Breast Cancer: மார்பக புற்றுநோய் பற்றிய பயமா..? வீட்டிலேயே இப்படி பரிசோதனை செய்து பாருங்க!
Breast Cancer Symptoms: மார்பகத்தில் ஏதேனும் கட்டி இருப்பதாக உங்கள் தோன்றினால், இது சாதாரணமானதா அல்லது புற்றுநோய் கட்டிகள் என்பதை கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. தவறான உணவு பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையாலும் பல பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது மரணத்திற்கு வழிவகுக்கும்.
இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பெண்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெண்களை அதிகம் தாக்கும் நோய் மார்பக புற்றுநோய் என்று ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. மார்பக புற்றுநோய் என்பது மார்பக செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். அதாவது, செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர ஆரம்பிக்கும்போது இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வந்தாலும், சில நேரங்களில் இந்த புற்றுநோய் ஆண்களுக்கும் வருகிறது.
ALSO READ: Food Recipes: தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? சூப்பர் ரெசிபி இதோ!
மார்பகத்தில் ஏதேனும் கட்டி இருப்பதாக உங்கள் தோன்றினால், இது சாதாரணமானதா அல்லது புற்றுநோய் கட்டிகள் என்பதை கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. தவறான உணவு பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையாலும் பல பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது மரணத்திற்கு வழிவகுக்கும். அந்தவகையில், இன்று வீட்டிலேயே எப்படி மார்பக புற்றுநோயை வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்வது எப்படி இன்று இங்கே தெரிந்து கொள்வோம்.
மார்பக புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது..?
மார்பக புற்றுநோய் பெரும்பாலும் குழந்தை இல்லாத பெண்கள், தாய்ப்பால் குறைவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பெண்கள், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் உடைய பெண்களுக்கே மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இது தவிர, மாதவிடாய் முன்கூட்டியே தொடங்கும் அல்லது தாமதமாகும் பெண்களுக்கும் மார்பக புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும் கூறப்படுகிறது.
மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்
- வயதுக்கு ஏற்ப மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கும்.
- உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தால், உங்களுக்கும் வரலாம்
- துரித உணவுகள் மற்றும் உடல் உழைப்பு இல்லாமையும் கூட மார்பக புற்றுநோயை தோற்றுவிக்கலாம்.
- பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியில் பங்கு வகிக்கலாம்.
- உடல் பருமனால் அவதிப்படும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மார்பக புற்றுநோயை வீட்டிலேயே பரிசோதனை செய்வது எப்படி..?
‘மார்பக சுய பரிசோதனை’ என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையை பெண்கள் வீட்டிலேயே மேற்கொள்ளலாம். இதற்காக, பெண்கள் கண்ணாடி முன் நின்று மார்பகங்களை பரிசோதிக்க வேண்டும். அதாவது கட்டி, வீக்கம் அல்லது நீர்க்கட்டி போன்று ஏதேனும் ஒன்று உங்கள் கைகளால் உங்களது மார்பகங்களை அமுக்கும்போது உணர்ந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.
ALSO READ: Exclusive: மதிய உணவாக சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்..? டாக்டர் கொடுத்த டிப்ஸ்!
மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்ன..?
மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் மார்பகம் அல்லது அக்குள் பகுதிகளில் கட்டிகள் தோன்றும்.
- மார்பக அல்லது அக்குள் பகுதிகளில் தொடர்ந்து வலி
- மார்பக தோல் சிவத்தல்
- மார்பில் பெரிய மற்றும் வலியற்ற கட்டி
- ஒன்று அல்லது இரண்டு முலைக்காம்புகளிலும் சொறி
- மார்பக வடிவத்தில் மாற்றம்
- முலைக்காம்பிலிருந்து இரத்த போன்ற திரவம் வெளியேறுதல்
- மார்பகம் அல்லது முலைக்காம்பு எரிதல் அல்லது சுருங்குதல்
உங்கள் மார்பகங்களில் கட்டி ஏதேனும் இருப்பதை உணர்ந்தால், பீதி அடைய வேண்டும். பெரும்பாலான மார்பக கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மார்பக புற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழிகள்:
- மார்பக புற்றுநோயை தவிர்க்க வேண்டுமானால், உங்களிடம் இருக்கும் புகைபிடித்தல், சிகரெட் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
- தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மார்பக புற்றுநோயை வராமல் பெருமளவு தவிர்க்கலாம்.
- ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உட்கொள்வதன் மூலம், உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)