சிறிய விதைக்குள் பெரிய நன்மைகள்… சப்ஜா விதையின் அற்புத பலன்கள்!

Benefits of Basil Seeds: பொதுவாக சப்ஜா விதைகள் கோடை காலத்தில் குளிர்பானங்களில் அதிகம் சேர்க்கப்படும். இதில் அதிக அளவில் நீர் சத்தும் நார் சத்தும் இருப்பதால் பல நன்மைகளுக்கு வழிவகிக்கிறது. சிறிய அளவில் இருக்கும் இந்த விதைக்குள் பெரிய அளவிலான நன்மைகள் ஒளிந்திருக்கிறது.

சிறிய விதைக்குள் பெரிய நன்மைகள்... சப்ஜா விதையின் அற்புத பலன்கள்!

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

04 Dec 2024 08:57 AM

துளசி இனத்தைச் சார்ந்த திருநீற்று பச்சை இலை செடியிலிருந்து கிடைக்கக்கூடிய விதைகள் தான் சப்ஜா விதை என்று அழைக்கப்படுகிறது. இது எள்ளு போல் சிறிய அளவில் இருந்தாலும் இதில் அதிகப்படியான நார்ச்சத்து, புரோட்டின், இரும்புச்சத்து, ஒமேகா 3 என்னும் நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்கள் அமைந்துள்ளது. இது அதிகம் மருத்துவ மூலம் வாய்ந்த விதை. இந்த விதைகளை ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், குழப்பமான வாழ்க்கை முறையாலும் பல நோய்கள் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. இன்றைய காலத்தில் நீரிழிவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பலர் சந்தித்து வருகின்றனர். பலருக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது. தண்ணீர் மற்றும் சரியான நார்ச்சத்து உணவுகள் இல்லாததால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை குறைக்க அல்லது நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் நல்ல பலனைத் தரும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஆயுர்வேதத்தில் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படும் சப்ஜா விதைகளின் நன்மையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் சூட்டை தணிக்கும்:

விதை வகை உணவுகளில் உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் நிறைந்த ஒரே விதை இந்த சப்ஜா விதைகள் தான். இந்த சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கும் போது அதன் வெளிப்புறம் நன்றாக நீரை உறிஞ்சி வெள்ளை நிற ஜெல் போன்று மாறிவிடும். ஊற வைத்த இந்த விதையை கோடை காலங்களில் பழச்சாறுகள், ஜிகர்தண்டா போன்ற குளிர்பானங்களில் அதிக அளவில் சேர்க்கப்படும். உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இளநீரோடு இந்த ஊற வைத்த விதையை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும்.

Also Read: Banana Flower: வாழைப்பூவில் மறைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்…

உடல் எடையை குறைக்கும்:

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டால் மிகவும் பலன் அளிக்கும். இதில் டயட்ரி பைபர் (Dietary Fiber) என்னும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இந்த விதையை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நன்கு நிறைந்த உணர்வு ஏற்படும். இது பசியையும் நன்றாக கட்டுப்படுத்தும். எனவே இந்த விதைகள் நாம் அதிகம் சாப்பிடுவதில் இருந்து தடுக்கிறது. இதில் மிகக் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைப்பவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் சத்துக்களில் முக்கியமானது நார்ச்சத்து. 100 கிராம் சப்ஜா விதையில் 25 முதல் 30 கிராம் அளவிலான டயட்ரி பைபர் நிறைந்து இருக்கிறது. இது வயிற்றில் ஒரு ஜெல் போல் படிந்து சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் இரத்தத்தில் வேகமாக சேர்வதை தடுக்கும். இதன் மூலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படும். மேலும் இன்சுலின் திறனை மேம்படுத்தும் ஆற்றல் இந்த விதைகளுக்கு உண்டு.

மலச்சிக்கலை நீக்கும்:

பொதுவாக சாப்பிடும் உணவில் நார் சத்தும் நீர் சத்தும் இல்லாத காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. சப்ஜா விதைகளில் இந்த இரண்டு சத்துகளும் அதிக அளவில் உள்ளது. இதில் இருக்கக்கூடிய அதிக அளவிலான நீர்ச்சத்து மலக்கழிவுகள் இருக்கமடைவதில் இருந்து தடுக்கிறது. நார்ச்சத்து மலக்கழிவுகள் எளிதில் வெளியேற உதவுகிறது. சப்ஜா விதையின் ‌வழவழப்பு தன்மை காரணமாக குடலில் மல கழிவுகள் தேங்குவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. அடிக்கடி மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் சப்ஜா விதைகளை எடுப்பதன் மூலமாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Also Read: ஆரஞ்சு பழ தோல்கள் மூலம் சருமத்தை ஜொலிக்க வைக்கலாம்.. இதோ டிப்ஸ்!

மாரடைப்பு வராமல் தடுக்கும்:

இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதாலும் இந்த கொலஸ்ட்ரால் ரத்தக்குழாயில் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது. சப்ஜா விதைகள் இது இரண்டையும் சீர் செய்து பாதுகாக்கிறது. இதில் இருக்கக்கூடிய நார் சத்துக்கள் உணவில் இருந்து வரக்கூடிய கொழுப்புகள் இரத்தத்தில் சேர்வதை தடுக்கிறது. இதன் மூலமாக இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியாக இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஃபிளாவனாய்டு, பாலிபினால்கள் போன்ற இதயத்தை பாதுகாக்க கூடிய தனிமங்கள் இதில் இருக்கிறது. இது இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதை தவிர்ப்பதோடு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?