Black Carrot Benefits: அசரவைக்கும் கருப்பு கேரட்டின் நன்மைகள்.. புற்றுநோய் வராமல் தடுக்கும்!
Health Benefits of Black Carrot: கருப்பு கேரட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு மற்றும் அந்தோசயனின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பை மேம்படுத்த உதவி செய்யும்.
கேரட்டை பற்றி பேசும்போதெல்லாம் உங்களுக்கு, அதன் சிவப்பு நிறமே ஞாபகத்திற்கு வரும். ஆனால், கேரட் கருப்பு நிறத்தில் இருக்கும் என்பது இங்கு பலருக்கும் தெரியாது. ஊட்டச்சத்து நிரம்பிய கருப்பு கேரட்டில் அந்தோசயினின்கள் நிறைந்துள்ளன. இது கேரட்டிற்கு ஊதா நிறத்தை கொடுக்கும். அதன்படி, இது கிட்டத்தட்ட கரும்பு நிறமாக காட்சியளிக்கும். கருப்பு கேரட் பற்றி வெகு சிலருக்கே தெரியும். சிவப்பு கேரட்டை போலவே, கருப்பு கேரட்டும் ஆரோக்கியத்தை அள்ளி தரும். கருப்பு கேரட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு மற்றும் அந்தோசயனின் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பை மேம்படுத்த உதவி செய்யும். அந்தவகையில், கருப்பு கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இரத்த அழுத்தம்:
கருப்பு கேரட்டை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவு செய்யும். இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
இதய ஆரோக்கியம்:
கருப்பு கேரட்டில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை பிளேட்லெட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த உறைவு உருவாவதை தடுக்கும். கருப்பு கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த நாளங்களை தளர்த்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி செய்யும். மேலும், இது இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்:
கருப்பு கேரட்டில் உள்ள அதிகளவில் அந்தோசயினிகள் உள்ளது. இது வயதான மற்றும் புற்றுநோய்க்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இந்த பைட்டோநியூட்ரியண்ட்ஸ் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. மேலும், இது உடலில் ஏற்படும் அழற்ஜியை குறைக்கவும் உதவி செய்யும்.
உடல் எடையை குறைக்கும்:
கருப்பு கேரட்டில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் உடல் பருமனை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது, இவை எடை அதிகரிப்பதை தடுத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்புகளை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
பார்வை மேம்பாடு:
சிவப்பு கேரட்டை போன்று கருப்பு கேரட்டும் பார்வையை மேம்படுத்த பெரிதும் உதவும். அதன்படி, கிளெளகோமா மற்றும் விழித்திரை அழற்ஜியால் பாதிப்பட்டவர்களுக்கு கருப்பு கேரட் பயனுள்ளதாக இருக்கும். மேலும், கருப்பு கேரட்டின் நுகர்வு கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்யும்.
செரிமான ஆரோக்கியம்:
கருப்பு கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாய்பு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை தரும்.
வீக்கத்தை குறைக்கும்:
கருப்பு கேரட் வீக்கத்தை குறைக்க உதவி செய்யும். கருப்பு கேரட்டில் உள்ள அந்தோசயினிகள் எனப்படும் கலவைகள் அழற்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல், வலிமிகுந்த அழற்ஜி நிலைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ALSO READ: Health Tips: பாலுடன் இந்த பழத்தை தினமும் சாப்பிடுகிறீர்களா? உங்கள் வயிற்றுக்கு கேடு!
சரும பராமரிப்பு:
கருப்பு கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவி செய்யும். இது சுருக்கங்களை குறைக்கவும் உதவி செய்யும். அதேநேரத்தில், இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் தழுப்புகள் போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை:
கருப்பு கேரட் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. அதன்படி, சர்க்கரை நோயாளிகள் அதிகளவில் கருப்பு கேரட்டை எடுத்துகொள்வது நல்லது.
மேலும் சில நன்மைகள்:
- நரம்பு ஆரோக்கியம் மேம்படும்
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)