5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kitchen Tips: பால் புளித்து‌ விட்டதா? அதை வைத்து என்னென்ன செய்யலாம்?

Milk Tips : பால் நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உணவு பொருளாக மாறி இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் பால் புளித்து விடுகிறது. பலருக்கு பால் கெட்டுப் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வேறு வழி இல்லாமல் கீழே கொட்டி விடுவது வழக்கம். எனவே பால்‌ கெட்டு‌ விட்டால் அதை என்ன‌ செய்யலாம்? பால் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு சிறந்த வழிமுறைகள்.

Kitchen Tips: பால் புளித்து‌ விட்டதா? அதை வைத்து என்னென்ன செய்யலாம்?
பால் (Photo Credit: Jose A. Bernat Bacete/Moment/Getty Images)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 12 Sep 2024 20:48 PM

புளித்த பாலின் மறு உபயோகம்: உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பால் ஒரு முக்கிய உணவாகும். காலையும் தேனீரில் தொடங்கி இரவு வரை பால் பல்வேறு வடிவில் உட்கொள்ளப்படுகிறது. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் எப்பொழுதும் பால் பிரிட்ஜில் இருப்பதை பார்க்க முடியும். பால் நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உணவு பொருளாக மாறி இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் பால் புளித்து விடுகிறது. பலருக்கு பால் கெட்டுப் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வேறு வழி இல்லாமல் கீழே கொட்டி விடுவது வழக்கம். ஆனால்‌ புளித்தப் பாலை பல சுவாரசியமான முறைகளில் மீண்டும் பயன்படுத்தலாம்.

புளித்த பாலை அருந்தலாமா?

நொதித்தல் மற்றும் அமிலமயமாக்கல் காரணமாக பால் புளிப்பு தன்மையை அடைகிறது. ஆனால் இந்த புளித்த பாலை அருந்தலாமா என்ற கேள்வி நம்முள் எழுகிறது. பால் சரியாக குளிரூட்டப்பட்டிருந்தால் பால் பாக்கெட்டில் அச்சடிக்கப்பட்டிருக்கும் தேதிக்கு பிறகு ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். பாலை குடிக்க விரும்பினால் அதன் வாசனை மூலமாகவே‌ அதை நாம் தீர்மானிக்கலாம். பாலில் துர்நாற்றமோ அல்லது வேறுவித சுவையோ இல்லாமல் இருந்தால் அந்தப் பாலை தாராளமாக பயன்படுத்தலாம். எனினும் அந்தப் பால் சிறிது புளிப்பு தன்மையை அடைந்திருந்தாலும் அந்த பாலை பயன்படுத்தலாம். ஆனால் அதை பாலாக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற பானமாக மாற்றி பயன்படுத்தக்கூடாது.

புளித்தப் பாலை மீண்டும் பயன்படுத்தும் முறை:

மோர் தயாரிக்கலாம்: பால் புளித்ததை கண்டறிந்தால், அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மோராக பயன்படுத்தலாம். உங்கள் சமையலில் மென்மையாகவும் பஞ்சு போன்றதாக மாற்ற தேவை இருந்தால் இந்த மோரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேக்கிங் உணவுகளில் பயன்படுத்தலாம்: ரொட்டி, கேக் அல்லது பிற பேக்கரி வகை உணவுகளை செய்தால் இந்த புளித்த பாலை பயன்படுத்தலாம். இது உணவை மென்மையாக மாற்ற உதவுகிறது.

உறை தயிர் தயாரிக்கலாம்: புளித்த பாலை தயிர் போன்று உறையாகும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அதில் இருக்கும் நீரை வடித்து சோறு, சப்ஜி, பருப்பு அல்லது ரொட்டியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் புரதச்சத்து அதிகரிக்கும்.

பாலாடை கட்டி தயாரிக்கலாம்: புளித்த பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பின்பு அதில் உள்ள நீரை வடிகட்டி விட்டால் கெட்டியான பாலாடை கட்டி கிடைக்கும். இதில் ரசகுல்லா போன்ற இனிப்பு வகையோ அல்லது பன்னீரோ செய்யலாம்.

உணவுகளில் புளிப்பு சுவைக்காக பயன்படுத்தலாம்: புளித்துப் பாலை சூப் அல்லது மேஸ்ட் பொட்டேட்டோ‌ (mashed potatoes) போன்ற உணவு வகைகள் சேர்க்கலாம். இப்படி சேர்க்கும் பொழுது அது கிரீம் தன்மை மற்றும் புளித்த சுவையை பெறுகிறது. ஆனால் பாலை சேர்க்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அதிக அளவு சேர்த்தால் உணவில் இருக்கக்கூடிய மற்ற சுவை சமநிலையில் இருக்காது.

