Fitkari Benefits: உடலுக்கு பல பல நன்மைகளை கொடுக்கும் படிகாரம்.. இப்படி பயன்படுத்தி பலனை பெறுங்கள்!
Benefits of Fitkari: படிகாரம் மற்றும் மஞ்சளை ஒன்றாக சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இப்படியான சூழ்நிலையில், உடலின் எந்தெந்த பிரச்சனைகளுக்கு படிகாரம் மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
உலகத்தில் உள்ள பல பொருட்கள் நம் உடலுக்கு பல வகைகளில் நன்மை தரும். அவைகளில் முக்கியமான ஒன்று பரிகாரம். படிகார கற்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை சஎஇ செய்வதில் நன்மை பயக்கும். அந்தவகையில், இந்த படிகார கற்களுடன் மஞ்சள் கலந்து தடவி வந்தால், இதன்மூலம் பல வகைகளில் நன்மை கிடைக்கும். மஞ்சளிலும் பல ஆயுர்வேத நன்மைகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இப்படியான சூழ்நிலையில், உடலின் எந்தெந்த பிரச்சனைகளுக்கு படிகாரம் மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
காயம்:
படிகாரம் மற்றும் மஞ்சளை பேஸ்ட் போல் செய்து உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், கீறல்கள் மீது போடலாம். இது காயங்களை விரைவில் குணமாக்க உதவி செய்யும். மேலும், இது சரும தொற்றுகள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
தோல் பளபளப்பு:
படிகாரம் மற்றும் மஞ்சள் பேஸ்ட் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது முகத்தில் பூசுவதன்மூலம், சருமத்திற்கு பளபளப்பு கிடைப்பது மட்டுமின்றி, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் மற்றும் பருக்கள் போன்றவற்றை குறைக்கும்.
பல் வலி:
சொத்தை பல்லால் அவதிப்படுபவர்களுக்கு மஞ்சள், படிகார பேஸ்ட் சிறந்த நிவாரணத்தை தரும். மேலும், இது பல் வலியை குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. சொத்தை பற்களில் இருக்கு பாக்டீரியாக்களை படிகாரம் மற்றும் மஞ்சள் நீக்கி வலியை குறைக்கும்.
பேஸ்ட்டாக பயன்படுத்த விரும்பாதவர்கள் மஞ்சள் மற்றும் படிகாரம் தண்ணீரிலும் வாய் கொப்பளிக்கலாம். இதை கொண்டு வாய் கொப்பளித்த பிறகு, வலி குறைய தொடங்கும்.
முடி ஆரோக்கியம்:
படிகாரம் கரைத்த தண்ணீரில் வாரத்திற்கு ஒரு முறை குளித்தால் முடி உதிர்வு பிரச்சனை குறைந்து, முடிக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
தொண்டைக்கு நன்மை:
சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனையால் நீண்டகாலம் அவதிப்பட்டு வருபவர்களுக்கு படிகாரம் நன்மை தரும். அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு முறை படிகாரத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டையை சுத்தம் செய்து இருமலிலிருந்தும் நிவாரணம் கொடுக்கும்.
அரிப்பிலிருந்து நிவாரணம்:
உடல் மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்க படிகாரம் சிறந்தது. அந்தவகையில், படிகாரத்தை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து, அரிப்பு இருக்கும் இடங்களில் தடவினால் அரிப்பு குறையும்.
செரிமான மண்டலத்திற்கு ஆரோக்கியம்:
படிகாரம் தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடையும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடிப்பது வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் பெரிதும் உதவும்.
ஈறு பிரச்சனை:
ஈறு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வை படிகாரம் தரும். அதன்படி, படிகார தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் ஈறுகள் வலுவடையும். அதேபோல், வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் படிகார தண்ணீரை கொப்பளிப்பதன் மூலம், மவுத் பிரஷனராக செயல்படும்.
படிகாரம் – மஞ்சள் பேஸ்ட் தயார் செய்வது எப்படி..?
- ஒரு சிறிய பாத்திரத்தில் சம அளவு மஞ்சள் மற்றும் படிகாரம் கலந்து சிறிதளவு தண்ணீரை சேர்த்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளலாம்.
- படிகார பொடிய செய்ய அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நொறுக்கி பொடி செய்யலாம். அப்படி இல்லையென்றால், இரவு முழுவதும் ஊறவைத்தி படிகாரத்தை மென்மையாக்கி, அரைக்கலாம்.
- மஞ்சள் மற்றும் படிகாரட் பேஸ்டை முகத்தில் மாஸ்க் போல் போட விரும்புவோர், முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.
- தினமும் இந்த கலவையை பயன்படுத்தாமல், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தடவலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)