5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Benefits of Salt in Tea: டீயில் சர்க்கரைக்கு பதில் உப்பு கலந்து குடிச்சு பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

Health Tips: இந்தியர்கள் டீ குடிக்காமல் ஒருநாள் கூட கழிப்பதில்லை என்று சொன்னாலும் தவறில்லை. நாம் வீட்டில் தினமும் தயாரித்து குடிக்கும் டீயில் பால், டீ தூள், சர்க்கரை சேர்த்து குடிக்கிறோம். பல்வேறு வகையான டீ இந்தியாவில் கிடைக்கின்றன. இவை ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகவும் கருதப்படுகிறது. அந்தவகையில் நீங்கள் எப்போதாவது உப்பு கலந்த டீ குடித்திருக்கிறீர்களா..? உப்பு கலந்த டீ குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Benefits of Salt in Tea: டீயில் சர்க்கரைக்கு பதில் உப்பு கலந்து குடிச்சு பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!
டீ மற்றும் உப்பு (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 17 Sep 2024 16:30 PM

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி, களைப்பாக இருந்தாலும் சரி, இரண்டு வாய் டீ குடித்தால் உங்களுக்கு அனைத்து நீங்கும். சிலர் அதிக குளிர் காலத்திலும் சரி, அதிக வெப்ப காலத்திலும் சரி டீ குடித்து தங்களை தாங்களே ரிலாக்ஸ் செய்து கொள்கிறார்கள். டீ இந்தியாவில் மிகவும் பிரபலமான பானமாகும். இது உலகின் இரண்டாவது சிறந்த மது அல்லாத பானமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிலரின் காலை மற்றும் மாலை வேளையில் டீ இல்லாமல் முழுமையடையாது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறையாவது டீ குடிக்காமல் இருந்தால் எந்த வேலையும் சிலரால் செய்ய முடியாது என்றே சொல்லலாம்.

இந்தியர்கள் டீ குடிக்காமல் ஒருநாள் கூட கழிப்பதில்லை என்று சொன்னாலும் தவறில்லை. நாம் வீட்டில் தினமும் தயாரித்து குடிக்கும் டீயில் பால், டீ தூள், சர்க்கரை சேர்த்து குடிக்கிறோம். பல்வேறு வகையான டீ இந்தியாவில் கிடைக்கின்றன. இவை ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகவும் கருதப்படுகிறது. அந்தவகையில் நீங்கள் எப்போதாவது உப்பு கலந்த டீ குடித்திருக்கிறீர்களா..? உப்பு கலந்த டீ குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Healthy Tips: வைட்டமின் ‘டி’ குறைபாட்டால் இத்தனை ஆபத்தா? அதிகரிக்கச் செய்ய வழிகள் என்ன?

உப்பு கலந்த டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி:

ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது பருவகால தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து தடுக்கும். இந்த டீ உங்களை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவி செய்யும்.

செரிமானம்:

மனித உடலின் செரிமான செயல்முறைக்கு உதவும் செரிமான சாறு உற்பத்தியை உப்பு தூண்டுகிறது. உப்பு சேர்த்து டீ குடிப்பதால் செரிமானம் மேம்படும். இந்த டீயை காலையில் குடித்து வந்தால், புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

நீரேற்றம்:

உப்பு என்பது இயற்கையான எலக்ட்ரோலைட் ஆகும். இது கோடையில் வியர்வை காரணமாக இழந்த உடலின் உப்புச்சத்தை நிரப்புகிறது. எனவே, உப்பு கலந்த டீ குடிப்பது உங்கள் உடலுக்கு நன்மை தருவது மட்டுமின்றி, உங்கள் உடலில் உள்ள நீர் பற்றாக்குறையை நீக்கும்.

கனிமத்தை அதிகரிக்கும்:

உப்பில் மெக்னீசியம், சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. எனவே, தினந்தோறும் நீங்கள் குடிக்கும் டீயில் சிறிதளவு உப்பை சேர்த்து குடிப்பதால் இந்த கனிமங்கள் உங்களது உடலுக்கு இடைக்கும்.

சரும பாதுகாப்பு:

டீயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அலர்ஜி மற்றும் தொற்று நோய்களைத் தவிர்க்கலாம். இந்த டீயில் உப்பு சேர்த்து உட்கொள்வதால் புள்ளிகள் மற்றும் தழும்புகள் நீங்கும். உப்பு சேர்த்து டீ குடிப்பதால் உடலுக்கு தேவையான துத்தநாகம் சேர்கிறது. இது சேதமடைந்த சருமத்தை சரி செய்யவும், முகப்பருவை தடுக்கிறது. மேலும், சருமத்திற்கு தேவையான பளபளப்பையும் தருகிறது.

ஒற்றை தலைவலி:

டீயில் உப்பு சேர்த்து குடித்தால் உங்கள் ஒற்றை தலைவலி தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்த உதவி செய்யும். உப்பு சேர்த்து டீ குடிப்பதால் ஒற்றை தலை வலி குறையும். இந்த உப்பானது உங்கள் மனதை ஓய்வெடுக்க உதவுகிறது, சிறந்த உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

கசப்பை குறைக்கும்:

நீங்கள் சில நேரம் டீயை அதிக நேரம் அடுப்பில் வைக்கும்போது, கசப்பு சுவையை அதிகரிக்க செய்யும். அப்போது, நீங்கள் சிறிதளவு உப்பை சேர்க்கும்போது, கசப்பு சுவையை குறைத்து டீயை சுவையானதாக மாற்றும்.

ALSO READ: Coconut Oil Benefits: முகம் முதல் இதயம் வரை.. பராமரிப்பை அள்ளி தரும் தேங்காய் எண்ணெய்..!

உப்பு டீயை எப்படி தயாரிப்பது..?

உப்பு டீயை தயாரிக்க சிறப்பாக எதுவும் செய்ய தேவையில்லை. தினமும் வீட்டில் தயாரிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை சேர்க்கலாம். அதேபோல், டீ மட்டுமின்றி உப்பை பிளாக் டீ அல்லது லெமன் டீயுடன் கலந்து குடிக்கலாம்.

காஷ்மீர், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா போன்ற இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உப்பு கலந்த டீயை தயாரித்து குடித்து வருகின்றனர். மேலும், இந்த டீ சீனாவிலும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Latest News