Also Read: Ghee: நீங்கள் கடையில் வாங்கும் நெய் சுத்தமானதா..? வீட்டிலேயே எப்படி கண்டறிவது?

பால் கெட்டுப் போவதிலிருந்து எப்படி தடுக்கலாம்?

ஷாப்பிங்கின் இறுதியில் பாலை எடுங்கள்: நீங்கள் பால் வாங்க முடிவு செய்து மளிகை கடைக்கு சென்றால் நீங்கள் மளிகை பட்டியலில் பாலை கடைசியாக வையுங்கள். இதன்மூலம் பால் குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே அதிக நேரம் இருப்பது தடுக்கப்படுகிறது. இதனால் கெட்டுப் போகும் அபாயம் குறைகிறது.வெப்பமான காற்றின் வெளிப்பாடு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே பால் வாங்கியவுடன் உடனே வீட்டிற்கு சென்று குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். அதேபோல் பாலை வீடுகளுக்கு டெலிவரி மூலமாக பெற்றாலும் அதை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும்.

பாலைக் கொதிக்க வைக்கவும்: பாக்கெட்டில் இருக்கும் பால் சரியாக குளிரூட்டப்பட்டிருந்தாலும், வெளியே வெப்பநிலை அதிகமாக இருந்தால் எளிதில் பால் கெட்டுப் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே வீட்டிற்கு வந்தவுடன் பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும். இப்படி கொதிக்க வைப்பதன் மூலமாக புளிப்பு தன்மையை உண்டாக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்கள் கொல்லப்படுகிறது. பிறகு பாலை நன்றாக ஆற வைத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்துக் கொள்ளலாம்.

குளிர்சாதன பெட்டியில் பாலை சேமிக்கும் முறை: பாலை குளிர்சாதன பெட்டியில் வைப்பது மட்டும் போதாது. அது கெட்டுப் போகாதவாறு முறையாக சேமிக்க வேண்டும். பால் பாக்கெட் அல்லது பாட்டில்களை குளிர்சாதன பெட்டியின் கதவுகளில் வைக்க கூடாது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் கதவு திறக்கப்படும்போது இருக்கும் அதிக வெப்பநிலையை வெளிப்படுத்தும். எனவே பாலை குளிரூட்டும் தட்டு பகுதியில் (Chiller Tray Section) வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியின் கதவுகள் திறந்தாலும் இந்தப் பகுதி மூடியே இருக்கும். அதேபோல் இந்தக் குளிரூட்டும் தட்டுப்பகுதியில் மற்ற உணவுகளை வைப்பது தவிர்க்க வேண்டும். நீங்கள் பாலை பாத்திரத்தில் மாற்றி இருந்தால் அது நடுப்பகுதியின் பின்னால் வைக்க வேண்டும். கதவைத் திறந்தால் வெளியில் இருக்கும் வெப்பநிலை எளிதில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.

தேவை முடிந்த பின் மீதி பாலை வெளியே வைக்காதீர்கள்: தேவைக்கு முன்பாக மட்டும் பாலை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுக்க வேண்டும். பயன்பாட்டிற்கு போக மீதி பால் இருந்தால் அதை உடனடியாக மீண்டும் குளிர் சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும். அதிக நேரம் பாலை வெப்ப நிலையில் வைத்திருந்தால் எளிதில் கெட்டுப் போகலாம்.

கூடுதல் பாலை உறைவிப்பானில் (Freezer) வைத்துக் கொள்ளுங்கள்: பாலை குறைந்தது ஆறு வாரங்கள் வரை உறவிப்பானில் வைத்து பயன்படுத்தலாம். இதனால் பாலில் இருக்கும் சத்தோ சுவையோ மாறுபடாது. தேவைக்கு அதிகமாக பாலை வாங்கி இருந்தால் அதை தாராளமாக உரைவிப்பானில் வைக்கலாம். ஆனால் பால் பாக்கெட்டில் அச்சடிக்கப்பட்டிருக்கும் தேதிக்கு முன்பாக அந்தப் பாலை உரைவிப்பானில் வைத்திருக்க வேண்டும்.

Also Read: Almond Tea: சத்துகள் நிறைந்த பாதாம் டீ.. ஈசியா செய்ய வழிமுறை இதோ!

Latest News