Carrot Benefits: கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. சரும பாதுகாப்பு முதல் புற்று நோய் எதிர்ப்பு வரை!
Health Tips: கேரட்டை சமைப்பதை விட பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கேரட் நல்லது என்று கூறப்படுகிறது. மேலும், கேரட் சாப்பிடுவதன்மூலம் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கவும் முடியும்.
கேரட் நன்மைகள்: கேரட் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில், உடலுக்கு தேவையான பல வகையான சத்துகள் உள்ளது. கேரட்டில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, பொட்டாசியம், கால்சியம் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் தோல் தொடர்பான பிரச்சனைகளும் குறையும். கேரட்டை சமைப்பதை விட பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கேரட் நல்லது என்று கூறப்படுகிறது. மேலும், கேரட் சாப்பிடுவதன்மூலம் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கவும் முடியும். அந்த வகையில், கேரட் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Health Tips: உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த குறைபாடே அதற்கு காரணம்..!
கண் பார்வை:
கேரட்டில் வைட்டமின்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ அளவை அதிகரித்து கண்பார்வையை மேம்படுத்துகிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளுக்கு உதவுவது மட்டுமின்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் கேரட் அல்லது கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரத்த சோகை:
பல இளம் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் இரத்த சோகையும் ஒன்று. அதாவது உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாதது ஆகும். இந்த பிரச்சனை பிரசவ காலத்தில் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு கூட வழிவகுக்கும். எனவே, பெண்கள் இரத்த சோகை பிரச்சனை தடுக்க கேரட்டை எடுத்துக் கொள்ளலாம். கேரட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
புற்றுநோய் எதிர்ப்பு:
கேரட்டில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி அனைத்து வகையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டுகள் மற்றும் ஆந்தோசயினின்கள் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு இந்த நோயின் அபாயத்தை குறைக்கிறது.
செரிமானம்:
கேரட்டை உட்கொள்வது செரிமான அமைப்பு சரியாக செயல்படுத்த உதவி செய்யும். இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல், அஜீரணம், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை போன்ற அனைத்து வகையான வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும்.
ALSO READ: Health Tips: ஓடிய பிறகு இந்த தவறுகளை செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!
எலும்பு பராமரிப்பு:
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பானது எதிர்பாராத மற்றும் திடீர் முறிவுகளுக்கு ஆளாகும் நிலையாகும். ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை நீக்குவதற்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் கே, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கேரட்டின் மூலம் கிடைக்கின்றன. இந்த சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அவற்றின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)