Eating Rice: சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..? உண்மையான காரணம் இதுதான்..!
Health Tips: சாதம் சாப்பிடுவதும் நம் உடலுக்கு பல வகைகளில் நன்மையை தரும். அரிசியை சரியான முறையில் உட்கொண்டால் உடல் எடை கூடாது. மாறாக, மூன்று வேளையும் சாதத்தை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். சாதம் உண்பதால் உடலில் ஆற்றல் நிலை சீராகும், இருதய அமைப்பிலும் நல்ல விளைவை தரும்.
அரிசி இந்தியாவில் காணப்படும் முக்கியமான தானிய வகையாகும். இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், ராஜஸ்தான் முதல் அஸ்ஸாம் வரையிலும் எல்லா இடங்களிலும் அரிசி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சிலர் எவ்வளவுதான் உணவுகளை எடுத்துக்கொண்டாலும், சிறிதளவு சோறு போட்டு சாப்பிட்டால்தான் வயிறு நிரம்பும் என்று சொல்வார்கள். ஆனால் சாதம் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்றும், இதனை உண்பதால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது என்றும் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.
இதன் காரணமாகவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். இந்தநிலையில், அரிசி சாப்பிடுவது உண்மையில் உடல் பருமனை அதிகரிக்குமா? இல்லையா? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!
சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா..?
அரிசியில் முக்கியமாக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை தருகிறது. சாதத்தில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக சாதம் எடுத்துக்கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அப்படி எந்தவொரு உண்மையும் கிடையாது. முதல் சோறு என்று அழைக்கப்படும் சாதம் எடை அதிகரிப்பை ஏற்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, நீங்கள் சாதத்தை சாப்பிடும் அளவு மற்றும் முறையை பொறுத்தே, உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
சாதத்தில் அதிகப்படியான மாவுச்சத்து உள்ளது. இது நீங்கள் உறிஞ்சும் உணவில் இருந்து கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக, உங்கள் உடலில் அதிக கலோரிகள் சேமிக்கப்படுவதில்லை. இதனால், உங்களுக்கு எடை அதிகரிக்காது.
சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
சாதம் சாப்பிடுவதும் நம் உடலுக்கு பல வகைகளில் நன்மையை தரும். அரிசியை சரியான முறையில் உட்கொண்டால் உடல் எடை கூடாது. மாறாக, மூன்று வேளையும் சாதத்தை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். சாதம் உண்பதால் உடலில் ஆற்றல் நிலை சீராகும், இருதய அமைப்பிலும் நல்ல விளைவை தரும். மேலும், சாதம் சாப்பிடுவது எலும்புகளுக்கும் நன்மை தரும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் தினம் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்றால், குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. இவ்வாறு செய்வதால் உடல் நலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது, உடல் எடையும் கூடாது.
உங்கள் உணவில் இருந்து அரிசியை நீக்கினால், உங்கள் முடி, தோல் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட தொடங்கும். அதனால் சாதத்தை உணவில் இருந்து விலக்கக்கூடாது.
சாதம் எவ்வளவு சாப்பிட வேண்டும்..?
சாதம் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. 25 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதுடையவர்கள் ஒரு வேளை 1 முதல் 1.5 தட்டு அளவிற்கு சாதம் சாப்பிடலாம்.
சாதத்துடன் சாப்பிட வேண்டிய உணவுகள்:
தினசரி சாதம் எடுத்துக்கொள்ளும் நபர்களாக இருந்தால் சாதத்துடன், காய்கறிகள், தயிர் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். இவை உங்கள் உணவை சீரானதாக மாற்றும். அதே நேரத்தில், சிக்கன் ப்ரைட் ரைஸ் அல்லது பிரியாணி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் எடையை அதிகரிக்க செய்யும்.
ALSO READ: Heart Attack: மாரடைப்பு வரும் முன் தோன்றும் அறிகுறிகள்.. இதை புறக்கணிக்காதீர்கள்!
சாதத்தை எந்த நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது..?
மதிய உணவில் சாதத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில், உடலில் ஜீரண சக்தி அதிகமாக இருக்கும் காரணத்தினால், சாதத்தில் இருந்து கிடைக்கும் சக்தி நம் உடலில் ஆற்றலாக மாறும். இது நாள் முழுவதும் நமக்கு சக்தியை தரும். இரவில் சாதம் எடுத்து கொள்ளும் சூழல் ஏற்பட்டால், குறைந்த அளவில் எடுத்து கொள்வது நல்லது. இரவு நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால் சாதம் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)