Beetroot Benefits: பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! - Tamil News | | TV9 Tamil

Beetroot Benefits: பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Beetroot Benefits: பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

பீட்ரூட்

Updated On: 

21 Jun 2024 09:38 AM

பீட்ரூட் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட காய்கறியாக உள்ளது. இதனை சாம்பாராக வைத்து சாப்பிடுவதைக் காட்டிலும் பொறியலாகவும், ஜூஸாகவும் பெரும்பாலான் மக்கள் எடுத்து வருகின்றனர். குளிர்காலங்களில் அதிக அளவிலான பீட்ரூட்டை எடுத்துக்கொளவது நன்மையளிக்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்து காணப்படுவதால், 43 மில்லிகிராம் கலோரிகள் கிடைகின்றன.

Also Read: International Yoga Day 2024: உயர் இரத்த அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை.. அனைத்திற்கு ஒரே தீர்வாய் யோகாசனம்..!

மேலும் சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்றவற்றில் இருக்கும் நச்சுக்களை நீக்கி பாதுகாக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள, பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வருவதன் மூலம் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படுவதாகவும், முதல் கட்ட புற்றுநோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு குணமாக்கும் தன்மையையும் பெற்றுள்ளது.

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பாதுகாக்கவும், பார்வை திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது. பீட்ரூட் ஜூஸ் தினசரி பருகுவதன் மூலம் முகம் பிராகசமாகவும், பொலிவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. வெயில் காலத்தினால் ஏற்படக்கூடிய சிறு நீரக எரிச்சலை குறைக்க உதவுகிறது.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பை சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும். பீட்ரூட்டை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலம் வைட்டமின் பி1 அதிகரித்து, இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகமாகிறது.

Also Read: ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? யார் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்

நீரில் கரையும் நார்ச்சத்துக்கள் பீட்ரூட்டில் மிக அதிக அளவில் உள்ளதால் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரிக்ச் செய்யும். பெருங்குடல் நீரை அதிகமாக உறிஞ்சாமல் பார்த்துக் கொண்டு, பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்கிறது.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், பீட்ரூட்டை தங்களுடைய உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப்புண் விரைவில் சரியாகிறது. தினமும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகிறது. இதுமட்டுமில்லாமல், தீக்காயங்கள், சருமபிரச்சினைகள் போன்றவற்றிற்கு தீர்வாக அமைகிறது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!