5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Barefoot Walking: வெறுங்காலுடன் நடப்பது இந்த பிரச்சனைகளை சரி செய்யுமா? தீமைகளையும் தெரிஞ்சுகோங்க!

Health Tips: தினமும் காலையில் 15 முதல் 20 நிமிடங்கள் வெறுங்காலுடன் நடப்பது போதுமானது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பசுமையான புல்வெளி, பூங்கா மற்றும் கடற்கரை போன்ற இடங்களில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்தபின் வெறுங்காலுடன் நடக்கலாம். இதை தினமும் பின்பற்றுவது மூலம் உடலின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.

Barefoot Walking: வெறுங்காலுடன் நடப்பது இந்த பிரச்சனைகளை சரி செய்யுமா? தீமைகளையும் தெரிஞ்சுகோங்க!
வெறுங்காலுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 14 Sep 2024 16:27 PM

இன்றைய காலக்கட்டத்தில் மோசமான வாழ்க்கை முறையால் மக்கள் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் பிபி போன்ற பிரச்சனைகள் பொதுவானவை. எனவே, உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது மிக முக்கியம். இதற்காக மக்கள் தினமும் ஜிம், யோகா, நடைப்பயிற்சி உள்ளிட்ட சிலவற்றை செய்கின்றனர். அதேபோல், தினமும் காலையில் வெறுங்காலுடன் நடப்பது அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை தரும். அதாவது தரையில் வெறுங்காலுடன் நடப்பதால் இதயம், மன ஆரோக்கியம் மற்றும் தசைகளுக்கு நன்மை பயக்கும். வெறுங்காலுடன் நடப்பதற்கு கிரவுண்டிங் அல்லது எர்த்திங் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, உடலில் நேர்மறை ஆற்றல் பாய்கிறது. இதனுடன், உடலில் இரத்த ஓட்டம் மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அந்தவகையில், வெறுங்காலுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Tomato Benefits: இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் தக்காளி.. பல நன்மைகளை கொடுக்கும்!

எவ்வளவு நேரம் வெறுங்காலுடன் நடக்கலாம்..?

தினமும் காலையில் 15 முதல் 20 நிமிடங்கள் வெறுங்காலுடன் நடப்பது போதுமானது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பசுமையான புல்வெளி, பூங்கா மற்றும் கடற்கரை போன்ற இடங்களில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்தபின் வெறுங்காலுடன் நடக்கலாம். இதை தினமும் பின்பற்றுவது மூலம் உடலின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.

நல்ல தூக்கத்தை தரும்:

நீண்ட நேரம் தூங்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு வெறுங்காலுடன் நடப்பது சிறந்த நன்மையை தரும். இது உங்களுக்கு ஏற்படும் தூக்கக் கோளாறு பிரச்சனையை சரி செய்து, இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும். வெறுங்காலுடன் நடப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்து நன்றாக தூங்க உதவுகிறது.

கண் பார்வை தெளிவு:

நீங்கள் வெறுங்காலில் நடக்கும்போது அது உங்கள் பாதத்தில் அழுத்தத்தை கொடுக்கும். இது உங்கள் கண்ணின் நரம்புடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. வெறுங்காலுடன் நடக்கும்போது இந்த அழுத்த புள்ளியை தூண்டு உங்கள் ஒட்டுமொத்த பார்வையை மேம்படுத்த உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

வெறுங்காலுடன் நடப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, உடல் பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.

வீக்கத்தை குறைக்கும்:

உடல் செல்கள் சேதமடைவதால் வீக்கம் ஏற்படுகிறது, இது புற்றுநோய், முதுமை, இதய பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். நடைப்பயிற்சி நில எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட உதவுகிறது. இது உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும்:

வெறுங்காலுடன் நடப்பது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவி செய்யும். வெறுங்காலுடன் நடப்பது உங்கள் மூளைக்கு மிகவும் ஊக்கமளிப்பதுடன், பதட்டத்தையும் குறைக்கும். உங்கள் காலடியில் இயற்கையை உணருவது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும்:

காலணி அல்லது ஏதேனும் பாதணிகளை அணிந்து கொண்டு நடக்கும்போது, ​​கால்களின் உணர்வு நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்காது. காலணிகள் முழுவதும் உணர்வு நரம்புகளை பாதுகாக்கின்றன. அதேசமயம் வெறுங்காலுடன் நடப்பது நமது கால்களின் உணர்ச்சி நரம்புகளை செயல்பட வைப்பதுடன், உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.

ALSO READ: Sleeping Position: குப்புற படுத்து தூங்கினால் நல்லதா..? எப்படி தூங்குவது நன்மை தரும்?

வெறுங்காலுடன் நடப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • வெறும் காலுடன் நடக்கும்போது உடைந்த கண்ணாடி அல்லது கூர்மையான கற்கள் குத்தி காயம் ஏற்பட வாய்ப்புண்டு.
  • வெறுங்காலுடன் நடப்பது கால் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. பொது இடங்களில் வெறுங்காலுடன் நடப்பதால் பாதங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நுழையும்.
  • கடினமான பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பது உடலின் மற்ற பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
  • அதிக அழுத்தம் காரணமாக முதுகுவலி, கால் வலி அல்லது முழங்கால் வலிக்கு வழிவகுக்கும்.
  • நீங்கள் வெறும் காலுடன் நடக்கும்போது வலி அல்லது அசௌகரியத்தை உணர ஆரம்பித்தால், உடனடியாக செருப்பு அணிந்து கொள்வது நல்லது.
  • வெறுங்காலுடன் நடப்பது கடுமையான பாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது குதிகால் வலியை அதிகரிக்கும். இது எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

 

Latest News