5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipes: பெங்காலி ஸ்டைலில் பெப்பர் சிக்கன்.. சுருக்கென்று சூப்பர் சண்டே ஸ்பெஷல் ரெசிபி!

Pepper Chicken: சிக்கனில் வெறும் குழம்பு, வறுவல் போன்ற அன்றாட செய்யும் டிஷ்களை சாப்பிட்டு போர் அடிக்கிறதா..? அந்தவகையில் இன்று பெங்காலி ஸ்டைலில் பெப்பர் சிக்கன் எப்படி செய்யலாம் இன்று பார்க்கலாம். இந்த பெப்பர் சிக்கனை ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆசையை தூண்டும். பெப்பர் சிக்கனில் முக்கியப் பொருள் சிக்கன் மற்றும் மிளகுத் தூள். இவை இரண்டும் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Food Recipes: பெங்காலி ஸ்டைலில் பெப்பர் சிக்கன்.. சுருக்கென்று சூப்பர் சண்டே ஸ்பெஷல் ரெசிபி!
பெப்பர் சிக்கன் (Image: Freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 06 Oct 2024 14:56 PM

சிக்கன், மட்டன், மீன் போன்ற பெயரை கேட்டாலே அசைவ பிரியர்களுக்கு எச்சில் ஊறும். தினம் தினம் வித்தியாசமான அசைவ உணவுகளை சாப்பிட மக்கள் விரும்பிகிறார்கள். சிக்கனில் வெறும் குழம்பு, வறுவல் போன்ற அன்றாட செய்யும் டிஷ்களை சாப்பிட்டு போர் அடிக்கிறதா..? அந்தவகையில் இன்று பெங்காலி ஸ்டைலில் பெப்பர் சிக்கன் எப்படி செய்யலாம் இன்று பார்க்கலாம். இந்த பெப்பர் சிக்கனை ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆசையை தூண்டும். பெப்பர் சிக்கனில் முக்கியப் பொருள் சிக்கன் மற்றும் மிளகுத் தூள். இவை இரண்டும் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.

சிக்கனில் இயற்கையாகவே புரதச்சத்து அதிகம் உள்ளது. புரதம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. மேலும் மிளகின் நன்மைகளை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிளகு சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக மிளகு நம் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும். மேலும், மிளகானது புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இது வயிற்று ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ALSO READ: Food Recipes: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ​​சிக்கன் வெள்ளை பிரியாணி.. 15 நிமிடத்தில் சூப்பர் டிஸ் தயார்..!

பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரைக்கிலோ
வெங்காயம் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
கருப்பு மிளகு – சிறிதளவு
கொத்தமல்லி தூள் – அரை ஸ்பூன்
தயிர் – கால் கப்
முந்திரி – 5
மிளகு தூள் – ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – கால் கப்
மல்லி – சிறிதளவு
சோம்பு
சீரகம்
வர மிளகாய்

ALSO READ: Food Recipes: காலை ஸ்நாக்ஸாக சாப்பிட சூப்பர் டிஸ்.. பனீர் சீஸ் கட்லெட் ஈஸியா இப்படி செய்து கொடுங்க!

பெங்காலி ஸ்டைல் ​​பெப்பர் சிக்கன் ஃப்ரை ரெசிபி:

  • கடைகளில் வாங்கிய அரை கிலோ சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒன்றுக்கு மூன்று முறை நன்றாகவும் சுத்தமாகவும் கழுவவும்.
  • சிக்கனுடன் தயிர் , இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • எடுத்து வைத்திருந்த முந்திரியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின் எடுத்து நன்றாக விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
  • இப்போது கேஸை ஆன் செய்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
  • எண்ணெய் சூடானதும் கடுகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
  • ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய், மல்லி ஆகியவற்றை நன்றாக வதக்கவும்.
  • வறுத்த மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்படிப் பொடி செய்த இந்த பொருட்கள் கம கம என வாசனையை வெளிப்படுத்தும்.
  • கடாயில் வெங்காயம் மாரினேட் செய்து குளிரூட்டப்பட்ட சிக்கனை சேர்த்து நன்கு வதக்க தொடங்கவும்.
  • அதன்பின், சிக்கனில் உள்ள தண்ணீர் இறங்கும் வரை சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
  • தண்ணீர் நன்றாக சூட்டில் வற்றும் வரை காத்திருந்து, பின்னர் கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன், மிக்ஸியில் அரைத்து பொடி செய்திருந்த மசாலா தூள்களை அதில் தேவைகேற்ப போடவும்.
  • பின் அரைத்து தயார் செய்து வைத்திருந்த முந்திரி விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தொடர்ந்து, கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  • சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
  • இப்போது அடுப்பை மூடி மிதமான தீயில் வேக விடவும்.
  • தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டு சிக்கனில் மிளகு பொடி மற்றும் மசாலா இறங்கும் வரை வைக்கவும்.
  • அவ்வளவுதான் பெங்காலி ஸ்டைல் ​​பெப்பர் சிக்கன் ரெடி. இது மிகவும் சுவையானது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும்.

Latest News