Travel Tips: அதிசயங்கள் நிறைந்த ஆந்திராவிற்கு டூர் பிளானா? இதுதான் சுற்றி பார்க்க சிறந்த இடங்கள்!

Andhra Pradesh: தென்கிழக்கு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் பல இயற்கை அழகையும் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. பழங்கால கோவில்கள் மற்றும் அரண்மனைகள் முதல் அழகான கடற்கரைகள் மற்றும் மலைப்பகுதிகள் வரை ஆந்திர பிரதேசத்தில் பல இடங்கள் உள்ளன. அந்த வகையில், நீங்கள் புதிதாக எங்கையாவது பார்வையிட விரும்புவோர் என்றால், ஆந்திர பிரதேசத்தில் ஒரு விஸிட் அடியுங்கள்.

Travel Tips: அதிசயங்கள் நிறைந்த ஆந்திராவிற்கு டூர் பிளானா? இதுதான் சுற்றி பார்க்க சிறந்த இடங்கள்!

ஆந்திர பிரதேசம் (Image: Exotica.im/Universal Images Group via Getty Images)

Updated On: 

06 Nov 2024 11:21 AM

ஆந்திரா டூர்: இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு கிழக்கிலிருந்து மேற்கு வரை மற்றும் வடக்கிலிருந்து தெற்கு வரை சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன. அந்தவகையில் தென்கிழக்கு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் பல இயற்கை அழகையும் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. பழங்கால கோவில்கள் மற்றும் அரண்மனைகள் முதல் அழகான கடற்கரைகள் மற்றும் மலைப்பகுதிகள் வரை ஆந்திர பிரதேசத்தில் பல இடங்கள் உள்ளன. அந்த வகையில், நீங்கள் புதிதாக எங்கையாவது பார்வையிட விரும்புவோர் என்றால், ஆந்திர பிரதேசத்தில் ஒரு விஸிட் அடியுங்கள். இங்கு பார்வையிட வேண்டிய இடங்களை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Travel Tips: வெளிநாடு செல்ல ஆசையா? இந்த அண்டை நாடுகளுக்கு எளிதாக சென்று வாருங்கள்!

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி, இந்தியாவில் அதிக மக்கள் வந்துசெல்லும் பிரபலமான யாத்திரை தலங்களில் ஒன்றாகும். திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் மட்டுமின்றி, மிகப்பெரிய அனுமன் கோயில் உள்ளிட்ட கோயில்களும் உள்ளன. திருப்பதி கோயிலுள்ள இந்த இடம் இந்து மதத்தில் புனித இடமாகவும் கருதப்படுகிறது. இங்கு கோயிலைத் தவிர, தேவஸ்தான தோட்டம், தலகோனா நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில், கபில தீர்த்தம் மற்றும் சந்திரகிரி போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.

விசாகப்பட்டினம்:

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் மிகப்பெரிய நகரமாகவும், இந்தியாவில் நான்காவது பெரிய துறைமுகமாகவும் உள்ளது. நீங்கள் விசாகப்பட்டினத்திற்கு சென்றால் மறக்காமல் போரா குகை, கடிகி நீர்வீழ்ச்சி, யாரடா கடற்கரை, வுடா பூங்கா, டால்பின் நோஸ் போன்ற பல அழகான இடங்களுக்கும் சென்று வாருங்கள்.

விஜயவாடா:

கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள விஜயவாடா ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். உலகில் வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. பவானி தீவு, உனடவல்லி குகைகள், மொகலராஜபுரம் குகைகள், அக்கண்ணா மற்றும் மதன்னா குகைகள், கொண்டப்பள்ளி கோட்டை, கனக துர்கா கோயில், சூர்யலங்கா கடற்கரை போன்றவை விஜயவாடாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

கடப்பா:

கடப்பா என்ற வார்த்தையை தமிழ் திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தி பார்த்திருப்போம். கடப்பா பகுதி பாலகொண்டா மற்றும் நல்லம் மலைகளால் சூழப்பட்டுள்ளதால், இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடப்பாவில் ந்திகோட்டா கோட்டை, பெலும் குகை, சித்தாட் கோட்டை, புஷ்பகிரி ஆகிய இடங்களை பார்வையிடலாம்.

ALSO READ: Siliguri Tour: மழைக்காலத்தில் பயணம் செய்ய திட்டமா..? ஜில்லுன்னு சிலிகுரி போய்ட்டு வாங்க!

ஸ்ரீசைலம் அணை:

கிருஷ்ணா நதியில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் என இருவரும் சுற்றி பார்க்க சிறந்த இடங்களில் ஒன்று. இங்கே நீங்கள் படகு சவாரி மற்றும் மலையேற்றத்தை அனுபவிக்க முடியும்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?