Beauty Tips: முக அழகுக்காக இந்த பொருட்களை யூஸ் பண்றீங்களா..? உஷார்! பிரச்சனையை தரும்..
Grooming Tips: பெண்கள் அழகாக இருக்க விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கியும், பார்லர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான பணத்தை செலவும் செய்கிறார்கள். இது தவிர, வீட்டில் சில முறைகளையும் பயன்படுத்தி தங்கள் அழகை பராமரிக்கின்றனர். இவ்வாறு செய்வது சில நேரங்களில் பக்க விளைவுகளை முகத்தில் ஏற்படுத்தும். இந்தநிலையில், பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க சில தவறான விஷயங்களை செய்து பிரச்சனையாகிவிடுகிறது. இது மாதிரியான தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தால் இது உங்கள் முகத்தை பளபளக்க செய்யும்.
பெண்களும் சரி, ஆண்களும் சரி அனைவரும் தங்கள் முகம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விடும்புகிறார்கள். இருப்பினும் ஆண்களோடு பெண்களை ஒப்பிடும்போது பெண்களே தங்கள் சருமத்தின்மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். பெண்கள் அழகாக இருக்க விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கியும், பார்லர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான பணத்தை செலவும் செய்கிறார்கள். இது தவிர, வீட்டில் சில முறைகளையும் பயன்படுத்தி தங்கள் அழகை பராமரிக்கின்றனர். இவ்வாறு செய்வது சில நேரங்களில் பக்க விளைவுகளை முகத்தில் ஏற்படுத்தும். இந்தநிலையில், பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க சில தவறான விஷயங்களை செய்து பிரச்சனையாகிவிடுகிறது. இது மாதிரியான தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தால் இது உங்கள் முகத்தை பளபளக்க செய்யும்.
ALSO READ: Health Tips: கர்ப்ப காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதா..? இது குழந்தைக்கு தீங்கு தரும்!
தக்காளி:
தக்காளி சாற்றை முகத்தில் தடவுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படும் என்று சில சொல்வார்கள். தக்காளி சாற்றில் உள்ள ப்ளீச்சிங் சருமத்தில் சுத்தப்படுத்தி புதிய தோற்றத்தை அளிக்க உதவி செய்யும். ஆனால், நீங்கள் தக்காளி சாற்றை நேரசியாக முகத்தில் பயன்படுத்தும்போது, தக்காளி சாற்றில் உள்ள அமிலம் உங்கள் சருமத்தின் pH அளவை கெடுத்து, வறட்சியையும் எரிச்சலை தரலாம். எனவே, தக்காளியுடன் சில கலவைகளை பயன்படுத்தி முகத்தில் பயன்படுத்துவது நன்மை தரும்.
சமையல் சோடா:
முகத்தில் உள்ள கறைகளை போக்க சிலர் பேக்கிங் சோடாவை ஸ்கர்ப்பாக பயன்படுத்துகின்றனர். இப்படி செய்வது சருமத்தின் இயற்கையாக வெளியேறும் எண்ணெயை குறைத்து முகத்தின் உணர்திறனை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக உங்கள் வறண்டு சேதமடைய தொடங்கும்.
எலுமிச்சை சாறு:
தக்காளி போன்று எலுமிச்சை சாறும் ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதன் சாற்றை நேரடியாக முகத்தில் தடவுவதன்மூலம், இது உங்கள் சருமத்தில் pH அளவை கெடுத்து, UV கதிர்களுக்கு அதிக உணர்திறனை ஏற்படுத்தும்ம். இதன் காரணமாக சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்கள் உங்கள் முகத்தை நேரசியாக தாக்கி வறண்ட சருமத்தை உருவாக்க செய்யும்.
பல் துலக்கும் பேஸ்ட்:
முகத்தில் பரு வரும்போது சிலர் பல் துலக்கும் பேஸ்டை நேரடியாக பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது தோல் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். பல் துலக்கும் பேஸ்ட்டில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெயை நீக்கி நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக முகப்பரு பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.
சர்க்கரை:
வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலறையில் இருக்கும் சர்க்கரையை தங்கள் முக அழகுக்காக பயன்படுத்துகிறார்கள். இதை செய்யும்போது, சில சமயங்களில் சர்க்கரை துகள்கள் உங்கள் சருமத்தை கீறி சேதப்படுத்தலாம். இதன் காரணமாக சருமத்தின் உணர்திறன் மேலும் அதிகரிக்க செய்யும்.
மாய்ஸ்சரைசர்:
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இயற்கையாகபே முகத்தில் எண்ணெய் வெளியேறும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் முகத்தில் மாய்ஸ்சரைசர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி உங்கள் முகத்தை கழுவி, மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். உங்கள் முகம் ஈரப்பதமாக இல்லாதபோதுதான் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சன்ஸ்கிரீன்:
சன்ஸ்கிரீன் லோஷன் அல்லது க்ரீம் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்கிறது. சூரியன் வெளியே வராமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தால், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று பலர் நம்புகிறார்கள். அவ்வாறு செய்வது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, சன் ஸ்கின் லோஷனை உங்கள் தினசரி வாழ்க்கையில் அதாவது. வானிலை குளிராக இருந்தாலும் சரி அல்லது வெப்பமாக இருந்தாலும் சரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
ALSO READ: Food Recipes: சுவையான ரசமலாய் செய்ய ரெடியா..? பேமிலிக்கு இது கண்டிப்பா பிடிக்கும்!
ஆர்கானிக் பொருட்கள்:
இயற்கையான ஆர்கானிக் பொருட்கள் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்றும், எந்த ஆபத்தும் இல்லாமல் சருமத்தில் பூசலாம் என்றும் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், உங்கள் முகத்தில் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்தும்போது கவனிப்பது முக்கியம்.
எந்தவொரு ஆர்கானிக் பொருளையும் வாங்கும் போது, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கண்டிப்பாக படித்து பார்த்து, இவை உங்கள் சருமத்திற்கு ஏற்றதா இல்லையா என்பதை பார்த்து பயன்படுத்துங்கள்.