Health Benefits of Cinnamon: வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? - Tamil News | Are there so many benefits of drinking cinnamon water on an empty stomach; health tips in tamil | TV9 Tamil

Health Benefits of Cinnamon: வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Cinnamon Benefits: தினமும் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரை எடுத்து கொள்ளும்போது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவும். இலவங்கப்பட்டையில் உள்ள கலவைகள் உங்களுக்கு பசியை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, குறைவான உணவை உண்பதுடன், கலோரி உட்கொள்ளலும் குறையும்.

Health Benefits of Cinnamon: வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

இலவங்கப்பட்டை (Image: GETTY)

Published: 

25 Oct 2024 18:50 PM

ஆரோக்கியம் என்பது உலகில் பெரிய வரம் என்றார்கள். ஆனால், நமது நவீன வாழ்க்கை முறையாலும், உணவுப் பழக்கத்தாலும், நம் கைகளாலேயே ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டு, பிறகு மருத்துவமனைகளுக்கு சென்று அலைந்து திரிகிறோம். அந்தவகையில் செலவு இல்லாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. நமது உடலை ஆரோக்கியமாக வைக்க காய்கறிகள் மற்றும் பழங்களை தொடர்ந்து உட்கொள்வதே போதுமானது.

காய்கறி, பழங்களை தொடர்ந்து சமையலறையில் இருக்கும் சில மசாலா பொருட்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதன்படி, நம் வீட்டில் இருக்கும் இலவங்கப்பட்டை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு மசாலா பொருள். ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இலவங்கப்பட்டை சிறப்பாக செயல்படுகிறது. இன்று இலவங்கப்பட்டை தண்ணீர் அல்லது தேநீரின் நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Back Pain: தூங்கும்போதும் முதுகு வலியால் அவதியா..? இந்த உணவுகளை தவிருங்கள்..!

எடை குறைப்பு:

தினமும் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரை எடுத்து கொள்ளும்போது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவும். இலவங்கப்பட்டையில் உள்ள கலவைகள் உங்களுக்கு பசியை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, குறைவான உணவை உண்பதுடன், கலோரி உட்கொள்ளலும் குறையும். மேலும், இலவங்கப்பட்டை வயிற்றின் அருகே சேருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.

இதய ஆரோக்கியம்:

இலவங்கப்பட்டை நமது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இது நமது உடலில் இருக்கும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும். இது தவிர, உடலில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவும். அதன்படி, தினசரி அடிப்படையில் இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்ளும்போது, இது உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், இது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைகிறது.

சர்க்கரை நோய்:

மருத்துவ குணங்கள் நிறைந்த இலவங்கப்பட்டையில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் திறன் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் அல்லது தேநீர் குடித்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

செரிமானம்:

இலவங்கப்பட்டை உடலில் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. இது வீக்கம், வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவி செய்யும். இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது, செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச உதவி செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

இலவங்கப்பட்டையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதன் காரணமாக, உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்போது, உடல் பல வகையான நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவி செய்யும். மழை மற்றும் குளிர் காலத்தில் இலவங்கப்பட்டை தண்ணீரை எடுத்து கொள்வதன்மூலம், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளியேற உதவி செய்யும். மேலும், இலவங்கப்பட்டை உடலில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பருவகால நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் கார வகைகள்.. காரா பூந்தி, காரா சேவு செய்வது எப்படி..?

மேலும் சில..

  • செரிமான அமைப்பு, பற்கள், தலைவலி, தோல் நோய்கள் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகள் தொடர்பான நோய்களுக்கு இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • காசநோய் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களிலும் இலவங்கப்பட்டை தண்ணீர் நன்மை பயக்கும்.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
  • மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து குடித்து வந்தால் விரைவில் வலிகள் குறையும்.
  •  இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இவை ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுப்பதன் மூலம் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.
  •  இலவங்கப்பட்டை தண்ணீர் தினமும் எடுத்து கொள்வதன்மூலம், கீல்வாத வலியைக் குறைக்கவும் உதவி செய்யும்.
வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி - பிளிப்கார்ட் அதிரடி!
நீல நிற புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!