Strawberry: இந்த சிவப்பு நிற பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..? - Tamil News | can people living with diabetes eat strawberries; health tips in tamil | TV9 Tamil

Strawberry: இந்த சிவப்பு நிற பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..?

Published: 

02 Nov 2024 18:02 PM

Health Tips: ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசயனின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன. ஸ்ட்ராபெர்ரியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும். ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவைகள் இருந்தாலும், குறைந்த அளவு கிளைசெமிக் உள்ளது.

1 / 6ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பெர்ரி வகையை சேர்ந்த ஒரு பழமாகும். இனிப்பும், புளிப்புச் சுவையும் கொண்ட ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிட்டால், பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், சர்க்கரை நோயாளிகள் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாமா..? என்ற கேள்வி எழுந்தால் அதற்கான பதில் இங்கே..

2 / 6

ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசயனின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன. ஸ்ட்ராபெர்ரியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும்.

3 / 6

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவைகள் இருந்தாலும், குறைந்த அளவு கிளைசெமிக் உள்ளது. இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயராமல் தடுக்க உதவி செய்யும். இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி, கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

4 / 6

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு உடல் பருமனும் முக்கிய காரணம். ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் இவற்றில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்கி எடையை கட்டுப்படுத்த உதவி செய்யும்.

5 / 6

சர்க்கரை நோய் இதய பிரச்சனைகளில் அபாயத்தை அதிகரிக்குன். அந்தவகையில், ட்ராபெர்ரி கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் சீரான வகையில் ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொள்ளலாம்.

6 / 6

ஸ்ட்ராபெர்ரி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், இது வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, பல் பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம். குறிப்பாக வாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம். ஸ்ட்ராபெர்ரி பழம் முறையான முறையில் எடுத்து டயட்டைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் முற்றிலும் மறைந்துவிடும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!