5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BP Drinks: உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய இந்த பானங்களை குடிங்க..

உயர் இரத்த அழுத்தம் அமைதியாக இருந்துக் கொண்டு உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய சைலண்ட் கில்லர். இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் பிற்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற மோசமான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த 5 வகையான பானங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை வேகமாக குறைக்க முடியும்.

BP Drinks: உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய இந்த பானங்களை குடிங்க..
மாதிரி புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Published: 27 Jul 2024 21:23 PM

இன்றைய ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களால் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை (BP) இருக்கிறது. சிலர் இதை இரத்தக் கொதிப்பு என்பார்கள். இது நமது உடலில் அமைதியாகவே இருந்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சைலண்ட் கில்லர். இந்த வியாதிக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்காவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும்.கடுமையான மன அழுத்தம், புகைப்பிடித்தல், உடல் பருமன், உட்கார்ந்த வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட கொழுப்பு உணவுகள், மது அருந்துதல், உப்பு அதிகமாக சாப்பிடுதல் போன்றவையே இந்த நோய்க்கு முக்கியமான காரணம். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர முறையான சிகிச்சை, ஆரோக்கியமான உணவு உட்கொள்வது மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதே சிறந்த வழி. இருப்பினும், சில பானங்களை சேர்த்துக் கொள்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்தத்தை வேகமாக குறைக்க முடியும்.

Also Read: வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸில் பாலிபினால்கள் மற்றும் டானின்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, தமனி பிளேக்கை குறைக்க உதவுகிறது. இரண்டு வாரங்களுக்கு தினமும் 1 கிளாஸ் (8 அவுன்ஸ்) மாதுளம் பழ ஜூஸ் குடித்து வருவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்க முடியும்.

செம்பருத்தி டீ

ஒரு மாதத்திற்கு தினமும் காலையில் 1 கப் செம்பருத்தி டீ குடித்து வரலாம். செம்பருத்தி டீயில் அந்தோசயனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தையும் அகற்றுகிறது. அதுமட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றுகிறது. இது இரத்த நாளங்களை தளர்த்துவதோடு, அதை விரிவுபடுத்தவும் உதவுகிறது. கல்லீரலில் பித்த நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. தினமும் 1 கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் ஒரு வாரத்திற்கு குடித்துவந்தால், இரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்க முடியும்.

திராட்சை பழ ஜூஸ்

திராட்சைப்பழத்தில் பொட்டாசியம், லைகோபீன், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே, வாரத்திற்கு 3 முறை 1 கிளாஸ் திராட்சை பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், திராட்சைப்பழம் மருந்துகளுடன் எதிர்வினை புரியக்கூடியவை என்பதால், திராட்சை பழ ஜூஸ் குடிப்பதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

Also Read: வெள்ளை சர்க்கரை உங்களது உடம்பில் என்னென்ன தீமைகளை உண்டாக்கும்..?

பெர்ரி ஸ்மூத்திஸ்

ப்ளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூ பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் அதிகளவு ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை, இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.  எனவே, வாரத்திற்கு ஒருமுறை இந்த பழங்களில் ஏதாவது ஒரு பழத்தை ஸ்மூத்தி செய்து குடிக்கலாம்.

Latest News