Health Tips: 30 வயதுக்குள் மிரட்டும் இதய நோய்.. பாதுகாப்பது எப்படி?
தமனி அடைப்பு வராமல் இருப்பதற்கான உணவுகள்: தவறான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகிவிட்டால் 30 வயதுக்கு உள்ளான ஆண்களுக்கு தமனி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள், பக்கவாதம் போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும்
தமனிகள் எனப்படுவது ரத்த நாளங்களாக இதயத்தில் இருந்து ரத்தத்தை வெளியே எடுத்துச் செல்கிறது. சில நேரங்களில் இது அடைப்படுகிறது. அடைப்பட்ட தமனிகள் பெருந்தமனி தடிப்புத் தோல் அலர்ஜி என்று அழைக்கப்படுகிறது. இது தமனிக் கூர்மை தடிப்பு அல்லது நாடிக் கூர்மை தடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் தமனிகளில் உட்புறத்தில் படிவதால் தமனியின் உட்புறம் தடிப்பமடைந்து வீங்குகிறது.இது தமனிகளில் அடைப்பை உருவாக்கி ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இது கொலஸ்ட்ரால், மெழுகு போன்ற கொழுப்பு, கால்சியம் மற்றும் ரத்தத்தில் உள்ள பிற பொருள்களால் ஆகியவையால் ஏற்படுகிறது.
இதை சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் காலப்போக்கில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இருதய நோய்கள் போன்று தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். மாறுபட்ட வாழ்க்கை முறை, ஆரோக்கியம் இல்லாத உணவு முறைகள், அதிக மன அழுத்தம் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களால் இது தொடங்குகிறது. இப்பொழுது முப்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இந்த தொந்தரவு அதிக அளவு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இயற்கையாகவே கிடைக்கும் உணவுப் பொருள்கள் மூலமாக தமனியில் ஏற்படும் அடைப்பை சரி செய்து கொள்ளலாம்.
இஞ்சி:
இஞ்சி சமையலுக்காக மட்டுமல்லாமல் மருந்து பொருள்களாகவும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குமட்டல், உடல் எடை குறைப்பு, செரிமான பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு உதவுகிறது. அது மட்டுமில்லாமல் இது இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
Also Read: Eye Care: கண்களுக்கு ஆரோக்கியம் வழங்கும் நெல்லிக்காய்.. இவ்வளவு சத்துகளா?
கிரீன் டீ:
தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் இதயம் சார்ந்த நோய்கள் வராது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது இதயம் மற்றும் ரத்தநாளங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது. ஆய்வின்படி தினமும் கிரீன் டீ குடிப்பவர்கள் இதய நோய் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதில்லை.
இலவங்கப்பட்டை:
இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. தினமும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவு, கொழுப்பு ஆகியவை குறைகிறது. மேலும் இது தமனிகளுக்கும் இதயத்திற்கும் மிகவும் நல்லது.
ரோஸ்மேரி:
இது உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இது டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
Also Read: Garlic: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பூண்டின் நன்மைகள்…
வோக்கோசு:
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்தது இந்த வோக்கோசு. இதில் ஃபோலேட் அதிகளவில் இருப்பதால் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்தக்கூடிய அமினோ அமிலங்களை இது குறைக்கிறது.