Blood Sugar: சர்க்கரை நோய்க்கு உட்கொள்ள வேண்டிய 5 பழங்களின் பட்டியல்..! - Tamil News | Blood Sugar: List of 5 fruits to eat for diabetes..! | TV9 Tamil

Blood Sugar: சர்க்கரை நோய்க்கு உட்கொள்ள வேண்டிய 5 பழங்களின் பட்டியல்..!

Updated On: 

22 May 2024 14:11 PM

Fruits: இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் இல்லாத மனிதனை பார்ப்பது அரிதாக உள்ளது. பிறந்த குழந்தை முதல் கருவுற்ற தாய்மார்கள், வயதானவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது.  சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் சாப்பிடக்கூடிய பழங்கள் குறித்து காணலாம். சர்க்கரை நோய்க்கு நீரிழிவு நோய் என்றும் மற்றொரு பெயர் உள்ளது. உடலில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுகளை மூன்று வேளையும் தவிர்க்காமல் உட்கொள்வது சிறப்பானது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் சர்க்கரை அளவு கூடினால், அவை இதய நோயான மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1 / 5சிட்ரஸ்

சிட்ரஸ் பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஏற்படுவதை குறைகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது.

2 / 5

சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் மாதுளை உட்கொள்வதால், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இவை சர்க்கரை நோயாளிக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் ஏற்ற ஒரு பழமாக அமைந்துள்ளது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உயர் இரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. புரத உணவுடன் சேர்த்து எடுத்துகொள்வது சிறப்பானதாக அமையும்

3 / 5

அவகேடோவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக அளவில் நன்மை பயக்கிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உணவுக்குப் பின் அதிகரிக்கக்கூடிய இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இந்த பழங்கள் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

4 / 5

உடல் எடையை குறைக்க முயற்சிக்க சில பழங்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்

5 / 5

பெர்ரி பழங்களில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக அமைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்த உதவுகிறது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version