Bone Health Tips: சிறுவயதிலேயே எலும்பு பலவீன பிரச்சனையா..? இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!
Health Tips: வயதாகும்போது மூட்டுவலி, ஆஸ்தியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளால் நடப்பது கூட கடினமாகிறது. மேலும், வாழ்க்கை முறை மற்றும் உணவுக் கோளாறுகள் இந்த பிரச்சனைகளை மேலும் அதிகரித்த செய்கிறது. இதன் காரணமாக எலும்புகள் வலுவாக இருக்கவும், பலவீனம் மற்றும் சேதத்தை தடுக்கவும் சிறு வயதிலிருந்தே சில முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
எலும்பு பலவீனம்: வயது அதிகரிக்கும்போது எலும்பு பலவீனம் மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சனைகள அதிகரிக்க தொடங்கும். வயதாகும்போது மூட்டுவலி, ஆஸ்தியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளால் நடப்பது கூட கடினமாகிறது. மேலும், வாழ்க்கை முறை மற்றும் உணவுக் கோளாறுகள் இந்த பிரச்சனைகளை மேலும் அதிகரித்த செய்கிறது. இதன் காரணமாக எலும்புகள் வலுவாக இருக்கவும், பலவீனம் மற்றும் சேதத்தை தடுக்கவும் சிறு வயதிலிருந்தே சில முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை சேர்ப்பதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் அபாயங்களை குறைக்கலாம். அந்தவகையில், மூட்டுவலியால் அவதிப்படுவோர் கீழே உள்ள குறிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.
ALSO READ: Mental Health Tips: பிஸியான வாழ்க்கையில் அதிகரிக்கும் மன அழுத்தம்.. எளிதாக போக்க சில வழிகள் இதோ!
வைட்டமின் டி:
உணவு பழக்கத்தில் நாம் சில தவறுகளை செய்கிறோம். இதனால் எலும்புகள் பலவீனமடைகின்றன. உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பதால், இவை எலும்புகளை பலவீனமடைய செய்கிறது. இதன் காரணமாக வைட்டமின் டி அதிகம் உள்ள உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பால், பாலாடைக்கட்டி, தயிர், பருப்பு வகைகள், உளுந்து போன்ற பொருட்களையும் உங்கள் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. அதேபோல், மீன், இறால் போன்ற கடல் உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஊதா நிற முட்டைக்கோஸ்:
ஊதா நிற முட்டைக்கோஸில் வைட்டமின் கே உள்ளது. இது உடலின் எழும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. அதேபோல், மூட்டு வலி இருந்தாலும் ஊதா நிற முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்வதன்மூலமும் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.
தொடர்ந்து, எலும்புகளின் வலிமையை பராமரிக்க வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் சி, புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், சில உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடலில் உள்ள சத்துகளை உறிஞ்சி தீங்கு விளைவிக்கிறது. அந்த உணவுகளை கீழே..
எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்..?
உப்பு நிறைந்த உணவுகள்:
அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகள் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இது எலும்புகலில் இருந்து கால்சியத்தை இழக்க வழிவகுக்கிறது. அதன்படி பிரட் ரோல்ஸ், பீட்சா, சாண்ட்விச், சூப், சிப்ஸ், பாப்கார்ன், ஸ்நாக் மிக்ஸ், சிக்கன், சீஸ், ஆம்லெட் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகமாக உட்கொள்வதால் எலும்புகள் இருந்து கால்சியம் மறைய தொடங்குகிறது.
மது:
மது அருந்துவது எந்த வகையிலும் உடலுக்கு நல்லது கிடையாது. இதை அருந்துவதன் மூலம், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உடலில் இருந்து உறிஞ்சப்படுகிறது. எனவே, இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
அதிக சர்க்கரை:
அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்வதால், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சில சத்துகள் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதன் காரணமாக மிட்டாய், கேக்குகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ்கள், இனிப்புகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
ALSO READ: Women’s Health: கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையா..? இந்த விதைகள் நல்ல தீர்வை தரும்..!
அதிக ஆக்சலேட்:
சில உணவுகளில் அதிக அளவு ஆக்சலேட் மற்றும் பைடேட்ஸ் கலவைகள் உள்ளன. இந்த உணவுகள் கால்சியத்தை உறிஞ்சுகின்றன. இத்தகைய உணவை உட்கொள்வது உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தும், இது எலும்புப்புரைக்கு வழிவகுக்கும். எனவே, பீன்ஸ், டீ உள்ளிட்டவற்றை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.