குழந்தைகளின் ஆரோக்கியமும்.. டூத் பிரஷும்… இந்த விவரம் தெரியுமா? - Tamil News | | TV9 Tamil

குழந்தைகளின் ஆரோக்கியமும்.. டூத் பிரஷும்… இந்த விவரம் தெரியுமா?

Updated On: 

17 May 2024 07:48 AM

Change your child's toothbrush after every sickness: குழந்தைகளின் நோய்த்தொற்றுக்குப் பின்பு செய்யவேண்டியவை. குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது அவர்களுக்கான கவனிப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக நோய்வாய்ப்படும் போது அவர்களின் டூத் ப்ரஷ்ஷை கண்டிப்பாக மாற்றவேண்டும்

குழந்தைகளின் ஆரோக்கியமும்.. டூத் பிரஷும்... இந்த விவரம் தெரியுமா?

மாதிரி படம்

Follow Us On

பெற்றோர்களின் முக்கியமான வேலையே குழந்தைகளை கவனிப்பதுதான். மற்றதெல்லாம் அடுத்துதான். அதிலும் குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது அவர்களுக்கான கவனிப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக நோய்வாய்ப்படும் போது அவர்களின் டூத் ப்ரஷ்ஷை கண்டிப்பாக மாற்றவேண்டும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஏனெனில் நோய்வாய்ப்பட்ட பிறகு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் வேண்டுமல்லவா. அதனால்தான் ஒவ்வொரு நோயத்தொற்றுக்குப் பிறகும் கண்டிப்பாக டூத் ப்ரஷ்ஷை மாற்றியே ஆகவேண்டும்.

ஆய்வின் படி நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் டூத் பிரஷ்ஷானது பாக்டீரியா மற்றும் வைரசின் உற்பத்தி பகுதியாக மாறிவிடுகிறது என்றும், இது குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சளி,காய்ச்சல், தொண்டை அழற்சி மற்றும் இரைப்பை குடல் அழற்சி ஆகியவற்றால் பாதிக்கப்படும்போது கண்டிப்பாக டூத் ப்ரஷ்ஷை மாற்றிவிட வேண்டும். ஏனெனில் இவ்வகை தொற்றுகளின் போது கிருமிகளானது இரண்டு நாட்கள் வரை ப்ரஷ்ஷில் தங்கக்கூடும். எனவே மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

1. மறு தொற்றிலிருந்து பாதுகாக்க:

நோய்த்தொற்றிற்குப் பிறகு வைரஸ் மற்றும் பாக்டீரியா பிரஷ்ஷிலேயே தங்கிவிடும், மேலும் எத்தனை முறை கழுவினாலும் அது அழிய வாய்ப்பில்லை எனவே மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படக்கூடும்.

2. நோய் பரவுதலை தடுக்க:

நோயத்தொற்று உள்ளவரின் பிரஷ்ஷிற்கு அருகில் மற்றவர்களின் பிரஷ்ஷை வைக்கும் போது தொற்றானது எளிதில் பரவக்கூடும். எனவே பிரஷ்ஷை மாற்றிவிடுவது நோய் பரவதலைக் குறைக்கும்.

3. நாள்பட்ட பிரஷ்:

அதிக நாட்கள் பயன்படுத்தப்பட்ட பிரஷ்களினாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். ஏனெனில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உற்பத்தியாகி நோய்த்தொற்றை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி பிரஷ்ஷை மாற்றவேண்டும்.

Also read: உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்வதற்கு இதுதான் காரணம்!

4. டூத் ப்ரஷ்ஷை கையாளுதல் :

அமெரிக்க பல் சங்கமானது, குறைந்தது 3லிருந்து 4 மாதத்திற்கு ஒருமுறையாவது ப்ரஷ்ஷை மாற்ற வலியுறுத்துகிறது. இல்லையேல் அதற்கு முன்பே மாற்ற முயலலாம்.

5. பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க:

பற்களின் ஆரோக்கியமானது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானது. நல்ல சுத்தமான டூத் பிரஷ்ஷானது எல்லா வகை நோய்த்தோற்றிலிருந்தும் பாதுகாக்கவல்லது. எனவே அடிக்கடி டூத் பிரஷ்ஷை மாற்றுவது, நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version