5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cardamom Milk Benefits: ஏலக்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா..? உடலுக்கு பல ஆரோக்கியங்களை தரும்!

Health Tips: மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் நம்மில் பலர் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். அப்படிப்பட்டவர்கள் பாலுடன் ஏலக்காய் பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் காலை மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஏலக்காய் பால் உட்கொள்வது பல நன்மைகளை வழங்குகிறது. இந்தநிலையில், ஏலக்காய் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Cardamom Milk Benefits: ஏலக்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா..? உடலுக்கு பல ஆரோக்கியங்களை தரும்!
கோப்பு புகைப்படம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 29 Jul 2024 13:58 PM

ஏலக்காய் பாலின் நன்மைகள்: உணவின் சுவையை அதிகரிக்க, வாய் புத்துணர்ச்சியாக நீங்கள் பயன்படுத்தும் ஏலக்காய், உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருகிறது. ஏலக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் பி6, புரதம், நார்ச்சத்து, ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. மேலும், பாலில் ஏலக்காய் அல்லது ஏலக்காய் பொடியை சேர்த்து சாப்பிடும்போது அதன் பலன் இரண்டு மடங்கு அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் நம்மில் பலர் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். அப்படிப்பட்டவர்கள் பாலுடன் ஏலக்காய் பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் காலை மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஏலக்காய் பால் உட்கொள்வது பல நன்மைகளை வழங்குகிறது. இந்தநிலையில், ஏலக்காய் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Also read: Health Tips: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா..? அப்போ! எப்போது குடிக்க வேண்டும்..?

எலும்புகள் வலுவடையும்:

ஏலக்காய் பால் தினமும் குடித்தால் எலும்புகள் வலுவடையும். ஏனெனில் பால் மற்றும் ஏலக்காய் இரண்டிலும் கால்சியம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே வயதானவர்கள் ஏலக்காய் கலந்த பாலை தினமும் குடிக்க மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

செரிமானம்:

ஏலக்காய் பால் உட்கொள்வது செரிமான அமைப்பை சீராக்க வைக்க உதவுகிறது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவி செய்வதன் மட்டுமின்றி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஏலக்காயில் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது, இதை தினமும் எடுத்துக் கொண்டால் செரிமானம் செய்வதுடன், வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஏலக்காய் பால். தினமும் ஏலக்காய சாப்பிட்டால், இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படாது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது இதய பிரச்சனைகளை தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

ஏலக்காயில் வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. மேலும் இது இருமல், சளி, தொண்டைப்புண் மற்றும் தொண்டை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது:

ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் மாங்கனீசும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதோடு உடலை நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கும்:

ஏலக்காய் பால் குடிப்பதால் புற்றுநோய் போன்ற நோய்களையும் தடுக்கலாம். புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க உதவும் அனைத்துப் பொருட்களும் இதில் உள்ளன. இருப்பினும், இதை புற்றுநோய் சிகிச்சையாக பயன்படுத்த முடியாது.

Also read: Pumpkin Seeds for Men: ஆண்கள் பூசணி விதைகளை சாப்பிட்டால் இந்த பிரச்சனை வராதாம்..

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News