5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Blood Donation: இரத்த தானம் செய்வதில் இவ்வளவு நன்மைகளா..? புதிய இரத்தம் உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..?

Health Tips: நிறைய பேர் இரத்த தானம் செய்வதால் உடல் பலவீனம் அடையும் என்றும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் நடப்பது இல்லை. இரத்த தானம் மாறாக உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும். அந்தவகையில், இன்று இரத்த தானம் செய்வதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும்..? எத்தனை நாட்களில் புதிய ரத்தம் உருவாகும் உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Blood Donation: இரத்த தானம் செய்வதில் இவ்வளவு நன்மைகளா..? புதிய இரத்தம் உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..?
இரத்த தானம் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Oct 2024 19:56 PM

தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம். விபத்துகள் அல்லது அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் உயிருக்கு போராடும் நபர்களுக்கு உயிரை காப்பாற்ற இந்த இரத்த தானம் பெரிதும் உதவு. நிறைய பேர் இரத்த தானம் செய்வதால் உடல் பலவீனம் அடையும் என்றும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் நடப்பது இல்லை. இரத்த தானம் மாறாக உடலுக்கு ஆரோக்கியத்தையே தரும். அந்தவகையில், இன்று இரத்த தானம் செய்வதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும்..? எத்தனை நாட்களில் புதிய ரத்தம் உருவாகும் உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Protein Powder: கடைகளில் வாங்கினால் அதிக செலவா? வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை செய்வது எப்படி..? செய்முறை இங்கே!

இரத்த தானம் செய்வதற்கு முன், நன்கொடையாளர் உங்கள் நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் அளவைச் சரிபார்க்கும் ஒரு சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரத்த தானம் செய்யும்போது, ​​இரத்த இழப்பை ஈடுசெய்ய உங்கள் உடல் செயல்படுகிறது. இந்த செயல்முறை புதிய இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது, உங்கள் இரத்த அணுக்களை ஆரோக்கியமாகவும் செயல்படவும் வைக்கிறது. இரத்த தானம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரத்த தானம் செய்வது உங்கள் இரத்தத்தின் பாகுத்தன்மையைக் குறைக்கிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். மேலும், அடிக்கடி இரத்த தானம் செய்வது கல்லீரல், வயிறு, நுரையீரல், பெருங்குடல் மற்றும் தொண்டை புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

இரத்த தானம் செய்தபிறகு உடல் எப்படி இயல்பு நிலைக்கு திரும்ப என்ன செய்யலாம்..?

இரத்த தானம் செய்வதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், நீங்கள் சிறிது பலவீனத்தை உணர்வீர்கள். இதையடுத்து, நீங்கள் உடனடியாக புத்துணர்ச்சி பெற பேரிச்சம் பழம் போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது நல்லது. இரத்த தானம் செய்த பிறகும் இரும்புச்சத்து நிறைந்த கீரை, பட்டாணி, பரும்ப்பு, பீன்ஸ், பச்சை காய்கறிகள் மற்றும் திராட்சைகளை சாப்பிடுவதும் நன்மை தரும். இதன் காரணமாக, உங்களுக்கு விரைவாக இரத்தம் உருவாகி, உடல் ஆற்றல் பெரும். உங்களுக்கு பசி இல்லை என்றால் ஜூஸ், தேங்காய் தண்ணீர், தயிர், மோர் போன்றவற்றை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இதனுடன், போதுமான தூக்கம் கிடைக்கும்.

இரத்த தானம் செய்த பிறகு புதிய இரத்தம் உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..?

ஒரே ஒரு யூனிட் மட்டுமே இரத்தம் மட்டுமே எடுப்பார்கள். இது உடலில் இருக்கும் இரத்தத்தில் பதினைந்தில் ஒரு பங்காலும். இரத்த தானம் செய்தவுடன், உடல் அதிலிருந்து மீள தொடங்குகிறது. 24 மணிநேரத்தில் புதிய ரத்தம் உருவாகிறது. உணவுப்பழக்கத்தை சரியான அளவிலும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும். பழங்கள், பழச்சாறு மற்றும் பால் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.

இரத்த தானம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:

  • பல வகையான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.
  • மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
  • இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
  • இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • எடையை கட்டுக்குள் வைக்க உதவும்
  • புற்றுநோய் போன்ற நோய்களில் ஆபத்தை குறைக்கும்.
  • உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
  • இரத்த தானம் செய்வது ஒருவரின் உயிரை காப்பாற்றுவதோடு மகிழ்ச்சியையும் தரும்.

ALSO READ: Tattoo Care Tips: டாட்டூ குத்த போகிறீர்களா? இந்த விஷயங்களை தெரிஞ்சுகிட்டு போங்க..!

இரத்த தானம் செய்யும்போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்..?

  • நீரேற்றத்துடன் இருப்பது நரம்புகளை எளிதாக கண்டறிய உதவி செய்யும். இரத்தம் கொடுக்கும்போதும், அதற்கு பிறகும் உடலுக்கு பலவீனம் காரணமாக மயக்கம் ஏற்படுவதை குறைக்கும்.
  • இரத்த தானம் செய்வதற்கு முன் காலை உணவை தவிர்க்காதீர்கள். இது தவிர, இரத்த தானம் செய்யும்போது அங்கு கொடுக்கப்படும் ஜூஸ் மற்றும் பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News