New Year Resolution: புத்தாண்டு 2025.. பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்!

New Year 2025 Resolution: 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தொகைய சூழ்நிலையில் மக்கள் பல்வேறு வகையான தீர்மானங்களை எடுப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. நீங்களும் இந்தப் புத்தாண்டு தீர்மானத்தை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் இருங்கள்.

New Year Resolution: புத்தாண்டு 2025.. பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்!

புத்தாண்டு 2025

Published: 

17 Dec 2024 06:41 AM

வருடத்தின் கடைசி மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் பலர் தங்கள் பழக்கவழக்கங்களில் சிலவற்றை மாற்ற நினைப்பார்கள். சிலர் புதிய பழக்கவழக்கங்களை பின்பற்ற முடிவு செய்கிறார்கள். இது புத்தாண்டு தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் தேவைக்கேற்ப தீர்மானம் எடுக்கப்படுகிறது. பலர் சில நல்ல பழக்கங்களை கடைபிடிக்க தீர்மானம் எடுக்கிறார்கள். குறிப்பாக ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் இருக்க சிலர் ஆரோக்கிய சாப்பாடு சாப்பிடுவது அல்லது உடல் எடையை குறைப்பது போன்ற தீர்மானங்களை மேற்கொள்கிறார்கள்.

நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக நாம் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. மேலும் நேர்மறையான வாழ்க்கை முறையை பின்பற்றும் பொழுது அந்த ஆண்டு முழுவதும் நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்க முடிகிறது. அதில் கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான தீர்மானங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சமநிலை உணவு:

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமச்சீரான உணவை உட்கொள்வது மிகவும் அவசியமாக. புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவுகளை நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நொறுக்கு தீனிகள், அதிகப்படியான இனிப்புகள் மற்றும் உப்பு ஆகியவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

வழக்கமான உடற்பயிற்சி:

ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். இது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே 2025 ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

குடிநீர்:

உடலை நீரேற்றமாகவும்‌ சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்கவும் சிறந்த செரிமானம் மற்றும் உடலின் ஆற்றலை பராமரிக்கவும் தண்ணீர் மிகவும் முக்கியமானது. எனவே தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கும் முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் உடலுக்கும் தண்ணீர் தேவை மாறுபடும். எனவே உங்கள் உடலின் தேவைக்கேற்ப தண்ணீரை குடியுங்கள்.

Also Read: Health Tips: 30 வயதுக்குள் மிரட்டும் இதய நோய்.. பாதுகாப்பது எப்படி?

சரியான தூக்கம்:

தூக்கம் நம் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால் அது மனநிலையில் மாற்றம், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். அது தவிர ஆரோக்கியத்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குங்கள்.

இப்பொழுதெல்லாம் மக்கள் இரவு முழுவதும் மொபைல் ஃபோன்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் இரவில் தூங்குவதற்கு தாமதமாகிறது. இதனால் அவர்களின் தூக்கம் பாதிப்படைகிறது. எனவே 2025 ஆம் ஆண்டு முதல் சரியான நேரத்தில் தூங்கி காலையில் சரியான நேரத்தில் எழுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நேரத்திற்கு சாப்பாடு:

நாம் என்ன சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். சரியான நேரமும் உணவின் அளவும் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுத்துவதோடு உடல் ஆற்றலை பராமரிக்க உதவுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நள்ளிரவில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம் மேலாண்மை:

இன்றைய வேகமான வாழ்க்கையில் மன அழுத்தம் பொதுவானது. ஆனால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், மனசோர்வு, பதட்டம் மற்றும் உடல் பிரச்சினைகளை இதை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்தை வரும் ஆண்டிலிருந்து நிர்வகித்துக் கொள்ளுங்கள்.

Also Read: Low Blood Pressure: குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இதுதான்.. முன்னெச்சரிக்கை முக்கியம்..!

இதற்காக தியானம், யோகா மற்றும் பல மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை பின்பற்றுங்கள். இது தவிர வேலை அழுத்தம் இருந்தால் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள். மன அமைதி பெறக்கூடிய இடங்களுக்குச் செல்லுங்கள். 2025 ஆம் ஆண்டு முதல் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.

காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்
கொய்யா பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகள்!
இந்தியாவின் தலைசிறந்த செஸ் வீரர்கள்!