கற்றாழை இத்தனை குணப்படுத்துமா? லிஸ்ட் படிச்சா கண்டிப்பா சாப்பிடுவிங்க! - Tamil News | | TV9 Tamil

கற்றாழை இத்தனை குணப்படுத்துமா? லிஸ்ட் படிச்சா கண்டிப்பா சாப்பிடுவிங்க!

Updated On: 

30 Jun 2024 15:46 PM

தோல் பராமரிப்பு முதல் உடல் எடை குறைவது போன்ற பலவற்றிற்கு கற்றாழையில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் உதவியாக உள்ளது. பொதுவாக கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி1, பி2 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

1 / 6தோல்

தோல் பராமரிப்பு முதல் உடல் எடை குறைவது போன்ற பலவற்றிற்கு கற்றாழையில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் உதவியாக உள்ளது. பொதுவாக கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி1, பி2 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

2 / 6

கற்றாழையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடனட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளதால் இதனை தோல் அழற்சி மற்றும் முடி பராமரிப்பு போன்றவற்றிற்கு நல்ல தீர்வாக அமைந்துள்ளது.

3 / 6

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு கற்றாழை மிகச்சிறந்த தீர்வாக உள்ளது. எனவே, உணவில் கற்றாழையை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது

4 / 6

கற்றாழை உணவில் சேர்த்துக் கொள்வது நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. டைப் நீரழிவு நோயால் பாதிக்க்பபட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவியாக உள்ளது என தெரிகிறது.

5 / 6

கற்றாழை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பயன்படுத்தலாம். கற்றாழையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும், செரிமான மண்டலத்தையும் சீராக செயல்பட உதவியாக உள்ளது.

6 / 6

கற்றாழையை எளிமையாக சாப்பிடுவதற்கான ஒரே வழி கற்றாழையை ஜூஸ் செய்து சாப்பிடுவதுதான். முதலில் கற்றாழையின் மேல் தோல நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தண்ணீர், இனிப்பிற்காக தேன் கலந்து நன்றகா கலந்து அப்படியே குடிக்கலாம். (Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version