5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Back Pain: தூங்கும்போதும் முதுகு வலியால் அவதியா..? இந்த உணவுகளை தவிருங்கள்..!

Health Tips: உணவு மட்டுமில்லாமல் முதுகு வலி பிரச்சனையை சரி செய்ய, உங்கள் வாழ்க்கை முறையில், பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். எவ்வளவு வேலை பணி இருந்தாலும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து நடப்பதும், உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால், தசைகள் நெகிழ்வுத்தன்மை பெற்று, முதுகில் வலி ஏற்படாமல் தடுக்கும்.

Back Pain: தூங்கும்போதும் முதுகு வலியால் அவதியா..? இந்த உணவுகளை தவிருங்கள்..!
முதுகு வலி (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 25 Oct 2024 14:47 PM

இன்று ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தொடர்ந்து, 8 முதல் 9 மணி நேரம் அலுவலக நாற்காலியில் உட்கார வேண்டிய நிலைமை ஏற்படும். இது உங்களுக்கு நாளடைவில் முதுகுவலியை ஏற்படுத்தும். முதுவலி ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், தவறாக உட்காருவதும், படுப்பதும் முதுகுவலியை தரலாம். இதன் காரணமாக, உட்கார்ந்தாலோ, நின்றாலோ, படுத்தாலோ, வாகனம் ஓட்டினாலோ முதுகு வலி தொடர்ந்து தொந்தரவை தரும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், எப்போது வீட்டுக்கு சென்று படுப்போம் என்று நினைப்பார்கள். இருப்பினும், படுக்கும்போதும் தூங்கும்போது சிலருக்கு முதுகு வலி ஏற்படலாம். நவீன வாழ்க்கை முறை முதுகெலும்பு பலவீனத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. இதனால்தான் மருத்துவர்கள் உணவு மற்றும் குடிக்கும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

முடிந்தவரை உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது உங்கள் முதுகெலும்பை பலப்படுத்தும். இதை எளிதாக விட்டால், நாளடைவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அந்தவகையில் சில உணவுகள் உங்களுக்கு எவ்வளவு பிடித்த உணவுகளாக இருந்தாலும் தவிர்ப்பது நல்லது. இந்தநிலையில், முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளவும்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்ஸ் ரெசிபிகள்.. மைசூர் பாக், முறுக்கு செய்வது எப்படி..?

அதிக புரதம்:

உடற்பயிற்சி செய்பவர்களாக இல்லாமல் அதிகளவில் புரதம் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு முதுகுவலி வரலாம். அதிகமாக புரதம் உட்கொண்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரிக்க தொடங்கும். இதனால், உங்களுக்கு சிறுநீர் மற்றும் மலம் வழியாக கால்சியம் வெளியேறும். மேலும், அதிகப்படியான புரதம் எலும்புகளை சேதப்படுத்தும். எனவே, குறைந்த அளவு புரதம் எடுத்துக்கொள்வது நல்லது.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்:

நீங்கள் நீண்ட காலத்திற்கு எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால், குளிர்பானங்கள் மற்றும் ஷாம்பெயின் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை குறைத்து கொள்வது நல்லது தவிர்ப்பது நல்லது. இந்த வகை பானங்களில் பாஸ்பேட் அதிகமாக இருக்கும். இது உங்கள் உடலில் கால்சியத்தை குறைத்து, எலும்புகளை பலவீனப்படுத்தும்.

காஃபின்:

உங்களது எலும்புகள் வலுவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்றால் காஃபினை தவிர்ப்பது மிக மிக நல்லது. அதிகளவில் காஃபின் பொருட்களை உட்கொள்ளும்போது எலும்புகளை பாதிக்க செய்யும். எனவே, காபி உள்ளிட்ட சூடான பானங்களை தவிர்த்து, பால் எடுத்துக்கொள்ளலாம். பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது. முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

வாயு தொடர்பான மருந்துகள்:

அமிலத்தன்மை கொண்ட மருந்துகளின் பயன்பாட்டை மருத்துவரின் ஆலோசனையின்படி குறைத்து கொள்வது நல்லது. அமிலத்தனமை உடலில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களை உறிஞ்சி எலும்புகளை பலவீனமாக்கும்.

வைட்டமின் டி குறைபாடு:

உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியத்துடன், வைட்டமின் டி சத்தும் மிக மிக அவசியம். வைட்டமின் டி சத்துதான் கால்சியத்தை எலும்புகளுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. எனவே, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

ALSO READ: Chapati Side Effects: தினந்தோறும் சப்பாத்தி சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது!

ஊட்டச்சத்து குறைபாடுகள்:

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் தேவைப்படுகிறது. வயதுக்கு ஏற்ப உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துவது நல்லது.

உணவு மட்டுமில்லாமல் முதுகு வலி பிரச்சனையை சரி செய்ய, உங்கள் வாழ்க்கை முறையில், பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். எவ்வளவு வேலை பணி இருந்தாலும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து நடப்பதும், உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால், தசைகள் நெகிழ்வுத்தன்மை பெற்று, முதுகில் வலி ஏற்படாமல் தடுக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News