Beauty Tips for Men: ஆண்கள் தங்கள் அழகை எவ்வாறு பராமரிப்பது? இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுங்கள்!

Men Grooming Tips: ஆண்களின் சருமமும் பெண்களின் சருமத்தை விட சற்று கரடுமுரடாக இருக்கும். பருவநிலை மாற்றங்கள், தூசி, மாசு மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் ஆண்களின் தோலை பாதிக்கிறது. இதன் காரணமாக ஆண்கள் பல கெமிக்கல்களை பயன்படுத்தி தங்கள் சருமங்களை பாதிப்படைய செய்கின்றன. இயற்கை முறையில் ஆண்களின் சருமத்தை பராமரித்துக்கொள்ளும் சில டிப்ஸ்கள் உங்களுக்காக..

Beauty Tips for Men: ஆண்கள் தங்கள் அழகை எவ்வாறு பராமரிப்பது? இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுங்கள்!

ஆண்கள் அழகு குறிப்புகள்

Published: 

11 Aug 2024 17:08 PM

ஆண்கள் அழகு பராமரிப்பு: மாறிவரும் பருவத்தில், உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, சருமத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அது கோடைக்காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், பெண்களின் தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு நடைமுறைகள் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆண்களை பற்றிய அழகு குறிப்புகளை நாம் பெரிதாக கண்டுகொள்வது கிடையாது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் கடந்த காலத்தில் பெண்கள் அழகுக்காக எடுக்கும் அக்கறையை ஆண்கள் எடுப்பதில்லை.ஆனால் கால மாற்றத்தின் ஒரு பகுதியாக ஆண்களின் எண்ணங்களும் மாறிவிட்டன.

ALSO READ: Paris Olympics 2024: இன்றுடன் நிறைவடையும் ஒலிம்பிக்.. இதுவரை இந்தியா வென்ற பதக்கங்கள் பட்டியல் இதோ!

ஆண்களின் சருமமும் பெண்களின் சருமத்தை விட சற்று கரடுமுரடாக இருக்கும். பருவநிலை மாற்றங்கள், தூசி, மாசு மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் ஆண்களின் தோலை பாதிக்கிறது. இதன் காரணமாக ஆண்கள் பல கெமிக்கல்களை பயன்படுத்தி தங்கள் சருமங்களை பாதிப்படைய செய்கின்றன. இயற்கை முறையில் ஆண்களின் சருமத்தை பராமரித்துக்கொள்ளும் சில டிப்ஸ்கள் உங்களுக்காக..

  • ஒரு பாத்திரத்தில் சிறிது ஆலிவ் எண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் காபி பவுடர் ஆகியவற்றை எடுத்து, இவற்றை நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் மெதுவாகத் தடவி 15 நிமிடம் வரை உலர விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் உங்கள் பளபளப்பாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள். இதன்மூலம், உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடனும் மென்மையாகவும் காட்சியளிக்கும்.
  • பருக்கள் தொல்லை உங்களுக்கு அதிகமாக இருந்தால் வேப்ப இலையை பேஸ்டாக அரைத்து, அதனுடன் சந்தன தூள், பாதாம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சிறிது நேரத்திற்குபின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். அதன் பிறகு, முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • எலுமிச்சை சாறு ஒரு இயற்கையாகவே முக அழகினை பராமரிக்கும் திறமையை பெற்றுள்ளது. இதில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே  ஃபேஸ் வாஷ் மூலம் ஃபேஸ் வாஷ் செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே எலுமிச்சை சாற்றில் முகத்தை கழுவலாம்.
  • முகம் வறண்டு இருந்தால் எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் சேர்த்து, இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும்.
  • அன்னாசிப்பழம் தூசியை அகற்றி புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. ஒரு துண்டு அன்னாசிப்பழத்தால் முகத்தை தேய்த்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவடையும்.
  • பச்சை பப்பாளியை பேஸ்ட் செய்து, இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைக்கவும். அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • ஆரஞ்சு சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் இயற்கை பண்பு உள்ளது. ஆரஞ்சு சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்கே பலன் தெரியும்.
  • சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. தினமும் தூங்கும் முன் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் 15 நிமிடம் தேய்த்தால், முகம் பொலிவாக மாறும்.

ALSO READ: Know Yourself: உங்கள் பெயர் D ல் ஆரம்பிக்கிறதா? நிச்சயம் இப்படி பட்டவர்களாகதான் இருப்பீர்கள்..!

இந்த டிப்ஸுடன், நேரத்துக்கு ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வது நல்லது. இதனுடன் போதுமான ஓய்வு மிக முக்கியம். கண்ணுக்கு போதுமான தூக்கம் கிடைத்தால் நீங்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?