Monsoon Health Tips: மழைக்காலத்தில் இந்த உணவுகளை புறக்கணிக்காதீர்கள்.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!
Healthy Foods: கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவை தேர்ந்தெடுப்பது போல், குளிர்காலத்தில் சூடான உணவை சேர்த்துக்கொள்வது நல்லது. மழைக்காலத்தில் சில ஊட்டச்சத்து தவறுகள் அதாவது உணவு தொடர்பான தவறுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளை வழிவகுக்கும். அந்தவகையில், மழை மற்றும் குளிர் காலத்தில் தவிர்க்கக்கூடாத உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
காலநிலை மாறும் பொழுதெல்லாம், உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம். வானிலை மாறும்போது, சரியான உணவுகளை எடுத்து கொள்ளவில்லை என்றால், வயிற்றில் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். மழை மற்றும் குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் வெப்பநிலை குறையும்போது அல்லது உயரும்போது ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவி செய்யும்.
மழைகாலத்தில் குளிர்ச்சியான உணவு பொருட்களை சாப்பிடுவது பிரச்சனையை தரும். கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவை தேர்ந்தெடுப்பது போல், குளிர்காலத்தில் சூடான உணவை சேர்த்துக்கொள்வது நல்லது. மழைக்காலத்தில் சில ஊட்டச்சத்து தவறுகள் அதாவது உணவு தொடர்பான தவறுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளை வழிவகுக்கும். அந்தவகையில், மழை மற்றும் குளிர் காலத்தில் தவிர்க்கக்கூடாத உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேங்காய் தண்ணீர்:
கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் நிறைய இளநீர் வாங்கி குடிப்பார்கள். இது வயிற்றை உள்ளே இருந்து குளிர்ச்சியாக வைக்கவும், உடலை நீரேற்றமாக வைக்க பெரிதும் உதவி செய்யும். கோடை காலம் முடிந்ததும் இளநீர் சாப்பிடுவது பிரச்சனையை தரும் என்று மக்கள் நினைக்கிறார்கள், தவிக்கிறார்கள். ஆனால், இப்படி செய்யக்கூடாது. இளநீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது எப்போதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவி செய்யும்.
தயிர்:
மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் தயிர் சாப்பிட்டால் இருமல், சளி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். இதனால், இதை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். இதுவும் மிக மிக தவறு. தயிரில் குடலை ஆரோக்கியமான வைத்திருக்கும் புரோபயாடிக் உள்ளது. இது மழை மற்றும் குளிர் காலத்தில் செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவி செய்யும். இத்தகைய சூழ்நிலையில், தயிர் எடுத்துக்கொள்ள காலநேரமும் உண்டு. தயிரை காலையிலோ அல்லது மாலையிலோ எடுத்துக்கொள்ளக்கூடாது. இது அதிக குளிர்ச்சியை தந்து சளி போன்ற பிரச்சனையை தரலாம். அதற்கு பதிலாக, மதிய உணவில் தயிரை எடுத்து கொள்ளலாம்.
புளிப்பு பழம்:
மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள். இதுபோன்ற சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவது தங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள். தயிரை போன்று சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பருவ மாற்றத்தின்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பராமரிக்கும். இரவு மற்றும் காலை நேரங்களில் ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை மதிய நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
ALSO READ: Coconut Oil: தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிங்க.. பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்!
தண்ணீர்:
மழை மற்றும் குளிர்காலத்தில் குடிக்கும் தண்ணீர் அளவை குறைத்து கொள்கிறார்கள். இதுவும், உடலில் பல பிரச்சனைகளை தரும். மழைகாலத்தில் கூட உடலில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை ஏற்படும். எனவே, எந்த பருவகாலமாக இருந்தாலும் தண்ணீர் போதுமான அளவு குடித்துகொள்வது நல்லது.
மழைக்காலத்தில் செய்யக்கூடாத தவறுகள்:
- மழைக்காலத்தில் காய்கறிகளின் மீது பாக்டீரியா மற்றும் கிருமிகள் எளிதாக வளர தொடங்கும். எனவே, பச்சை காய்கறிகளை கழுவாமல் நேரடியாக சாப்பிடுவது, வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
- மழைக்காலத்தில் தெரு மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை முடிந்த அளவு தவிருங்கள். பருவ காலத்தில் தெருவோர கடைகளில் சமைக்கப்படும் உணவுகள் சுத்தமானதாக இருக்குமா என்பது தெரியாது. இது சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
- மழைக்காலத்தில் அதிகப்படியான எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் உணவுகள் ஒரு சில சமயங்களில் வயிற்றுப்போக்கு, செரிமானம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மழைக்காலத்தில் மீன் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)