முடி கொட்டுதா? இந்த உணவுகளை சேர்த்துக்கொண்டால் பலன் உண்டு!

Tips for Control Hair fall: இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தலைமுடி உதிர்வு. தலைமுடி பல காரணங்களால் உதிர்கிறது. இதனால் இளைஞர்கள் சிறுவயதிலேயே வழுக்கைத் தலையுடன் காணப்படுகிறார்கள். நாம் அன்றாடம் வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வை தடுக்கலாம்.

முடி கொட்டுதா? இந்த உணவுகளை சேர்த்துக்கொண்டால் பலன் உண்டு!

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

04 Dec 2024 08:49 AM

இளம் வயதினர் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தலைமுடி உதிர்வு. இந்தத் தலைமுடி உதிர்வால் ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தலைமுடி அளவுக்கு அதிகமாக கொட்டுவதால் இள வயதிலேயே வழுக்கை தலையை அடைகிறார்கள். தலைமுடி உதிர்வு மனநிலையை பெரிதும் பாதிக்கிறது. மரபியல் ரீதியான காரணங்கள், வைட்டமின் குறைபாடு, அதிக மன அழுத்தம், மருந்து மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வந்து விடுகிறது. டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதால் தலைமுடியின் வேர்க்கால்களை பாதிக்கிறது. இதனால் தலைமுடியின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

எனவே இந்த குறிப்பிட்ட ஹார்மோனை கட்டுப்படுத்தவும் அல்லது அளவுக்கு அதிகமாக சுரந்தால் அதன் வீரியத்தை குறைக்கவும் நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் அதற்கான ஆற்றல் உண்டு. அந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது மூலமாக முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும்.

பாதாம்:

பாதாமில் வைட்டமின் ஈ சத்து அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பாதாமில் 25.63 mg வைட்டமின் ஈ சத்து இருக்கிறது. இது ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்வதோடு முடியின் வேர்களில் உண்டாகக்கூடிய பாதிப்பையும் தடுக்கிறது. மேலும் பாதாமில் இருக்கக்கூடிய லைசின் என்னும் அமினோ அமிலம் அதிக அளவிலான டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பை தடுக்கிறது.

தேங்காய் எண்ணெய்:

பெரும்பாலும் அனைவரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து வருவார்கள். ஆனால் தினமும் காலையில் ஒரு டேபிள்‌ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முடி உதிர்வது கட்டுப்படுகிறது. மேலும் மிக உறுதியான முடி வளர்ச்சியை உண்டாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் இருக்கக்கூடிய லாரிக் என்னும் அமினோ அமிலம் வழுக்கை தலைவராமல் பாதுகாக்கிறது.

மேலும் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி பாக்டீரியா பண்புகள் உச்சந்தலையில் ஏற்படக்கூடிய தொற்றுகளை தடுப்பதோடு முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். ஆனால் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Also Read: வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?

முட்டை:

முட்டையில் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதம், பயோட்டின், சல்பர் போன்ற சத்துக்களும், வைட்டமின் ஏ, டி போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. மனித தலைமுடி முழுவதுமே கெரோட்டின் என்ற புரதத்தால் ஆனது. ஒரு முட்டையில் 7 கிராம் வரையிலான புரதம் இருக்கிறது. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் பயோட்டின் என்ற சத்தும் அதிகளவில் உள்ளது.

இது ஆண்களின் வழுக்கை தலைக்கு காரணமான ஹார்மோனின் கட்டுப்படுத்துகிறது. வழுக்கை தலையில் இருந்து விடுதலைப் பெற நினைப்பவர்கள் தினமும் காலையில் இரண்டு அவித்த முட்டை சாப்பிட வேண்டும்.

கொழுப்பு நிறைந்த மீன்கள்:

மத்தி, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் இந்த மீன்களின் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. உறுதியான முடி வளர்ச்சிக்கு இது உதவி செய்கிறது.

பச்சைக் கீரைகள்:

பொதுவாக தலையில் நன்றாக முடி வளர்வதற்கு உச்சந்தலையில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதற்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடியது கீரைகள். கீரைகளில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலெட் போன்ற சத்துக்கள் புதிய சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதோடு முடி வேருக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.

இதன் மூலமாக அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் கீரையில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் வழுக்கை விழுவதற்கான ஹார்மோன்களை தடுக்கிறது.

Also Read: கர்ப்பிணிகள் சீதாப்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிரீன் டீ:

இந்த கிரீன் டீயில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. வழுக்கை தலைக்கு காரணமான ஹார்மோனை கட்டுப்படுத்துவதோடு அதன் வீரியத்தையும் குறைக்கிறது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடென்ட்கள் முடி வேர்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?