5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

White Sugar: ஒரு மாசம் சர்க்கரையை விட்டு பாருங்க.. தோல் முதல் எடை வரை எல்லாம் மாறும்!

Avoid Sugar: வெள்ளைச் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஒரு ஆய்வில், ஒரு கிலோ சர்க்கரையில் கந்தகத்தின் அளவு சுமார் 50 முதல் 70 மி.கி ஆகும். இது சர்க்கரை நோய், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் வரை பிரச்சனைகளை கொடுக்கிறது. இந்தநிலையில், நீங்கள் ஒரு மாதம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை எடுத்துகொள்வதை நிறுத்தினால், உங்களது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இங்கே பார்க்கலாம்.

White Sugar: ஒரு மாசம் சர்க்கரையை விட்டு பாருங்க.. தோல் முதல் எடை வரை எல்லாம் மாறும்!
கோப்பு புகைப்படம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 27 Jul 2024 13:17 PM

வெள்ளை சர்க்கரை: இந்த உலகத்தில் பலர் வெள்ளை சர்க்கரைக்கு அடிமை என்றே சொல்லலாம். எந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இருந்தாலும் சரி, பண்டிகை நாளாக இருந்தாலும் சரி இனிப்புகள் இல்லாமல் இவை எதுவும் முழுமையடையாது. இந்த இனிப்புகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளைச் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஒரு ஆய்வில், ஒரு கிலோ சர்க்கரையில் கந்தகத்தின் அளவு சுமார் 50 முதல் 70 மி.கி ஆகும். இது சர்க்கரை நோய், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் வரை பிரச்சனைகளை கொடுக்கிறது. இந்தநிலையில், நீங்கள் ஒரு மாதம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை எடுத்துகொள்வதை நிறுத்தினால், உங்களது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இங்கே பார்க்கலாம்.

நம் உணவில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, உங்களது உணவில் முடிந்த அளவு சர்க்கரையை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

Also read: Blood Sugar: சர்க்கரை நோய்க்கு உட்கொள்ள வேண்டிய 5 பழங்களின் பட்டியல்..!

முதுமை மறையும்:

சர்க்கரையை எடுத்து கொள்ளும்போது உடலில் இருக்கும் கொலாஜன் புரோட்டீன்களில் சிக்கி கொள்கிறது. இதன் காரணமாக, தோலில் இருக்கும் கொலாஜன் புரதம் சிறிது சிறிதாக அழியும். கொலாஜன் புரதமே, சருமத்தை பாதுகாக்கும் உறுப்பாக செயல் படுகிறது. இதன் விளைவாக, உங்களுக்கு தோல் விரைவில் வயதாகி, சுருக்கங்கள் தோன்றும். ஒரு மாதம் அல்லது 15 நாட்கள் நீங்கள் முழுவதும் வெள்ளை சர்க்கரையை எடுத்துகொள்வதை நிறுத்தினால், தோலானது பழைய பொலிவை பெற்று, இறுக்கம் பெறும்.

ஆற்றல் அதிகரிக்கும்:

வெள்ளை சர்க்கரையில் அதிகபடியான கார்போஹைட்ரேட்டுகளால் ஆனது. இது உங்களது உடம்பில் மிக வேகமாக செரிமானமாகி இரத்துடன் கலந்து விடுகிறது. (இதன் காரணமாகவே, யாரேனும் ஒருவருக்கு மயக்கம் அல்லது தலை சுற்றல் ஏற்பட்டால் சர்க்கரையை தருவார்கள்.) சர்க்கரை மிக வேகமாக செரிமானம் ஆனவுடன், உடம்பில் உள்ள ஆற்றல் குறைகிறது. சர்க்கரையை சாப்பிடாமல், அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும்போது, உங்கள் ஆற்றல் நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.

உடல் எடை:

சர்க்கரை தினசரி எடுத்து கொள்வதால் உடல் எடை கூடும் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் சர்க்கரையை சாப்பிடும்போது, அது வயிற்றை சுற்றியுள்ள பகுதிகளில் படிந்துவிடுகிறது. இதனால் சர்க்கரை சிறுநீரகங்கள், கல்லீரல், இனப்பெருக்க உறுப்புகளிலும் படிந்து மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. மேலும், சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

Also read: Health Tips: தொப்பை சர்ரென குறையும்.. இந்த 6 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க!

மேலும் சில..

  • சர்க்கரையை உட்கொள்ளாமல் இருப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • சர்க்கரை இல்லாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் பல் மற்றும் ஈறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  • சர்க்கரையின் பயன்பாட்டை நிறுத்துவதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு குறைகிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News