5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cleaning: பாக்டீரியா அதிகம் வாழும் டவல், பெட்ஷீட்கள்.. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்?

Bedsheet Cleaning: பெட் ஷீட்டை எப்போது துவைக்க வேண்டும் என்பதை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளித்தால் அல்லது குளிர்காலத்தில் ஸ்வெட்டரில் தூங்கினால், உங்கள் பெட்ஷீட்கள் விரைவில் அழுக்காகாது, பாக்டீரியாக்கள் தங்காது.

Cleaning: பாக்டீரியா அதிகம் வாழும் டவல், பெட்ஷீட்கள்.. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்?
பெட்ஷீட் (Image: canva)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 01 Nov 2024 18:48 PM

தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் ஒரு மனிதனுக்கு தேவை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு உங்கள் பெட் மற்றும் தலையணை சரியான முறையில் சுத்தமாக இருந்தால் மட்டுமே, நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும். தூங்க செல்வதற்கு முன், தலையணை உறைகள் மற்றும் பெட்ஷீட்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களிலும் பாக்டீரியாக்கள் குவிய தொடங்கி, பின் வரும் நாட்களில் தொற்றுநோயை ஏற்படுத்தும். எனவே, இவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை சுத்தம் செய்வது நல்லது.

ஆராய்ச்சியின் படி, வியர்வை, எச்சில், தலை பொடுகு மற்றும் இறந்த சரும செல்கள் போன்றவை உங்கள் உடலில் இருந்து நேரடியாக, நீங்கள் பயன்படுத்தும் துண்டுகள், தலையணைகள் மற்றும் பெட்ஷீட்களில் குவிய தொடங்கும். இதன் காரணமாக, இவைகள் அனைத்தும் பாக்டீரியாக்களாக வளர்ந்து பூஞ்சை தொற்றுநோயை ஏற்படும் அபாயம் உள்ளது. அந்தவகையில், இவைகளை எப்படி சுத்தமாக வைத்து, நம் உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Heart Attack: 30 நாட்களுக்கு முன்பே தோன்றும் மாரடைப்பு அறிகுறிகள்… இப்படி இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

பாக்டீரியாக்கள்:

துண்டுகள், தலையணை கவர்கள் மற்றும் பெட்ஷீட்களை அடிக்கடி சுத்தம் செய்யவில்லை என்றால், அவற்றில் பாக்டீரியாக்கள் குவிய தொடங்கும். எனவே, உங்கள் துண்டு, தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்பு ஆகியவற்றை துவைக்காமல் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள பூஞ்சை உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

எப்படி பாதுகாப்பது..?

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தொற்றுநோய் பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் பயன்படுத்தும் துண்டுகளை துவைக்க வேண்டும். அதேபோல், வாரத்திற்கு ஒரு முறை தலையணை உறைகள் மற்றும் பெட்ஷீட்களை மாற்றவும் அல்லது துவைத்து பயன்படுத்தவும். அதே நேரத்தில், உங்கள் தலையணையை வேறு ஒருவர் பயன்படுத்தியிருந்தால், அதில் இருக்கும் தலையணை உறைகளை துவைக்காமல் பயன்படுத்த வேண்டாம்.

துவைக்க கஷ்டம் என்றால் இப்படி சுத்தம் செய்யுங்கள்:

பெட்ஷீட்கள், டவல்கள் மற்றும் தலையணை கவர்களை அடிக்கடி துவைக்க கஷ்டமாக இருக்கிறது என்றால்,  வெந்நீர் காயவைத்து அதில் முக்கி முக்கி எடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், அதில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழிந்து உங்களுக்கு பாதுகாப்பை தரும். இவை அனைத்தையும் முக்கி எடுப்பதற்கு முன் டெட்டால் உள்ளிட்ட சில கிருமி நாசினிகளை சிறிது வெந்நீரில் ஊற்றி கொள்ளலாம். இது கிருமிகளை அழிப்பது மட்டுமின்றி, தலையணை உறை மற்றும் டவலை மென்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கும்.

ALSO READ: Gas Problem Solution: அடிக்கடி வயிற்றில் வாயு உருவாகி தொல்லையா? உடனடி நிவாரணம் பெற என்ன செய்யலாம்?

வெயிலில் காய போடுங்கள்:

துவைக்கவும் கஷ்டமாக உள்ளது, வெந்நீரில் முக்கி எடுக்கவும் கஷ்டமாக உள்ளது என்றால் இவை அனைத்தையும் சூரிய ஒளியில் நேரடியாக காய போடலாம். இது உங்கள் தலையணை கவர் மற்றும் பெட்ஷீட்களில் இருக்கும் பாக்டீரியாவை நீக்கும். பெட்ஷீட்கள் மட்டுமின்றி படுக்கை மெத்தைகளிலும் சூரிய ஒளி போடுவது நல்லது.  சூரிய ஒளி நன்றாகவும், பிரகாசமாகவும் இருந்தால், உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது வெயில் படும் இடங்களில் குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் போடுங்கள். இவை பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

பெட்ஷீட்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கலா..?

பெட் ஷீட்டை எப்போது துவைக்க வேண்டும் என்பதை நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளித்தால் அல்லது குளிர்காலத்தில் ஸ்வெட்டரில் தூங்கினால், உங்கள் பெட்ஷீட்கள் விரைவில் அழுக்காகாது, பாக்டீரியாக்கள் தங்காது. மறுபுறம், நீங்கள் நாள் முழுவதும் சுற்றிவிட்டு, அப்படியே குளிக்காமல் வியர்வையுடன் படுக்கைக்கு தூங்க சென்றால், நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை பெட்ஷீட்களை துவைக்க வேண்டும்.

நீங்கள் தூய்மையாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை படுக்கை விரிப்புகளை துவைக்கலாம். படுக்கை விரிப்பை எப்போது கழுவ வேண்டும் என்பது அதன் பயன்பாட்டைப் பொறுத்தது. ஆனால், நீங்கள் அன்றாட பயன்படுத்தும் துண்டுகளை தினமும் துவைத்து பயன்படுத்துவது நல்லது.

Latest News