Anant Ambani-Radhika Merchant Wedding : கண்களை கவர்ந்த அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆடை.. இணையத்தில் வைரல்…!
Anant Radhika Wedding : ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் ஜூன் 29ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் திருமணத்திற்கு முன்புற நிகழுவான ஹல்தி விழா நடைபெற்றது. இந்த ஹல்தி விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த பூக்களால் செய்யப்பட்ட உடை அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாறியது மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலானது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா இருவருக்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முகேஷ் அம்பானி- நீடா அம்பானிக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலாவின் மகள் ராதிகா, இவர் நியூயார்க் பல்கலையில் பட்டம் பெற்றவர். ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூலை 12ல் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உள்ளது.
Also Read: நடிகை ஆண்ட்ரியா பற்றிய அறியப்படாத தகவல்கள்!
உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் வீட்டு திருமண விழாக்கள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சல் திருமண விழா மும்பையில் உள்ள அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் திருமணத்திற்கு முன்புற நிகழுவான ஹல்தி விழா நடைபெற்றது. இந்த ஹெல்த் விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த பூக்களால் செய்யப்பட்ட உடை அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாறியது மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது முதல் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனாமிகா கண்ணா என்ற காஸ்ட்யூம் டிசைனர் வடிவமைத்த மஞ்சள் நிற லெஹங்காவை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார். அதற்கு ஏற்றார் போல் வெள்ளை நிற பூக்களால் செய்யப்பட்ட துப்பட்டாவை அணிந்து தேவதையைப் போல காட்சி அளித்தார். உடன் பூக்களால் செய்யப்பட்ட செயின் தோடு போன்ற அணிகலன்கள் அனைவரையும் கண்களையும் கவர்ந்தது.
சுமார் 2 கிலோ மல்லிகை மொட்டுகள் 900-க்கும் மேற்பட்ட ஜெண்டா பூக்களால் தயாரிக்கப்பட்ட மல்லிகை டிசைன்கள் நிறைந்த துப்பட்டாவை அணிந்து திருமண நிகழ்வுகளில் பங்கேற்றார். துப்பட்டா மற்றும் அணிகலங்களின் விலை சுமார் 27 ஆயிரம் என்று கூறப்பட்டது. இதனை ஃப்ளோரல் ஆர்ட்டின் நிறுவனர் சிருஷ்டி கபூர், தலைமுடி மூன்று வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகத்தான ஓபஸ் சந்தேகத்திற்கு இடமின்றி மலர் துப்பட்டாவாக இருந்தது, மொக்ரா பூ மொட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது.
அதன் ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் களை கட்டும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் மல்லிகையால் தயாரான உடையில் மிளிர்ந்த ராதிகா அணிந்திருந்த பூக்களால் ஆன துப்பட்டா மற்றும் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Cotton buds: காதுக்கு காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள்..!
இந்த விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக்,வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான மார்க் சூகர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், தோனி, சாக்ஷி தோனி மற்றும் திரையுலகை சார்ந்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ரஜினி காந்த், சஞ்சய் தத், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப், இயக்குநர் அட்லி உள்ளிட்டபல்வேறு நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் கூடினர். நட்சத்திரங்களின் வருகையால், ஜாம் நகரில் விமான நிலையம் புரணமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.