Garlic: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பூண்டின் நன்மைகள்…
Benefits of Garlic: தவறான உணவு பழக்கங்களால் உடலில் தேவையில்லாத கெட்டு கொலஸ்ட்ரால்கள் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பூண்டு மிகவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. பூண்டை தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
மாரடைப்பு என்பது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு ஆபத்தான நோயாக மாறியுள்ளது. இந்த நோயானது அதிக மக்களின் உயிரை பறிக்கக் கூடியதாக இருக்கிறது. உலகில் அதிக மக்களின் இறப்புக்கு இந்த மாரடைப்பு நோய் வழிவகுக்கிறது. தவறான உணவு பழக்க வழக்கங்கள் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றினால் ஏற்படும் இந்த மாரடைப்புக்கு இன்னும் சில காரணங்களும் உள்ளது. அதில் முக்கியமானது கெட்ட கொழுப்பு. இந்தக் கொழுப்பு அதிகமாக உடலில் சேரும்போது இதயத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் லிப்போ புரோட்டின் தமனிகளில் பிளேக் உருவாவதற்கும் இது வழி வகுக்கிறது. மேலும் இது இதயத்தில் ஒரு அடைப்பை உருவாக்குவதன் மூலமாக மாரடைப்பு ஏற்படலாம்.
உணவு மாற்றங்கள் இயற்கையாகவே குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதத்தின் அளவை குறைக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது. அந்த வகையில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும் முக்கியமான பொருள்களில் ஒன்று பூண்டு. பூண்டின் ஆரோக்கிய நன்மைக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள அல்லுசின் போன்ற சேர்மங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டின் நன்மைகள்:
பூண்டு சமையலில் பயன்படுத்தும் போது ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக கருதப்படுகிறது. இது எலும்பு உறுதியாவதற்கும் உதவுகிறது. குரல் வளத்தை மேம்படுத்தவும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பூண்டை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும் என்று தெரிவித்துள்ளது.
Also Read: Strawberry: நாள்பட்ட நோயால் அவதியா? – தீர்வளிக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்!
குளிர்காலத்தில் பூண்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு 63% குறைகிறது என்றும் அறிக்கை தெரிவித்திருக்கிறது. பூண்டில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் பூண்டில் மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது.
ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கிராம் பச்சை பூண்டை உட்கொள்வதன் மூலமாக ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. பக்க விளைவுகள் இல்லாமலும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு இந்த அளவினால் பூண்டை மக்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பூண்டில் இருக்கும் அல்லிசின் என்ற சேர்மானம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. பூண்டை நசுக்கும் போதோ அல்லது வெட்டும் போதோ இது வெளியாகிறது. இந்த சேர்மம் தான் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நிறுவகிக்க உதவுகிறது.
கொழுப்பை கரைக்க உதவும் பூண்டு:
பூண்டை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. அதிக அடர்த்தி கொழுப்பு புரதம் என்னும் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. ரத்தத்திலிருந்து குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதத்தை கரைக்க இந்த உயர்ந்த அடர்த்தி கொழுப்பு பொருத்தம் பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் பூண்டு முக்கிய பங்கு வைக்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது இரண்டுமே இதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
கொழுப்புகளை குறைக்கவும் பூண்டின் பலனை அனுபவிக்கவும் தினமும் பூண்டை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் ஒன்று அல்லது இரண்டு கிராம் பூண்டுகளை நசுக்கியோ அல்லது நறுக்கியோ சில விடங்கள் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக இதில் அல்லிசின் சேர்மம் அதிகளவில் உற்பத்தி ஆகிறது. எனவே சாப்பிடுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக பூண்டை நசுக்கி வைத்து பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது. இதை தனியாக சாப்பிட முடியாதவர்கள் சாலடுகளில் கலந்தோ, உணவில் தூவியோ அல்லது தண்ணீருடனோ உட்கொள்ளலாம்.
Also Read: Low Blood Pressure: குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இதுதான்.. முன்னெச்சரிக்கை முக்கியம்..!
ஆய்வுகளின் படி, மற்ற வகை பூண்டுகளுடன் ஒப்பிடும்போது AGE என்று அழைக்கப்படும் பூண்டு சாறு கொழுப்பை கரைப்பதில் மிகச்சிறந்ததாக விளங்குகிறது. மேலும் பூண்டு எண்ணெய் மற்றும் பூண்டு தூள் ஆகியவை கொலஸ்ட்ராலை சிறந்த முறையில் குறைக்கிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)