Cashew Nuts Benefits: தினசரி ஒரு கையளவு முந்திரி போதும்.. உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும்!

Health Tips: தினமும் சிறிது அளவிலான முந்திரி போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், பல வகையாக நோய்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முந்திரி உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே முந்திரி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளை கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

Cashew Nuts Benefits: தினசரி ஒரு கையளவு முந்திரி போதும்.. உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும்!

முந்திரி பருப்புகள்

Published: 

22 Aug 2024 15:25 PM

முந்திரியின் நன்மைகள்: முந்திரி பருப்பு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதிகளவிலான ஊட்டச்சத்துகள் இருப்பதால், இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. தினமும் சிறிது அளவிலான முந்திரி போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், பல வகையாக நோய்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முந்திரி உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே முந்திரி சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளை கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Bone Health Tips: சிறுவயதிலேயே எலும்பு பலவீன பிரச்சனையா..? இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!

28 கிராம் முந்திரியில் இருந்து தினசரி தேவைப்படும் புரதம் (5 கிராம்), நார்ச்சத்து (1 கிராம்), 20 சதவீதம் மெக்னீசியம் மற்றும் 15 சதவீதம் துத்தநாகம் ஆகியவை உடலுக்கு தருகிறது. முந்தியில் நல்ல கொழுப்புகள் நிறைய உள்ளன. இதன் காரணமாக, இது இதய நோய் அபாயங்களை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்கலாம்:

உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினசரி முந்திரியை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் 3-4 முந்திரி சாப்பிட்டால், இது எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. முந்திரி பருப்பு எடுத்து கொள்வதன்மூலம், உடல் பருமனை குறைக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோயை தடுக்கிறது:

முந்திரியில் அதிகளவில் ஆண்டி – ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் தடுகிறது. தினமும் முந்திரி சாப்பிடுவது புற்றுநோய் வராமல் தடுப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி சாப்பிடுவதால் புரோஸ்டேட் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களில் அபாயம் குறைகிறது.

கண்களுக்கு நல்லது:

கண் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ இருப்பது அவசியம். முந்திரியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் கண்பார்வையை பராமரிக்க உதவுகிறது. பார்வை மங்கலாக இருப்போர் தினசரி உணவில் 5 முதல் 6 முழு முந்திரிகளை எடுத்துக்கொள்ளலாம்.

டெஸ்டோஸ்டிரோன் அளவு:

முந்திரியில் உள்ள செலினியம் ஆண் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. முந்திரியை உட்கொள்ளும் ஆண்களுக்கு முந்திரி சாப்பிடாதவர்களை விட டெஸ்டோஸ்டிரோன் அளவு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்கள் காலை மற்றும் மாலை சிற்றுண்டிக்கு 7 முதல் 10 முந்திரி சாப்பிட வேண்டும். ஆனால், அதற்குமேல் எடுக்க கூடாது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்:

முந்திரி உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தினசரி குறைந்த அளவு முந்திரி எடுத்து கொள்வதன்மூலம் இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இரும்பு மற்றும் தாதுக்களின் அளவை கொடுக்கிறது.

ALSO READ: Mental Health Tips: பிஸியான வாழ்க்கையில் அதிகரிக்கும் மன அழுத்தம்.. எளிதாக போக்க சில வழிகள் இதோ!

கருவுறுதலுக்கு உதவுகிறது:

முந்திரி கருவுறுதலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள துத்தநாகம் ஆண்கள் மற்றும் பெண்கள் கருவுறுதலை அதிகரிக்க செய்கிறது. தினசரி உங்கள் உணவில் சிறிதளவு முந்தியை சேர்த்தால், ஆண்களுக்கு விந்தணுவையும், பெண்களுக்கு கருவுறுதலையும் மேம்படுத்தும்.

உடலுக்கு தினமும் ஏன் புரதம் முக்கியம்..?
நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெறாமல் இருக்க காரணம்!
உலகின் பாரம்பரியமான சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!
சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!