5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது முழங்கால்களை பாதிக்குமா..? இது உண்மையா..?

Drinking Water: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது முழங்கால்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அதாவது, நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது முழங்கால்களில் நீர் நேரடியாக குவிய தொடங்குகிறது. ஒது பின்னர் மூட்டு வலியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Health Tips: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது முழங்கால்களை பாதிக்குமா..? இது உண்மையா..?
மூட்டு வலி (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2024 15:51 PM

உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள, ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது மட்டுமின்றி, தினமும் 3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. இது எல்லா வயதினருக்கும் முக்கியமானது. சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தண்ணீரை சரியான முறையில் குடிப்பதும் முக்கியமானது. எப்போது தண்ணீரை அமர்ந்து மெதுவாக தண்ணீர் குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், சமீப காலமாக சமூக வலைதளங்களில் தண்ணீர் குடிக்கும் முறை குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது, நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல பாதிப்புகளை தரும் என்றும், முழங்காலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று, நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்காலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Kitchen Tips: மாவுகள் கெட்டு போகாமல் இருக்க வேண்டுமா? இந்த எளிய குறிப்புகள் உதவும்!

சமூக வலைதளங்களில் பரவும் செய்தி என்ன..? அது உண்மையா..?

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது முழங்கால்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அதாவது, நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது முழங்கால்களில் நீர் நேரடியாக குவிய தொடங்குகிறது. ஒது பின்னர் மூட்டு வலியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து இது சிறுநீரகத்தையும் பாதிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் உண்மை இல்லை.

உண்மையான விவரம்:

நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதால் முழங்கால்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. மூட்டு வலி என்பது குருத்தெலும்பு, தசைநார் அல்லது எலும்பு போன்ற மூட்டுகளின் பாகங்கள் தேய்ந்து போக தொடங்கும்போது அல்லது சில காரணங்களால் மூட்டுகளுக்கு சேதத்தை ஏற்படும். இதன் காரணமாக மட்டுமே முழங்கால் பாதிப்பு ஏற்படும்.

மேலும், மூட்டு பிரச்சனைகளுக்கு மிகவும் பொதுவான காரணம் கீல்வாதம் ஆகும். இது எலும்புகளை ஆதரிக்கும் பாதுகாப்பு குருத்தெலும்புகளின் தேய்மானத்தால் ஏற்படும்.

உட்கார்ந்து தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

உட்கார்ந்து தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. உட்கார்ந்து தண்ணீர் குடிக்கும்போது செரிமானம் மேம்படும் என்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி செய்யும். அதேநேரத்தில், நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடியுங்கள்:

  • காலையில் எழுந்ததும் தண்ணீர் அருந்தும்போது உடலில் புதிய செல்கள் உருவாகும். இது தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. மூட்டுவலி, கால் வலி, கை வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  • உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை தினமும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, எடையைக் குறைக்க உதவி செய்யும்.
  • அதிகாலையில் எழுந்து தண்ணீர் குடித்து வந்தால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள், தொண்டைப்புண் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எனவே தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  • நவீன வாழ்க்கை முறையில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு தண்ணீர் குடிப்பதே சிறந்த தீர்வு. அந்தவகையில், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்
  • உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தண்ணீர் குடிப்பது ஒரு நல்ல பழக்கம். தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள அனைத்து நச்சுப் பொருட்களையும் எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

ALSO READ: Health Tips: உள்ளாடை இல்லாமல் இரவில் தூங்கி பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News