5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diabetes Food: சர்க்கரை நோயாளிகள் தேனும், வெல்லமும் சேர்க்கலாமா..? இவை பலன் தருமா..?

Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை சர்க்கரை தீங்கு விளைவிக்கும். வெள்ளை சர்க்கரையானது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, எந்தவொரு நபருக்கும் ஆரோக்கியமானது அல்ல. அதேநேரத்தில், வெல்லம் மற்றும் தேன் ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இவை இரண்டிலும் இயற்கையான இனிப்பு சுவை உள்ளது. இது ஆரோக்கியமானதும் கூட.

Diabetes Food: சர்க்கரை நோயாளிகள் தேனும், வெல்லமும் சேர்க்கலாமா..? இவை பலன் தருமா..?
சர்க்கரை நோய் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 06 Nov 2024 15:24 PM

உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் பிரச்சனைகளில் சர்க்கரை நோய் ஒன்று. இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். ஒன்று சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் சர்க்கரை நோய் டைப் 2 என இருக்கிறது. சர்க்கரை நோய் ஏற்படும் ஒரு நபருக்கு வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாட்டுடன் இருப்பது முக்கியம். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருந்துகளுடன் சேர்த்து வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அதேநேரத்தில் டைப் 1 சர்க்கரை நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழலை தரும். அந்தவகையில், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாமா, அதற்கு பதிலாக எவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

ALSO READ: Strawberry: இந்த சிவப்பு நிற பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..?

சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை சர்க்கரை தீங்கு விளைவிக்கும். வெள்ளை சர்க்கரையானது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, எந்தவொரு நபருக்கும் ஆரோக்கியமானது அல்ல. அதேநேரத்தில், வெல்லம் மற்றும் தேன் ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இவை இரண்டிலும் இயற்கையான இனிப்பு சுவை உள்ளது. இது ஆரோக்கியமானதும் கூட.

சுத்தமான தேன்:

உலகெங்கிலும் நடத்தப்பட்ட ப ஆராய்ச்சிகளில், தேன் சாப்பிடுவது உடலுக்கு கார்டியோமெட்டாபாலிக் நன்மைகளை தரும் என கண்டறியப்பட்டுள்ளது.ன் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சர்க்கரை போன்ற வளர்சிதை மாற்ற கோளாறுகளை கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது.

மேலும், சுத்தமான தேனில் காணப்படும் ஐசோமால்டுலோஸ், கோஜிபியோஸ், ட்ரெஹலோஸ், மெலசிடோஸ் போன்ற அரியவகை இனிப்புகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொழுப்பை குறைக்கவும் உதவி செய்கிறது.

தேன் உட்கொள்ளும் போது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். அதேநேரத்தில், உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் சுகாதார நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

வெல்லம்:

வெல்லம் பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரியமிக்க இனிப்பு ஆகும். வெல்லம் சர்க்கரையை விட வேதியியல் ரீதியாக மிகவும் சிக்கலானது. மேலும், இது சுக்ரோஸின் நீண்ட சங்கிலியை கொண்டுள்ளது. அந்தவகையில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இதை பயன்படுத்துவது கொஞ்சம் பாதுகாப்பானது. வெல்லத்தில் உள்ள இனிப்பு சுத்திகரிக்கப்படாதது. எனவே, சர்க்கரையை விட வெல்லத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

சர்க்கரை நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அவற்றை தொடர்ந்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். நமது உணவு, உடற்பயிற்சி போன்ற பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அந்தவகையில், பதப்படுத்தப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்ட தேன் போன்ற ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

ALSO READ: Mayonnaise Side Effects: மயோனைஸ் லவ்வரா நீங்கள்..? இதயத்திற்கு இவ்வளவு ஆபத்தை தரும்..!

வெல்லம் சாப்பிடுவதன் நன்மை என்னவென்றால், வெல்லத்தில் உள்ள இரும்பு மற்றும் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும். இது உங்கள் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். வெல்லம் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

என்ன பழங்களை சாப்பிடலாம்..?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், அதிக நார்ச்சத்து பெற ஜூஸ் போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக பழங்களாக எடுத்துக்கொள்ளலாம். சில குறைந்த கார்ப் பழங்களான அவகெடா, ப்ளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ், பீச் மற்றும் தர்பூசணி போன்ற பழங்களை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது தவிர வெள்ளரிகள், கீரைகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் கீரை ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். தினசரி உணவில் மறக்காமல் போதுமை, ஓட்ஸ் போன்றவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்கோப்பில் வைக்க உதவி செய்யும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News