Health Tips: சரியான டயட் இருந்தாலும் எடை கூடுகிறதா? இந்த 5 காரணங்களாக இருக்கலாம்..!

Weight Loss: ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ, உடலுக்கு ஓய்வு கிடைப்பதும் முக்கியம். உறங்கும் முறை சரியாக இல்லாவிட்டாலும், அதும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். அதாவது உங்களுக்கு சரியான தூக்கம் வராதபோது, அது ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இது உங்கள் அன்றாட வழக்கத்தை பாதிக்க செய்து, வளர்சிதை மாற்றம் மெதுவாக தொடங்கும்.

Health Tips: சரியான டயட் இருந்தாலும் எடை கூடுகிறதா? இந்த 5 காரணங்களாக இருக்கலாம்..!

உடல் எடை (Image: GETTY)

Published: 

11 Oct 2024 13:58 PM

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது பலருக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. பிஸியான வாழ்க்கை முறை, துரித உணவுகளை உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் பலருக்கு தங்கள் எடையை கட்டுப்படுத்த முடிவதில்லை. பெரும்பாலும் உடல் எடையை அதிகரிப்பதற்கு தவறான உணவு முறையே முக்கிய காரணமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு அதிகரிக்க தொடங்குகிறது. இந்தநிலையில், நீங்கள் சரியான முறையில் டயட் இருந்தாலும், உங்கள் எடை கூடுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Rohit Sharma: ஆஸ்திரேலியா தொடரை மிஸ் செய்யப்போகும் ரோஹித்.. அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?

எடை அதிகரிப்பு:

ஒருவரும் எடை அதிகரிப்பதால், அவரது உடல் வடிவமற்றதாக மாறிவிடுகிறது. இதனால், சில சமயங்களில் அவர்களின் தன்னம்பிக்கை குறைய தொடங்குகிறது. அதிக எடை காரணமாக சிறிய வேலைகளை செய்யும்போது கூட சோர்வடைவது, கொஞ்சம் நடந்தாலும் அல்லது படிக்கட்டுகளில் ஏறிய பிறகும் மூச்சுத் திணறல், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற பிரச்சனைகள் தோன்ற தொடங்குகின்றன. நீங்கள் உடல் எடையை குறைக்க டயட் இருந்தும், உங்களது எடையை குறைக்க முடியவில்லை என்றால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

உடல் பருமன் காரணமாக சர்க்கரை நோய், இதயம் தொடர்பான பிரச்சனைகள், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உடல் எடை அதிகரிப்பதை கவனிக்காமல் விடக்கூடாது. மாறாக சரியான நேரத்தில் அதைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

உடல் உழைப்பு இல்லாமை:

நீங்கள் சரியான டயட்டை பின்பற்றினாலும், உடல் உழைப்பு இல்லை என்றால் அதுவும் உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும். 8 மணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கே, இந்த பிரச்சனையை அடிக்கடி சந்திக்கின்றனர். நீங்களும் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும் என்றால், தினமும் காலை அல்லது மாலையில் லேசா உடற்பயிற்சி, ஹாகிங், வாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது. இது தவிர, அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தவும். அதேபோல், ஒரு நாளைக்கு 1 மணிநேரம் அல்லது 40 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் நடந்து கொடுப்பது நல்லது.

ஹார்மோன் சமநிலை:

நீங்கள் டயட்டை சரியான முறையில் பின்பற்றி உடற்பயிற்சியும் மேற்கொண்டும், உங்கள் எடையானது இன்னும் அதிகரிக்கிறது என்று கவலையா..? இதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வும் முக்கியமான காரணமாக இருக்கலாம். தைராய்டு அளவு சமநிலையற்றதாக இருந்தால், வளர்சிதை மாற்றம் குறையும். இதன் காரணமாக, உங்கள் எடை அதிகரிக்க தொடங்கும். இது தவிர, சில நேரங்களில் உடலில் இன்சுலின் அளவை பராமரிக்கவிட்டாலும், இந்த சர்க்கரை கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கத் தொடங்கி எடையை அதிகரிக்க செய்யும். மேலும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு கூட, உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

தூக்கம்:

ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ, உடலுக்கு ஓய்வு கிடைப்பதும் முக்கியம். உறங்கும் முறை சரியாக இல்லாவிட்டாலும், அதும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். அதாவது உங்களுக்கு சரியான தூக்கம் வராதபோது, அது ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இது உங்கள் அன்றாட வழக்கத்தை பாதிக்க செய்து, வளர்சிதை மாற்றம் மெதுவாக தொடங்கும். இது உடல் எடையை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியமான இருக்க இரவில் சரியான நேரத்தில் தூங்குவதையும், 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதையும், காலையில் சரியான நேரத்திற்கு எழுவதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

ALSO READ: Hardik Pandya Birthday: பிறப்பு முதல் விவாகரத்து வரை.. ஹர்திக் பாண்டியாவின் 30 ஆண்டுகால வாழ்க்கை!

மருந்துகள்:

உடல் எடையை அதிகரிக்க சில மருந்துகளும் காரணமாக இருக்கலாம். நீங்கள் சில உடல் நிலை காரணமாக மருந்து எடுத்துக் கொண்டால், இதன் காரணமாக உங்கள் எடை கூடும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரியான உணவு முறை எடுத்து கொள்வது நல்லது.

மரபணு:

காரணமே இல்லாமல் எடை அதிகரிப்பதற்கு மரபணும் ஒரு காரணமாக இருக்கலாம். மரபணு தலைமுறை தலைமுறையாக குழந்தைகளை பின் தொடரும். எனவே, மரபணு காரணமாக குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்க கூடாது எனில், சிறுவயது முதலே உணவு முதல் உடற்பயிற்சி செய்வது வரை எப்போதும் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!