Drinking Milk at Night: தினமும் நைட்ல பால் குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க முதல்ல.. - Tamil News | benefits of drinking milk at night in tamil | TV9 Tamil

Drinking Milk at Night: தினமும் நைட்ல பால் குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க முதல்ல..

பாலில் தூக்கத்தை தரவழைக்கும் டிரிப்டோபான் என்ற அத்தியாவசிய அமினோ அமிலம் இருக்கிறது. இது நமது உடலில் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாக உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து நமது பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Drinking Milk at Night: தினமும் நைட்ல பால் குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க முதல்ல..

பால்

Updated On: 

01 Aug 2024 10:30 AM

நம்மில் பலருக்கும் இரவில் தூங்குவதற்கு முன்பு பால் குடிக்கும் பழக்கம். இருப்பினும், பெரும்பாலானோருக்கு இரவில் பால் குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? என்று சந்தேகம் இருக்கும். உண்மையில், இரவில் பால் குடிக்கும் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. ஏனென்றால், பாலில் தூக்கத்தை தரவழைக்கும் டிரிப்டோபான் என்ற அத்தியாவசிய அமினோ அமிலம் இருக்கிறது. இது நமது உடலில் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாக உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து நமது பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் வெதுவெதுப்பான பால் குடிப்பதால், இதுபோல பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். தற்போது இந்த பதிவில் இரவில் பால் குடிப்பவர்கள் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Also Read: Coimbatore Tour: குதூகலமாக கோவைக்கு ஒரு டூர் போடுங்க.. சுற்றி பார்க்க இவ்வளவு இடம் இருக்கு!

நன்றாக தூக்கம் வரும்

பாலில் உள்ள டிரிப்டோபான் மற்றும் பயோஆக்டிவ் பெப்டைடுகள் உள்ளன, இவை நமது உடலில் ஹாப்பி ஹார்மோன்களின் (டிரிப்டோபான்) உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், பதட்டம் மற்றும் மன அழுத்தம் முழுவதுமாக குறைந்து, உடலையும் மனதையும் அமைதியாக்கும். எனவே, இரவில் பால் குடிப்பது இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கும். தூக்கமின்மையால அவதிப்படுவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு 1 டம்ளர் பால் குடித்து வந்தால், தூக்கமின்மையே பறந்துபோய்விடும்.

எலும்புகளை பலப்படுத்தும்

பாலில் அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது. இது நமது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. இரவில் பால் குடிப்பதால், இரவு முழுவதும் உடல் முழுவதும் கால்சியம் சீராக இருக்கும். பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுக்கிறது. மேலும், குழந்தைகளும் வளரும் பருவத்தில் தினமும் பால் குடித்துவந்தால், அவர்களின் எலும்புகள் வலுவாக இருக்கும், வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், பற்களுக்கு வலிமையை தருகிறது. 

Also Read: Chicken Cutlet: சிம்பிளான முறையில் கிரிஸ்பி சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

இளமையான சருமத்தை பெறலாம்

பாலில் வைட்டமின் பி12 சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், சருமம் பளபளப்புடன் இருக்கும். எனவே, தினமும் இரவில் பால் குடித்து வருவதன் மூலம் இளமையான சருமத்தை பெறலாம். இதுமட்டுமல்லாமல், பாலில் உள்ள வைட்டமின் ஏ நமது உடலில் புதிய செல்களை உருவாக்கி, பல விதமான தோல் நோய்களில் இருந்து நமது சருமத்தை பாதுக்காக்கிறது.

ஸ்ட்ரெஸ் பஸ்டர்

தூங்குவதற்கு முன் ஒரு கப் பால் குடிப்பது, மன அழுத்தத்தைக் குறைக்க அற்புதமான வழி என்றே சொல்லலாம்.  பாலில் உள்ள புரதம், லாக்டியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால், தசைகள் தளர்வடைகிறது. மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோன் அளவை குறைத்து, ஹாப்பி ஹார்மோன்களை அதிகரிக்கிறது.

செரிமான பிரச்சனைகளை போக்கும்

இரவில் குளிர்ந்த பால் குடித்துவருவதன் மூலம் அமிலத்தன்மையிலுருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிற பொதுவான வயிறுச் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும், பாலில் உள்ள கால்சியம் சத்து வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தன்மையை குறைகிறது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!