Sleeping Benefits: தினசரி 8 மணி நேரம் தூக்கம் ஏன் முக்கியம்? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

Proper Sleep: தூக்கமின்மை மனநிலை அல்லது வயிற்றுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதனால்தான் மக்கள் தினமும் இரவில் 6-8 மணி நேரம் தூங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சரியான தூக்கம் இல்லாததால், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், போதுமான தூக்கம் பெறுவது மிகவும் முக்கியம்.

Sleeping Benefits: தினசரி 8 மணி நேரம் தூக்கம் ஏன் முக்கியம்? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

தூக்கம் (Image: GETTY)

Published: 

06 Oct 2024 13:19 PM

தூக்கம் என்பது ஒவ்வொரு நாளும் முக்கியமான ஒன்று. நீங்கள் ஒரு நாள் கூட சரியாக தூங்கவில்லை என்றால், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் பாதிப்பு உங்களை ஆட்கொள்ள தொடங்கும். தூக்கம் நம் உடலுக்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு மனதுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒழுங்காக தூங்கவில்லை என்றால் உங்கள் மன அழுத்தம், காரணமே இல்லாமல் பிறர் மீது எரிச்சல் போன்றவைகளை வெளிப்படுத்தும். குறிப்பிட்ட வயதை கடந்த ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது முக்கியது. அந்தவகையில், 8 மணி நேரம் தூங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், தூக்கம் கெடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே பார்ப்போம்.

ALSO READ: AC Side Effects: ஏசி இல்லாமல் இருக்க முடியலையா..? இந்த பிரச்சனைகளை அன்போடு அழைக்கிறீர்கள்!

உடல் ஆரோக்கியம் மேம்படும்:

நீங்கள் தினசரி 8 மணி நேரம் நல்ல தூக்கத்தை பெறும்போது, உங்களது உடலில் எடை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். மேலும், நல்ல தூக்கம் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

மன ஆரோக்கியம்:

நல்ல தூக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், தூக்கமானது பதட்டம் மற்றும் மனசோர்வை போக்குகிறது. மேலும், எரிச்சல், மன அழுத்தம் மற்றும் மனநிலை கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது.

சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்கும்:

நீங்கள் தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, இது உங்கள் உடலின் சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை பாதிக்க செய்கிறது. மேலும், இது டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. தூக்கமின்மை உடல் பருமனை அதிகரிக்க செய்யும். இதனால் வளர்சிதை மாற்றம் குறையும்போது, சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் நன்றாக தூங்கினால், நீரிழிவு, அல்சைமர் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:

நீங்கள் 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கும்போது, இது உங்களின் இதயத்தை பாதுகாப்புடன் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. நீங்கள் 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும்போது, இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து, இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

நினைவாற்றல்:

முழுமையாக தூக்கத்தை பெறுபவர்களுக்கு மூளை சிறப்பாக செயல்படும். இதன் காரணமாக நினைவக சக்தி அதிகரிக்க செய்கிறது. நீங்கள் நன்றாக தூங்கும்போது, உங்கள் மூளையும் ஓய்வெடுக்கும். இதனால், நீங்கள் புதிய நாளை தொடங்கும்போது கவனம், நினைவகம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை சிறப்பாக செயல்படும்.

நோய் எதிர்ப்பு மண்டலம்:

நீங்கள் தினசரி சரியாக தூங்காதபோது, இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்க தொடங்குகிறது. இதன் காரணமாக, நீங்கள் விரைவில் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவீர்கள். போதுமான அளவு தூங்கும்போது, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு நன்றாக வேலை செய்து உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். போதுமான தூக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, உடல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது.

தூக்கமின்மை மனநிலை அல்லது வயிற்றுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதனால்தான் மக்கள் தினமும் இரவில் 6-8 மணி நேரம் தூங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சரியான தூக்கம் இல்லாததால், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், போதுமான தூக்கம் பெறுவது மிகவும் முக்கியம். இதன் மூலம் நாள்பட்ட நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

ALSO READ: Cauliflower Benefits: காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..? ஆரோக்கியத்திற்கு சிறந்தது..!

இருட்டியவுடன் உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இந்த ஹார்மோன் நமது தூக்க சுழற்சியை கட்டுப்படுத்தி நம்மை தூக்கத்தை நோக்கி தள்ளுகிறது. இரவின் இருளில் அது வேகமாக உருவாகும்போது, ​​விரைவான தூக்கம் ஏற்படுகிறது. தூக்கத்தைத் தள்ளிப்போட்டு இரவில் விழித்திருப்பவர்களில், இந்த ஹார்மோன் உற்பத்தி செயல்முறை குறைகிறது. இதனால், இவர்களது தினசரி தூக்கம் கெடுக்கிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!