Travel Tips: பனியும், பனி சார்ந்த இடமும் அவுலி.. குடும்பத்துடன் ஜில்லுன்னு ஒரு டூர் போங்க..! - Tamil News | Auli Travel Tips mini switzerland in india auli what are the place here very famous | TV9 Tamil

Travel Tips: பனியும், பனி சார்ந்த இடமும் அவுலி.. குடும்பத்துடன் ஜில்லுன்னு ஒரு டூர் போங்க..!

Auli Tour: ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல சிறைய பணம் மற்றும் அதிக நாட்கள் விடுமுறை தேவைப்படுகிறது. அந்த வகையில், ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல முடியாதவர்கள் மினி ஸ்விட்சர்லாந்தான அவுலிக்கு ஒருமுறை சென்று வரலாம். பனியால் மூடப்பட்டிருக்கும் இந்த மலைப்பகுதி அதன் அழகுக்காக பிரபலமானது. அத்தகைய சூழ்நிலையில், எந்தத் தாமதமும் இன்றி நீங்கள் எந்தெந்த இடங்களை அவுலியில் பார்வையிடலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Travel Tips: பனியும், பனி சார்ந்த இடமும் அவுலி.. குடும்பத்துடன் ஜில்லுன்னு ஒரு டூர் போங்க..!

அவுலி டூர் (Pic: Freepik)

Updated On: 

06 Nov 2024 11:21 AM

அவுலி டூர்: பனியும், பனிசார்ந்த இடங்களும் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த செய்தி உங்களுக்கானது. இந்த சீசனில் மக்கள் கண்டிப்பாக விடுமுறை நாட்களில் பயணம் செய்ய திட்டமிடுவார்கள். அந்த வகையில் சில பனி பகுதிகளை காண சிம்லா – மணாலிக்கு செல்கிறார்கள். இப்படிப்பட்ட இடங்களை பார்த்தவர்கள் புதிய அனுபவத்தை பெற வேண்டும் என்றால், நீங்கள் ’மினி ஸ்விட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் அவுலிக்கு செல்லலாம். ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல சிறைய பணம் மற்றும் அதிக நாட்கள் விடுமுறை தேவைப்படுகிறது. அந்த வகையில், ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல முடியாதவர்கள் மினி ஸ்விட்சர்லாந்தான அவுலிக்கு ஒருமுறை சென்று வரலாம். பனியால் மூடப்பட்டிருக்கும் இந்த மலைப்பகுதி அதன் அழகுக்காக மிகவும் பிரபலமானது. அத்தகைய சூழ்நிலையில், எந்தத் தாமதமும் இன்றி நீங்கள் எந்தெந்த இடங்களை அவுலியில் பார்வையிடலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Solo Travel: இந்தியாவில் சோலோ ட்ரிப் செல்ல சிறந்த இடங்கள் இவைதான்.. ஜாலியா ஒரு ரவுண்ட் அடிங்க..!

இந்தியாவின் ‘மினி ஸ்விட்சர்லாந்து’:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் உள்ள அவுலி என்ற இடத்தில் பனி படர்ந்த மலைகள் மற்றும் பனிப்பொழிவு சுவிட்சர்லாந்தின் உணர்வை தரும். அவுலி ஹில் ஸ்டேஷன் ‘மினி ஸ்விட்சர்லாந்து’ என்றும் ‘உத்தரகாண்டின் சொர்க்கம்’ என்றும் அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம். நீங்கள் இங்கு எப்போது வேண்டுமானாலும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலம் இங்கு வருகை தருவதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

செயற்கை ஏரி:

அவுலியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ஏரியும் உள்ளது. இது 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஏரியின் நீரில் இருந்து செயற்கை பனி தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், நீங்கள் இங்கே படகு சவாரி உள்ளிட்ட பலவற்றை அனுபவிக்கலாம். அவுலிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக இங்கு வந்து செல்வார்கள்.

குவானி புக்யால்:

குவானி புக்யால் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் பிரபலமான மலைவாசஸ்தலமான அவுலிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பசுமையான மேட்டுப் புல்வெளியாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,380 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் நந்தா தேவி மற்றும் துனகிரி மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் குளிர்காலத்தில் பனிப்பொழிவைப் பெறுகிறது, இதன் காரணமாக இந்த இடம் பனியால் மூடப்பட்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இங்கே பனிப்பொழிவை அனுபவிக்கலாம்.

குர்சோ புக்யால்:

அவுலியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குர்சோ புக்யா, குடும்பத்துடன் பார்வையிட சிறந்த இடம். இங்கிருந்து உத்தரகாண்ட், நந்தா தேவி, துரோணா மற்றும் திரிசூலம் ஆகிய மூன்று பெரிய மலைத்தொடர்களின் அழகிய காட்சிகளை கண்டுகளிக்கலாம்.

பனிச்சறுக்கு:

அவுலியில் பனிச்சறுக்கு செய்வதற்கே பிரத்யேக இடம் ஒன்று உள்ளது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான பனிச்சறுக்கு இடமாகும். பனிச்சறுக்கு பந்தயங்களுக்கான தரநிலைகளை பூர்த்தி செய்யும் அங்கீகரிக்கப்பட்ட இடம் உள்ளது. இங்கு நீங்கள் பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சி கொள்ளலாம். ந்த அழகிய இடம் நந்தா தேவி பர்வத், மான பர்வத், துனகிரி, நீலகண்டம், ஹாதி பர்வத், கோரி பர்வத் மற்றும் நார் பர்வத் போன்ற 7 மலைகளால் சூழப்பட்டுள்ளது. இப்படியான இடங்களுக்கு சென்றால், நல்ல நினைவுகளை நீங்கள் பெறலாம்.

ALSO READ: Jaipur Travel Tips: மழைக்காலத்தில் குடும்பத்துடன் செல்ல சிறந்த சுற்றுலா தலம்.. அன்புடன் அழைக்கும் ஜெய்ப்பூர்!

இது தவிர, அவுலியில் உள்ள ரோப் காரில் நீங்கள் பயணிப்பதன் மூலம் உயரமான மலைகள் மற்றும் பசுமையின் காட்சியை கண்டுகளிக்கலாம். அவுலி ஜோஷிமத்தின் கயிறுப்பாதை ஆசியாவிலேயே இரண்டாவது இடமாகக் கருதப்படுகிறது.

 

பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா?
ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் வேகம் அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் ஆல்பம்