5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Healthy Tips: முதுமையிலும் இளமைத் தோற்றத்துடன் இருக்க இதை செய்யுங்கள்…

Tips for being young: வயதாகாமல் எப்போதும் இளமையாக இருக்கவே எல்லோருக்கும் விருப்பம். ஒவ்வொரு பிறந்தநாளிலும் நமக்கு வயதாகிறது என்ற கவலை பெரும்பாலானோருக்கு வந்து விடுகிறது. முதுமை என்பது இயற்கை. ஆனால் அதைக் கண்டு பெரும்பாலானோர் கவலை கொள்கிறார்கள். முகங்களில் சுருக்கங்கள் தொடங்கும், முன்பு போல் வேலை செய்ய முடியாது இது போன்ற காரணங்களால் பெரும்பாலும் முதுமையைக் கண்டு அஞ்சுகிறார்கள். முதுமையை தவிர்க்க முடியாது ஆனால் ஒரு சில விஷயங்கள் மூலம் தாமதப்படுத்த முடியும். முதுமையிலும் எப்படி இளமை போல் இருப்பது என்ற சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Healthy Tips: முதுமையிலும் இளமைத் தோற்றத்துடன் இருக்க இதை செய்யுங்கள்…
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 21 Oct 2024 13:30 PM

வயதாகாமல் எப்போதும் இளமையாக இருக்கவே எல்லோருக்கும் விருப்பம்.முதுமை என்பது இயற்கை. ஆனால் அதைக் கண்டு பெரும்பாலானோர் கவலை கொள்கிறார்கள். ஆனால் வயதாவது தடுக்க முடியாது. ஆனால் சில முயற்சிகள் மேற்கொண்டால் இளமை தோற்றம் பெருமளவில் மாறாமல் தடுக்கலாம். முதலாவதாக சன்ஸ்கிரீன், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதுமட்டுமின்றி, சுருக்கங்கள் வராமல் தடுக்கவும், சருமப் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே பெண்கள் வெளியே செல்லும்போது மறக்காமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். எஸ்.பி.எப். 30-க்கு மேல் உள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதில் சுவனமாக இருங்கள். அதே போல, நீர் சார்ந்தது, கனிம அடிப்படையிலானது என 2 வடிவங்களில் சன்ஸ்கிரீன் வருகிறது. உங்கள் சரும நிறத்துடன் பொருந்தக்கூடிய சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.

பழங்கள்,காய்கறிகள்:

பழங்கள் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடு வது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி நிறைந்தவை, இளமையான சருமத்தை பராமரிக்க உதவும். சுருக்கங்களைத் தடுப்பதிலும், சருமத்தின் பொலிவை தக்கவைப்பதிலும் இது மிகவும் நன்மை தரும். எனவே, ஆரஞ்சு, அவகேடோ மற்றும் புரோக் கோலி அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர், சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. சர்க்கரை பானங்களை தவிர்ப்பது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

முகத்துக்கு மசாஜ்:

தினமும் ஏதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு சருமத்தை, குறிப்பாக முகத்தை மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது சரும செல்களுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்குகிறது. தோல் நல்ல நிறத்தைப் பெறவும், சுருக்கங்களை நீக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

Also Read: Diwali 2024: பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்!

புரதம்:

புரதம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட் கொள்வது, தோல் தசைகளை வலுப்படுத்தும். இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கவும், இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் புரத சத்துக்கள் நம் உடல் சரியாக இயங்க வழி செய்கிறது. இதனால் முதுமையில் முடங்கி விடாமல் வேலைகள் செய்வதற்கு உதவுகிறது.

ஈரப்பதம்:

சருமத்தை நன்கு ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். இல்லை என்றால் சருமம் வறண்டு, பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். சருமம் முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தும்.

தூக்கம்:

நல்ல ஆரோக்கியத்துக்கும், சருமத்துக்கும் தூக்கம் அவசியம். போதுமான தூக்கம் இல்லை என்றால் சருமத்தில் சுருக்கங்களும், கரும்புள்ளிகளும் தோன்றும். எனவே, தூக்கம் முக்கியமானது.

மாதுளை:

மாதுளை முதுமை வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் இருக்கக்கூடிய யூரொலித்தேன் – ஏ, செல்களுக்கு சத்து அளிக்கக்கூடிய இடங்களுக்கு சென்று அதை பழுது பார்ப்பதால் எளிதில் முதுமை ஆவதில் இருந்து தடுக்கிறது. உடலில் ஏற்படக் கூடிய சரும சுருக்கங்களை இது தடுக்கிறது.

பப்பாளி:

நமது உடம்பில் கொலாஜன் உற்பத்தி குறையும் பொழுது நமது சருமங்களில் சுருக்கம் விழுகிறது. பப்பாளியில் பெப்பெயின் என்னும் கெமிக்கல் அதிகமாக உள்ளது. இந்தப் பெப்பெயின் உடலில் கொலாஜன் என்னும் புரதத்தை அதிகப்படுத்துகிறது. எனவே பப்பாளி அதிகமாக உட்கொள்ளும்போது நமது சருமங்களில் சுருக்கங்கள் இல்லாமல் பாதுகாக்கிறது.

ஆலிவ் ஆயில்:

நாம் முதுமை அடையும் போது சில மரபணு வெளிப்பாடு ஏற்படும். இந்த மரபணு வெளிப்பாட்டை மாற்றி அமைக்கும் தன்மை இதற்குண்டு. இதனால் முதுமையும் தாமதப்படுத்தப்படும். ஆலிவ் ஆயில் நம் சருமங்களில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

Also Read: இளம் வயதிலேயே மூட்டு வலி வருகிறதா? இந்த விஷயங்களில் கவனம்!

மற்ற விஷயங்கள்:

அதிக புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு உணவுகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அவ்வப்போது ஒரு நல்ல ‘பேஸ் பேக்’கை பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும் உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ரசாயனங்கள் கொண்ட தோல் பராமரிப்பு பொருட்களை தவிர்க்கவும். முடிந்த வரை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.

(குறிப்பு: இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. உள்ளடக்கங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. TV9 Tamil  எதற்கும் பொறுப்பாகாது.)

Latest News