5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Breast Cancer: மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமல்ல..! ஆண்களுக்கும் வரலாம்.. இதுவே அறிகுறிகள்!

Health Tips: புற்றுநோய் என்பது உடலில் எங்கேயாவது அசாதாரண செல்கள் வளர்வதால் உருவாகும். அந்தவகையில், இந்த செல்கள் மார்பகத்தில் வளர ஆரம்பிக்கும்போது, அது மார்பக புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. மார்பக பகுதிகளில் செல்கள் ஒழுங்கற்ற முறையில் வளரும்போது ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.

Breast Cancer: மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமல்ல..! ஆண்களுக்கும் வரலாம்.. இதுவே அறிகுறிகள்!
மார்பகப் புற்றுநோய் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Oct 2024 16:42 PM

இன்றைய நவீன காலத்தில் புற்றுநோய் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த நோய் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்படுகிறது. புற்றுநோய்களில் 200 வகைக்கு மேற்பட்ட புற்றுநோய் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இதில், முக்கியமான ஒன்று மார்பக புற்றுநோய். மார்பக புற்றுநோய் பொதுவாக பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அந்தவகையில், இந்த மார்பக புற்றுநோய் பெண்களை மட்டுமே தாக்கும் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

ஆனால், இந்த மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் ஏற்படும். இது பல ஆண்களுக்கு தெரிவதில்லை. மார்புக புற்றுநோய் ஆண்களுக்கு அரிதாகவே ஏற்படுகிறது. அதாவது, இது குறைந்த எண்ணிக்கையிலான ஆண்களை மட்டுமே பாதிக்கும். ஆண்களுக்கு ஏற்படும் மார்பல புற்றுநோய் பெரும்பாலும் தாமதமாகவே கண்டறியப்படும். இருப்பினும், இது ஆடம்பத்திலேயே கண்டறியப்படவில்லை என்றால் பெண்களை போன்று ஆண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

ALSO READ: Walking Benefits: தினமும் 5,000 அடிகள் நடைபயிற்சி..! உடலில் இவ்வளவு கலோரிகளை எரிக்குமா?

மார்பக புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது..?

புற்றுநோய் என்பது உடலில் எங்கேயாவது அசாதாரண செல்கள் வளர்வதால் உருவாகும். அந்தவகையில், இந்த செல்கள் மார்பகத்தில் வளர ஆரம்பிக்கும்போது, அது மார்பக புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. மார்பக பகுதிகளில் செல்கள் ஒழுங்கற்ற முறையில் வளரும்போது ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. இருப்பினும், பெண்களை விட ஆண்களுக்கு மார்பக திசு குறைவாக உள்ளது, அதனால் ஆண்களுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இன்னும், சில சந்தர்ப்பங்களில், இந்த செல்கள் சில ஆண்களின் மார்பகங்களைச் சுற்றி உருவாகின்றன. இந்த புற்றுநோய் ஆண்களுக்கு மிகவும் தாமதமான வயதில் உருவாகிறது.

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்:

பெரும்பாலான புற்றுநோய்களை போலவே, மார்பல புற்றுநோயும் வயது அதிகரிக்கும்போது ஏற்படுகிறது. இதன் காரணமாக, வயதான ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

சில மரபணுக்களில் ஏற்படும் பரம்பரை ஜீன் காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. அதாவது, ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கு மரபணும் காரணமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சியில், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் இந்த புற்றுநோயின் ஆபத்து ஆண்களுக்கு அதிகரிக்கிறது. அதேபோல், அதிகமாக மது அருந்துவதும் ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாக்க வழிவகுக்கும்.

மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:

  • மார்பகப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக மார்பகத்தில் ஏற்படும் கட்டியாகும்.
  • மார்பக புற்றுநோயில், மார்பகத்தைச் சுற்றி வலியற்ற கட்டி உருவாகிறது. இது பெரும்பாலும் முலைக்காம்பைச் சுற்றி ஏற்படுகிறது.
  • முலைக்காம்பில் சிவத்தல், முலைக்காம்பில் மேலோடு உருவாகுதல் மற்றும் முலைக்காம்பிலிருந்து சில திரவங்கள் வெளியேறுதல் போன்றவை ஏற்படும்.
  • முலைக்காம்புகளைச் சுற்றி வெடிப்புகள் அல்லது காயங்கள் இருப்பதும் இதன் அறிகுறியாகும்.
  • இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக மருத்துவர்களை தொடர்பு கொள்வது நல்லது.

மார்பக புற்றுநோயை எவ்வாறு தடுப்பது?

  • மது அருந்துவதைக் குறைப்பதன் மூலம், ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும். இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
  • உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை நீக்குவது ஈஸ்ட்ரோஜனின் அளவைக் குறையும். இதன்மூலம், மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறையும்.
  • மருத்துவமனையில் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்வது நல்லது. இது உங்களுக்கு புற்றுநோயை தொடக்க நிலையை கண்டறிய உதவி செய்யும்.

ALSO READ: Diwali Diabetes-friendly Food: சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிட ஆசையா? ஆரோக்கியமான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம்!

சர்க்கரையை குறைத்து கொள்ளுங்கள்:

நமது உடலில் உள்ள அனைத்து செல்களும், புற்றுநோயாக இருந்தாலும் சரி, உடலுக்கு தேவையான ஆற்றலாக இருந்தாலும் சரி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனை முடிவில், அதிக வெள்ளை சர்க்கரை சாப்பிடுவது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மனிதர்கள் மீது இது உன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News