Food Recipes: டேஸ்டியான வெண்டைக்காய் மட்டன் குழம்பு.. 20 நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பர் டிஸ்! - Tamil News | A 20 Minutes Recipe for lady's finger Mutton Gravy; food recipes in tamil | TV9 Tamil

Food Recipes: டேஸ்டியான வெண்டைக்காய் மட்டன் குழம்பு.. 20 நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பர் டிஸ்!

Mutton Recipe: இன்றைய காலத்தில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சியின் விலை ரூபாய் ஆயிரத்தை தொடுகிறது. இருப்பினும், இன்னும் கிராம புறங்களில் ஏதேனும் விஷேசம், கோயில்களில் திருவிழாக்கள் என்றால் ஆடுகளை படையல் இட்டு சொந்த காரர்களுக்கு பரிமாறி விருந்து வைப்பார்கள். இப்படி, ஊர் புறங்களில் ஆட்டு இறைச்சி அதிகம் விரும்பப்படும் உணவாக வலம் வருகிறது. அந்தவகையில், இன்று மட்டனை கொண்டு செய்யப்படும் இரண்டு வித்தியாசமான ரெசிபிகளை பார்க்கலாம்.

Food Recipes: டேஸ்டியான வெண்டைக்காய் மட்டன் குழம்பு.. 20 நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பர் டிஸ்!

மட்டன் ரெசிபி (Image: Freepik)

Published: 

13 Oct 2024 13:13 PM

அசைவ உணவில் சிக்கனுக்கு பிறகு அதிகம் விரும்பும் அசைவத்தில் மட்டன் இடம்பெறும். சில பேர் சிக்கனுக்கு பதிலாக மட்டன் சாப்பிடுவதையே அதிகம் விரும்புவார்கள். அந்த அளவிற்கு மட்டனின் சுவை நம் நாக்கில் நீரை ஊற செய்யும். இன்றைய காலத்தில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சியின் விலை ரூபாய் ஆயிரத்தை தொடுகிறது. இருப்பினும், இன்னும் கிராம புறங்களில் ஏதேனும் விஷேசம், கோயில்களில் திருவிழாக்கள் என்றால் ஆடுகளை படையல் இட்டு சொந்த காரர்களுக்கு பரிமாறி விருந்து வைப்பார்கள். இப்படி, ஊர் புறங்களில் ஆட்டு இறைச்சி அதிகம் விரும்பப்படும் உணவாக வலம் வருகிறது.

அந்தவகையில், இன்று மட்டனை கொண்டு செய்யப்படும் இரண்டு வித்தியாசமான ரெசிபிகளை பார்க்கலாம். இதை ஒருமுறை நீங்கள் செய்து முயற்சித்து பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி உங்கள் குடும்பத்தார் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

ALSO READ: Food Recipes: சாப்பிட ஆசையை தூண்டும் கொய்யா சட்னி.. இப்படி செய்து ருசித்து பாருங்க..!

வெண்டைக்காய் மட்டன் குழம்பு:

வெண்டைக்காய் மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: (2 பேர் சாப்பிடும் அளவிற்கு குறிப்பிடப்பட்டுள்ளது)

  • மட்டன் – 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம் – 4
  • தக்காளி – 6
  • வெண்டைக்காய் – 300 கிராம்
  • பச்சை மிளகாய் – 4
  • மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் – 2 துண்டு
  • முந்திரி – 8
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • புதினா – ஒரு கையளவு
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • பட்டை – ஒரு சிறிய துண்டு
  • உப்பு – தேவையான அளவு

வெண்டைக்காய் மட்டன் குழம்பு செய்முறை:

  1. கடையில் வாங்கி வைத்த அரை கிலோ மட்டனை நன்றாகவும், சுத்தமாகவும் கழுவி தண்ணீரை வடிக்கட்டி கொள்ளவும்.
  2. மற்ற சமையலில் தயார் செய்து கொள்வதுபோல் வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக வெட்டி கொள்ளவும்.
  3. மற்றொரு சைடில் தேங்காய் துண்டுகள் மற்றும் முந்திரியை மிக்ஸியில் நன்கு மையாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  4. அதன்பின், கேஸை ஆன் செய்து குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி, பட்டை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  5. தொடர்ந்து, வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை அதாவது பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  6. பிறகு புதினா, கொத்தமல்லித்தழை போட்டு இரண்டு நிமிடம் குறைந்த சிம்மில் வைத்து வேக விடவும்.
  7. அடுத்ததாக தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும்.
  8.  அதில் மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, மட்டனை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் குறைந்த சிம்மில் வைத்து வேக விடவும்.
  9. இப்போது எல்லா மசாலாவும் நன்கு கலந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.
  10. மட்டன் நன்றாக வெந்ததும், ஏற்கனவே, அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் முந்திரியை ஊற்றி தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  11.  அதன்பின் வெண்டைக்காயின் தலை மற்றும் வால் பகுதியை வெட்டி விட்டு, நடுவில் இரண்டாக அரிந்து சேர்த்து 3 நிமிடம் மட்டும் வேக விட்டாலே போதுமானதாக இருக்கும்.
  12. இப்போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லித்தழையை மேற்பரப்பில் தூவினால் சுவையான வெண்டைக்காய் மட்டன் குழம்பு ரெடி.

ஆட்டு எலும்பு கார குழம்பு:

ஆட்டு எலும்பு கார குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • ஆட்டு எலும்பு – 1/4 கிலோ
  • உருளை கிழங்கு – 2
  • வெங்காயம் – 5
  • தக்காளி – 5
  • புளி – 50 கிராம்
  • பூண்டு – 5 பற்கள்
  • தேங்காய் – ஒரு துண்டு
  • மிளகு – 5 கிராம்
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • கடுகு – சிறிதளவு
  • கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்

ALSO READ: Quick Chicken Recipes: வீட்டிலேயே கேஎப்சி, சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி? எளிதான செய்முறை இதோ!

ஆட்டு எலும்பு கார குழம்பு செய்வது எப்படி..?

  1. கடையில் வாங்கி வந்த ஆட்டு எலும்பை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி கொள்ளவும்.
  2. பிறகு ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர், மஞ்சள் தூள் மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 விசில் விட்டு வேக வைக்கவும்
  3. இப்போது தக்காளி, வெங்காயம், தேங்காய் துண்டு, மிளகு, பூண்டு இவை அனைத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும்.
  4. அரைத்த பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் .
  5. பிறகு எடுத்து கழுவி வைத்திருந்த உருளை கிழங்கு நேர் நேராக வெட்டி வைத்து கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கருவேப்பிலை போடவும்.
  7. வெட்டி வைத்திருந்த உருளை கிழங்கு போட்டு நன்கு வதக்கவும்.
  8. பிறகு அரைத்து வைத்த மசாலாவை போட்டு நன்கு வதக்கவும்.
  9. வேக வைத்த ஆட்டு எலும்பை அந்த தண்ணீரோடு சேர்க்கவும்.
  10. சிறிது நேரம் கொதிக்க விட்டபின், புளி கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொத்தமல்லி போட்டு மூடி வைக்கவும்.
  11. சிறிது நேரம் கழித்து இறக்கினால் சுவையான ஆட்டு எலும்பு கார குழம்பு ரெடி
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?