Health Tips: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா..? அப்போ! எப்போது குடிக்க வேண்டும்..? - Tamil News | Can you drink water before or after eating full details | TV9 Tamil

Health Tips: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா..? அப்போ! எப்போது குடிக்க வேண்டும்..?

Updated On: 

26 Jul 2024 13:45 PM

Drinking Water: சில நேரங்களில் நாம் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, பெரும்பாலான மக்கள் சாப்பிடும் போது காரமாக சாப்பிட்டால் தண்ணீர் குடிக்கிறார்கள். சிலர் சாப்பிட்டு முடித்த பிறகு மட்டுமே தண்ணீர் குடிக்கிறார்கள். இந்தநிலையில், சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் எப்போது தண்ணீர் குடிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Health Tips: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா..? அப்போ! எப்போது குடிக்க வேண்டும்..?

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்..? (Image Credit source: gettyimages)

Follow Us On

தண்ணீர்: தண்ணீர் குடிப்பது உங்களின் தாகத்தினை தீர்ப்பதற்கு மட்டுமல்ல, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது. நமது உடலில் மொத்த எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் மட்டுமே உள்ளது. தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள பல சத்துக்களின் குறைப்பாட்டை பூர்த்தி செய்வதுடன், வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றுகிறது. அத்தகைய சூழலில், உடலில் சரியான அளவு தண்ணீரை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் சில நேரங்களில் நாம் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, பெரும்பாலான மக்கள் சாப்பிடும் போது காரமாக சாப்பிட்டால் தண்ணீர் குடிக்கிறார்கள். சிலர் சாப்பிட்டு முடித்த பிறகு மட்டுமே தண்ணீர் குடிக்கிறார்கள். இந்தநிலையில், சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் எப்போது தண்ணீர் குடிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Also read: Health tips: வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்.. இந்த பிரச்சனைகளை தரும்!

சிலருக்கு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். சிலருக்கு சாப்பிடும்போது ஒவ்வொரு வாய்க்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இதை செய்வதால், ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் உணவுடன் தண்ணீர் குடிக்கும்போது, உணவுக்கு பின் தண்ணீர் குடிப்பதற்கும் மறுக்கப்படுகிறது.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. சில நேரங்களில் உணவில் காரம் அதிகமாக இருக்கும்போது எடுத்துக்கொள்ளலாமே தவிர, மற்றப்படி உணவின் போது நீர் எடுத்துக்கொள்ள கூடாது. உணவுடன் தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் செரிமான அமைப்பு படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகிறது. இதன் காரணமாக உங்களுக்கு வாயு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவுடன் தண்ணீர் குடிப்பதால், உணவில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து சிறுநீருடன் வெளியேறும். இதன் காரணமாக, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கிறது.

மேலும், ஜூஸ் மற்றும் பிற பானங்கள் போன்றவற்றையும் உணவுடன் சேர்த்து குடிப்பது நல்லதல்ல. இது ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமல்லம் உடல் எடையை அதிகரிக்கவும் செய்கிறது.

உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால், செரிக்கப்படாத அதிகப்படியான உணவானது உங்கள் உடலில் கொழுப்பாக மாற தொடங்குகிறது. மேலும், இது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு முன் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்..?

உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துக்கிறார்கள். இது பசியைக் குறைப்பதோடு, அதிகமாகச் சாப்பிடுவதையும் தடுக்கிறது. மறுபுறம், உணவு உண்ணும் முன் தண்ணீர் குடித்தால், அது உங்கள் உடலை பலவீனப்படுத்துகிறது. அதேபோல், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது சிறந்தது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது உணவை ஜூரணிக்க உதவுகிறது.

Also read: Health Tips: தொப்பை சர்ரென குறையும்.. இந்த 6 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version