அமைப்புக்கு சஞ்சீவியாக செயல்படுகிறது. இது பல்வலிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இரண்டு சிட்டிகை பெருங்காயத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சையையும் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அதன்பின், தயார் செய்து வைத்திருந்த கலவையை ஒரு காட்டன் கொண்டு வலி உள்ள இடத்தில் தடவினால் நிவாரணம் அளிக்கும். இது விரைவில் உங்களுக்கு நல்ல தீர்வை தரும்.

வெங்காயம்:

வெங்காயம் பயன்படுத்துவதன் மூலம் பல் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். வெங்காயத்தில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வலியிலிருந்து நிவாரணம் தரும். உங்களுக்கு அதீத வலியால் அவதிப்படுபவர்கள் உடனடி நிவாரணம் பெற பச்சை வெங்காயத்தை உங்கள் பற்களுக்கு இடையில் வைத்து மென்று சாப்பிடுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் தரும்.

பூண்டு:

பொதுவாகவே பூண்டு நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் நன்மைகளை தருகிறது. அந்தவகையில், பூண்டில் உள்ள ஆன்டி – பயாடிக் பண்புகள் பல்வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டை நேராக கடிக்காமல் பூண்டை அரைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வலி உள்ள பற்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு எண்ணெய்:

கிராம்பு எண்ணெய் அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற ஒன்று. இது பல் வலிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல் வலி அல்லது ஈறு வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, கிராம்பு எண்ணெயை காட்டனில் தொட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். கிராம்பில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாவை அழிக்கும்.

ALSO READ: Washington Sundar Birthday Special: காது கேளாமை.. சிறுவயதில் வாட்டிய வறுமை.. ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தரின் பயணம்..!

கொய்யா இலைகள்:

கொய்யா இலைகளும் பல் வலிக்கு சிறந்த தீர்வை தரும். பல்வலி பிரச்சனையால் சிரமப்படுபவர்கள், கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளிப்பது வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாய் துர்நாற்றத்தை போக்க உதவி செய்யும்.

புதினா:

கிராம்புகளைப் போலவே, புதினாவும் பல்வலி, வீக்கம் ஆகியவற்றைக் குறைக்கும், ஈறு பிரச்சனைகளை சரி செய்யும். இத்தகைய சூழ்நிலையில், பல்வலி ஏற்பட்டால், நீங்கள் புதினா எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News